புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

20 October 2020

✠ புனிதர் மரியா பெர்டில்லா போஸ்கார்டின் ✠(St. Maria Bertilla Boscardin)

† இன்றைய புனிதர் †
(அக்டோபர் 20)

✠ புனிதர் மரியா பெர்டில்லா போஸ்கார்டின் ✠
(St. Maria Bertilla Boscardin)

அருட்சகோதரி மற்றும் செவிலியர்:
(Nun and Nurse)
பிறப்பு: அக்டோபர் 6, 1888
பிரெண்டோலா, வெனேடோ, இத்தாலி
(Brendola, Veneto, Italy)

இறப்பு: அக்டோபர் 20, 1922 (வயது 34)
ட்ரெவிஸோ, இத்தாலி
(Treviso, Italy)

ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)

முக்திபேறு பட்டம்: ஜூன் 8, 1952
திருத்தந்தை பன்னிரெண்டாம் பயஸ்
(Pope Pius XII)

புனிதர் பட்டம்: மே 11, 1961
திருத்தந்தை இருபத்துமூன்றாம் ஜான்
(Pope John XXIII)

முக்கிய திருத்தலம்:
விசென்ஸா, வெனடொ, இத்தாலி
(Vicenza, Veneto, Italy)

நினைவுத் திருநாள்: அக்டோபர் 20

புனிதர் மரியா பெர்டில்லா போஸ்கார்டின், முதலாம் உலகப் போரின்போது, விமானப்படை தாக்குதல்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், நோயுற்ற சிறார்களுக்கும் தன்னலமற்ற சேவையாற்றுவதில் உன்னத முத்திரை பொறித்த இத்தாலி நாட்டு கத்தோலிக்க அருட்சகோதரியும் செவிலியருமாவார். பின்னாளில், இவர் ரோமன் கத்தோலிக்க திருச்சபையினால் புனிதராக அருட்பொழிவு செய்விக்கப்பட்டு, கௌரவிக்கப்பட்டார்.

ஆரம்ப வாழ்க்கை:
“அன்னா ஃபிரான்செஸ்கா போஸ்கார்டின்” (Anna Francesca Boscardin) எனும் இயற்பெயர் கொண்ட இவர், இத்தாலி நாட்டின் “வெனேடோ” (Veneto) பிராந்தியத்தின் “பிரெண்டோலா” (Brendola) எனும் நகரில் பிறந்தவர். இவரது பெற்றோர் விவசாய குடும்பத்தினைச் சேர்ந்தவர்கள் ஆவர். இவரது தந்தையான “ஆன்ஜெலோ போஸ்கார்டின்” (Angelo Boscardin), பின்னாளில் தமது மகள் மரியா பெர்டில்லா’வின் முக்திபேறு பட்டமளிக்கும் முன்னேற்பாட்டு செயல்முறை நடவடிக்கைகளின்போது, தாம் ஒரு பொறாமை குணமுள்ளவரென்றும், அடிக்கடி மது அருந்திவிட்டு, மகளை அடிக்கும் வன்முறையாளரென்றும் சாட்சியமளித்தார்.

குழந்தைப் பருவத்திலேயே குடும்பத்திற்காக வயல்வெளிகளில் வேலை செய்ய வேண்டியிருந்த காரணத்தால், தொடர்ந்து பள்ளிக்கு செல்ல இயலாதவராய் இருந்தார். பள்ளிக்கு சென்ற காலத்தில் கூட, அருகாமையிலுள்ள ஒரு வீட்டின் பணிப்பெண்ணாக பணி புரிந்தார். அவரால் குறிப்பிட்ட அளவு திறமைகளை காட்ட இயலவில்லை. குறிப்பாக, அவர் ஒரு புத்திசாலி பெண் இல்லை என்று கருதப்பட்டார். மேலும், பெரும்பாலும் அவர் பிறரின் நகைச்சுவையின் இலக்காக இருந்தார். இவையுள்ளிட்ட இவரது மந்தமான தன்மைக்காக, உள்ளூர் மதகுரு, இவரை வாத்து என்று கிண்டல் வார்த்தைகளால் அழைப்பார்.

