புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

13 October 2020

புனித ஆரிலேக் ஜெரால்டு St. Gerald of Aurillacநினைவுத்திருநாள்: அக்டோபர் 13

இன்றைய புனிதர் : 
(13-10-2020)
புனித ஆரிலேக் ஜெரால்டு 
St. Gerald of Aurillac
நினைவுத்திருநாள்: அக்டோபர் 13
பிறப்பு : 855, அரிலேக், பிரான்ஸ்
இறப்பு : 13 அக்டோபர் 909, செனெசாக் Cenezac, பிரான்ஸ்
பாதுகாவல்: ஊனமுற்றோர், தனிமையில் வாழ்வோர்
இவர் ஓர் செல்வந்தராக வாழ்ந்துள்ளார் என்றும், துறவியாகாமலே, துறவியைப் போலவே தன் வாழ்நாள் முழுதும் வாழ்ந்துள்ளார் என்றும் கூறப்படுகின்றது. இவரது முகத்தில் பெரிய முகப்பரு ஒன்று காணப்பட்டது. நாளடைவில் அம்முகப்பருவால் அவர் பார்வையை இழந்தார். இவர் ஏழைகளின் மேல் இரக்கமும், கருணையும் கொண்டு வாழ்ந்தார். குருவாக வேண்டுமென்று மிகவும் ஆசைக்கொண்டார். ஆனால் தன் உடல்குறை காரணமாக அவ்வாசை நிறைவேறாமல் போனது. ஜெரால்டு தனது நில புலன்களை விற்று, அவற்றை திருத்தந்தையிடம் கொடுத்து, ஏழை மக்களுக்கு உதவும்படியாக கூறினார். விசுவாசம் ஒன்றே போதுமென்று இறை நம்பிக்கையில் தன் வாழ்வை வாழ்ந்தார். தனிப்பட்ட முறையில் இறைப்பணியை செய்தார். 
சிறப்பான முறையில் மறைப்பணியை ஆற்றினார். கற்பு என்ற வார்த்தைப்பாட்டை தானாகவே எடுத்துக்கொண்டார். திருமண வாழ்வில் ஈடுபடாமல், துறவி போலவே வாழ்ந்து மடங்களை நிறுவினார். அம்மடங்களில் இடைவிடாமல் வழிபாடு வைத்தும், ஆராதனை வைத்தும் செபித்தார். நாளடைவில் இவரின் மடமானது யாத்திரை தளமாக மாறியது. அதில் பெற்ற பணங்களைக் கொண்டு உரோம் நகர திருச்சபைக்கு உதவினார். பிறகு திருத்தந்தையின் ஒப்புதல் பெற்று தனது மடத்தை மதச்சார்பற்ற சபையாக (Secular) மாற்றினார். பலர் இம்மடத்தில் சேரவே, பல நாடுகளுக்கு சென்று மறைபரப்பு பணியை ஆற்றினார். இவர் வாழ்நாள் முழுவதுமே பக்தியையும், நேர்மையையும் தன்னகத்தே கொண்டு வாழ்ந்தார். 
செபம்:
என்றும் வாழ்பவரே! சாதி மதம் இனம் கடந்து பணிபுரியும் மதச்சார்பற்ற துறவற சபையினரை வழிநடத்தும். இவர்களை காணும் மக்கள் அத்துறவிகள் உம்மைக் காண வரம் அருளும். உம்மீது நம்பிக்கையின்றி வாழும் மக்களை உம்பால் ஈர்ந்து, நம்பிக்கையில் வளரவும், வாழவும் உறுதிப்படுத்தியருளும்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.

Saint of the Day : (13-10-2020)

Saint Gerald of Aurillac

Only a little is known of the life of Saint Gerald of Aurillac, owing to the times in which he lived in the late 9th and early 10th centuries. Only one written record of his life exists and no primary sources are known.

The only known reference to him is via a book written by Odo of Cluny who lived from 879-942 and who never met Gerald. Odo however wrote that he did extensive research into Gerald's life and concluded that he was in fact, a saint.

During the course of his investigation into Gerald's life, Odo confessed that there were many reasons to doubt Gerald's sainthood. Chief among them was that Gerald was not a member of an established order of clergy, but rather lived his life as a wealthy, lay noble.

Gerald was known for being chronically ill throughout his life, possibly suffering from severe acne which left his face scarred and he became blind in his later years.

Despite these physical concerns, Gerald was regarded as a kind and merciful noble, showing mercy to convicts and kindness to the poor. His desire was to become a monk, however his noble obligations made such a transition difficult.

Motivated by faith, Gerald sought to donate his lands to the Pope, but was dissuaded by his friend, Bishop Gausbert of Rodez, who persuaded him that he could do the most good by living a pious life in private and serving the needs of his people in public. Gerald did so.

Gerald shaved a small spot on his head as well as his beard, and concealed his private devotion to the Church so that he could retain public credibility and authority. During his time, Papal authority was waning and secular forces conspired to consolidate power away from the lesser nobility.

Gerald also took a private vow of chastity. He never married and produced no children. He spent considerable time in daily, devotional prayer.

Eventually, Gerald was able to make a pilgrimage to Rome and donate some of his lands to the Church. He also established a church and a monastery on his lands, which he deliberately established in such a way as to make the monastery independent of all control except Rome's.

Gerald was a model noble, bridging the gap between religious virtue and secular authority. He showed others that it is possible to wield power and wealth while living a pious and righteous life. The skeptical Odo eventually concluded that Gerald had in fact, become a saint upon his death.

Born : 
855 in Aurillac, France

Died : 
 909 at Cenezac, France
• buried in his abbey in Aurillac, France

Patronage : 
bachelors
• counts
• disabled, handicapped of physically challenged people
• Aurillac, France
• Upper Auvergne, France

---JDH---Jesus the Divine Healer---

No comments:

Post a Comment