இன்றைய புனிதர் :
(20-10-2020)
புனித விட்டாலிஸ்
( St. Vitalis of Salzburg )
நினைவுத்திருநாள்; அக்டோபர் 20
சால்ஸ்பூர்க் நகர் ஆயர் :
பிறப்பு : 7ம் நூற்றாண்டு
இறப்பு : 20 அக்டோபர் 730 சால்ஸ்பூர்க் Salzburg, ஆஸ்திரியா
பாதுகாவல் : குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள்
புனித விட்டாலிஸ், தனது இளம் வயதிலிருந்தே மறைப்பணியாளராக வேண்டுமென்று ஆசைக்கொண்டார். இவர் சால்ஸ்பூர்க் ஆயர் ரூபர்ட் (Rubert) என்பவரிடம் கல்வி கற்றார். பிறகு ஆயர் ரூபர்ட் 27ம் நாள் மார்ச் 718ம் ஆண்டு இறந்துவிடவே, அவருக்கு பிறகு, அவரின் ஆசிரியர் பதவியை விட்டாலிஸ் (Vitalis) ஏற்றார்.
12 ஆண்டுகள் தொடர்ந்து அப்பணியை செய்தார். அதன்பிறகு விட்டாலிஸ் சால்ஸ்பூர்க்கில் ஆயர் பதவியை ஏற்றார். ஆயர் ரூபர்ட் பெரிய மறைபரப்பு பணியாளராக வேண்டுமென்று ஆசைக்கொண்டார். ஆனால் விட்டாலிஸ் அவ்விருப்பத்தை தன் பணியின் வழியாக நிறைவேற்றினார். இவர் சால்ஸ்பூர்க்கில் புகழ் வாய்ந்த மறைபரப்பு பணியாளராக திகழ்ந்தார்.
செபம் :
ஆற்றல் மிக்க இறைவா!
குழந்தை பருவத்திலிருந்தே உம்மீது ஆர்வம் கொண்டு வாழ புனித விட்டாலிசை தூண்டினீர். உமது இறைத்திட்டத்தை அவரில் நிறைவேற்றினீர். இன்று எம்மை நீர் தயையுடன் கண்ணோக்கியருளும். உமது அன்பால் நாங்கள் தூண்டப்பட்டு என்றும் உம்பணியில் ஆர்வம் கொண்டு செயல்பட நீர் அருள்புரிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
ஆமென்
---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.
Saint of the Day: (20-10-2020)
Saint Vitalis of Salzburg
Saint Vitalis
He came from the area around Salzburg and was a student of St. Rupertus. He accompanied his master on mission trips to the surrounding area and into the mountains.
Because of his excellent skills and his holy life, Rupertus appointed him Abbot of St. Peter and his successor as Bishop of Salzburg.
His missionary work mainly extended to the largely still pagan mountain regions. In Pinzgau, probably in Zeil am See, he founded a mission station and settled Benedictine monks there. Under the direction of their Bishop Vitalis, they developed a lively missionary activity and converted a great many people to the faith.
Vitalis is called the "Apostle of the Pinzgau".
He died in November 720 in Salzburg and was buried in the rock grave of St. Peter in Salzburg.
Legend has it that when Vitalis was doubted, the tomb was opened - and a lily grew out of his heart.
He is therefore represented with the lily sprouting from his heart, as the epitaph in the Church of St. Peter in Salzburg shows.
The city parish of St. Vitalis therefore chose
the heart with a lily as the motif for the parish seal.
---JDH---Jesus the Divine Healer---
No comments:
Post a Comment