அக்காலத்தில், பொதுவாக புதுநன்மை அருட்சாதனம் வாங்குவதற்கான வயது பன்னிரெண்டாகும். ஆனா இவர் தமது எட்டு வயதிலேயே புதுநன்மை அருட்சாதனம் வாங்க அனுமதிக்கப்பட்டார். இவர் தமது பங்கு மக்களின் “மரியாளின் குழந்தைகள் சங்கம்” என்னும் அமைப்பில் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தார். மரியா பெர்டில்லாவின் பங்குத்தந்தை இவருக்கு மறைக்கல்வி புத்தகமொன்றினை (Catechism) பரிசாக இவருக்கு அளித்திருந்தார். இவர் மரித்தபோது, அவர் அணிந்திருந்த துறவற சீருடைப் பையில் அப்புத்தகம் இருந்தது.

விசென்ஸா (Vicenza):
இவரது வழக்கமான மந்தத் தன்மை காரணமாக இவர் சேருவதற்காக விண்ணப்பித்திருந்த துறவற சபை ஒன்று இவரை நிராகரித்தது. பின்னர், 1904ம் ஆண்டு, விசென்ஸா நகரின் “தூய இருதயத்தின் மகள்கள்” (Daughters of the Sacred Heart) அமைப்பின் “புனித டோரதி’யின் ஆசிரியைகளின்” (Teachers of Saint Dorothy) உறுப்பினராக மரியா பெர்டில்லா ஏற்றுக்கொள்ளப்பட்டார். அங்கே வைத்துதான் “மரியா பெர்டில்லா” எனும் பெயரை ஏற்றுக்கொண்டார்.

தம்மைப்பற்றிய முந்தைய விமர்சனங்களை ஏற்கனவே மனதிற்குள் உள்வாங்கியிருந்த பெர்டில்லா, “புகுநிலை துறவியரின் தலைவியிடம்” (Novice-mistress), “என்னால் எதையும் செய்ய முடியாது; நான் எதற்கும் லாயக்கில்லாத பெண்; நான் ஒரு வாத்து; எனக்கு கற்பியுங்கள்; நான் ஒரு புனிதையாக வேண்டும்.” என்று அடிக்கடி சொல்வார். பெர்டில்லா, அந்த துறவு மடத்தில், ஒரு சமையலறை பணிப்பெண்ணாகவும், துணி துவைக்கும் பணிப்பெண்ணாகவும் மூன்று வருடங்கள் பணியாற்றினார்.

ட்ரெவிஸோ (Treviso) :
பின்னர், ட்ரெவிஸோ நகரிலுள்ள, அவர்களது சபையின் கீழுள்ள நகரசபை மருத்துவமனையில் செவிலியர் கல்வி கற்பதற்காக பெர்டில்லா அனுப்பப்பட்டார். பயிற்சிக் காலத்திலேயே ஒருமுறை இவர் சமையலறை பணிக்கு அனுப்பப்பட்டார். எப்படியும் பயிற்சியை முடித்த பெர்டில்லா, மருத்துவமனையின் சிறுவர்கள் வார்டில், “டிப்தீரியா” (Diphtheria) எனப்படும் தொண்டை அழற்சி நோய் பாதித்த நோயாளிகளுக்கு சேவை செய்ய அனுப்பப்பட்டார். “கேபர்ட்டோ” போரின் (Battle of Caporetto) பேரழிவினைத் தொடர்ந்து, ட்ரெவிஸோ (Treviso) நகரம் விமான தாக்குதலுக்கு உள்ளானபோது, அம்மருத்துவமனை இராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழே வந்தது. மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டிருந்த நோயாளிகளுக்கு பெர்டில்லா ஆற்றிய நிகரற்ற சேவை இராணுவத்தால் கவனிக்கப்பட்டு வந்தது.

பெர்டில்லாவின் இத்தகைய அர்ப்பணிப்புமிக்க சேவைகள், உள்ளூரிலுள்ள ஒரு இராணுவ மருத்துவமனை நிர்வாகத்தின் கவனத்தை ஈர்த்தது. எப்படியும் அருட்சகோதரி பெர்டில்லாவின் சேவையை பாராட்ட மனமில்லாத அவருக்கு மேலுள்ள அருட்சகோதரியர், அவரை மீண்டும் சலவைப் பணிக்கு அனுப்பினார்கள். தொடர்ந்து நான்கு மாதங்கள் அதே சலவைப் பணியில் இருந்த பெர்டில்லா, அவரது தலைமை சகோதரியால் அங்கிருந்து மாற்றப்பட்டு, மருத்துவமனையின் குழந்தைகள் தனிமை வார்டுக்கு மாற்றப்பட்டார். அதன்பின்னர், விரைவிலேயே அவரது ஏற்கனவே நலிவடைந்திருந்த உடல் நலம், மேலும் மோசமானது. ஏற்கனவே பல ஆண்டுகளாக அவரது உடலிலிருந்த ஒரு கட்டியானது, மேலும் முற்றி, அறுவை சிகிச்சை வரை கொண்டுபோனது. நடந்த அறுவை சிகிச்சையில் அவர் பிழைக்கவில்லை. 1922ம் ஆண்டு, அக்டோபர் மாதம் இருபதாம் தேதி, 34 வயதான அருட்சகோதரி மரியா பெர்டில்லா போஸ்கார்டின் மரித்தார்.

† Saint of the Day †
(October 20)

✠ St. Maria Bertilla Boscardin ✠

Nun and Nurse:

Born: October 6, 1888
Brendola, Veneto, Italy

Died: October 20, 1922 (Aged 34)
Treviso, Italy

Venerated in: Roman Catholic Church

Beatified: June 8, 1952
Pope Pius XII

Canonized: May 11, 1961
Pope John XXIII

Major shrine: Vicenza, Veneto, Italy

Feast: October 20

Saint Maria Bertilla Boscardin was an Italian nun and nurse who displayed a pronounced devotion to duty in working with sick children and victims of the air raids of World War I. She was later canonized as a saint by the Roman Catholic Church.

Early life :
She was born Anna Francesca Boscardin at Brendola, Veneto. In her family and town, she was known as Annette. She was a member of a peasant family. Her father, Angelo Boscardin, would testify during her beatification process that he was jealous, violent, and frequently drunk. As a child, she could only attend school irregularly, as she was needed to help at home and in the fields. When she did attend school she also worked as a servant in a nearby home. She did not display any particular talents, was thought to be not particularly intelligent and was often the target of insulting jokes. These included being referred to as a "goose" for her slowness by a local clergyman.

She was allowed to make her First Holy Communion at eight and a half years old when the authorized age in those years was eleven. At twelve years old, she was accepted into the parish association of the “Children of Mary” association. The parish priest gave her a catechism as a gift. They found it in the pocket of her habit, when she died, at 34 years old.

Vicenza :
After being rejected for admission to one order because of her slowness, she was accepted as a member of the Teachers of Saint Dorothy, Daughters of the Sacred Heart at Vicenza in 1904, taking the name "Maria Bertilla". She herself internalized some of her earlier criticism, telling the novice-mistress of the order, "I can't do anything. I'm a poor thing, a goose. Teach me. I want to be a saint." She worked there as a kitchen maid and laundress for three years.

Treviso :
She was then sent to Treviso to learn nursing at the municipal hospital there, which was under the direction of her order. During her training period, she was once placed to work in the kitchen. However, upon completing her training, she was promoted to working with victims of diphtheria in the hospital's children's ward. During the air raids of Treviso following the disastrous Battle of Caporetto, the hospital fell under the control of the military. Sister Bertilla was noted for her unwavering care of her patients, particularly those who were too ill to be moved to safety.

This devotion to duty attracted the attention of the authorities of a local military hospital. However, her superioress did not appreciate Sister Bertilla's work and reassigned her to work in the laundry, a position she remained in for four months until being reassigned by a higher superior, who put Sister Bertilla in charge of the children's isolation ward at the hospital. Shortly thereafter, Sister Bertilla's already poor health got worse. A painful tumour which she had had for several years had progressed to the point of requiring an operation, which she did not survive. She died in 1922.

Veneration :
Her reputation for simplicity and devoted, caring hard work had left a deep impression on those who knew her. A memorial plaque placed on her tomb refers to her as "a chosen soul of heroic goodness ... an angelic alleviator of human suffering in this place." Crowds flocked to her first grave at Treviso. After a tomb was erected for her at Vicenza, it became a pilgrimage site where several miracles of healing were said to have taken place.

In 1961, 39 years after her death, she was canonized as a saint. The crowd in attendance included members of her family as well as some of her patients. Her feast day is October 20.

No comments:

Post a Comment