புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

03 October 2020

புனித மதர் தியோடர் குரீன் (சபைத் தலைவர்)St. Mother Theodore Guerin October 3

இன்றைய புனிதர்: 
(03-10-2020)

புனித மதர் தியோடர் குரீன் (சபைத் தலைவர்)
St. Mother Theodore Guerin 
நினைவுத்திருவிழா : அக்டோபர் 03

பிறப்பு : 1798 பிரான்ஸ்
இறப்பு : 14 மே 1856 அமெரிக்கா

முத்திபேறுபட்டம் : அக்டோபர் 1998
திருத்தந்தை 2 ஆம் அருள் சின்னப்பர்

புனிதர்பட்டம் : 15 அக்டோபர் 2006 
திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் 

புனித மதர் தியோடர் குரீன், "புனித மேரி ஆஃப் வூட்ஸ்" (Saint Mary of Woods) என்ற சபையை நிறுவினார். 
இவர் நல்லொழுக்கத்தால், மற்றவர்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டாக இருந்தார். நம்பிக்கையின் மறு உருவமாக திகழ்ந்தார். இவர் தனது செப வாழ்வினால் மிகவும் வலிமைப் பெற்று வாழ்ந்தார். தனது எளிமையான வாழ்வால், இவ்வுலக துன்பங்களை எதிர்த்தார். ஏராளமான துன்பங்களை பொறுமையுடன் ஏற்றார். அமைதியின் சிகரமாய் இருந்தார்.

இவர் 1825 ஆம் ஆண்டு, செப்டம்பர் 8 ஆம் நாள் துறவியானார். 1840-1856 ஆம் ஆண்டு வரை "புனித வூட்ஸ் மேரி" (Sisters of Providence of Saint Mary of the Woods) என்ற சபையை நிறுவி, அச்சபையின் தலைவியாக பொறுப்பேற்றார். சபையை நிறுவி, பொறுப்பேற்ற நாளிலிருந்து, தன்னை இறைவனிடம் கையளித்து, இறைவன் மட்டுமே சபையை வழிநடத்த வேண்டுமென்று இடைவிடாமல் செபித்தார். இறைவனின் வழிநடத்துதலாலும், பராமரிப்பினாலும் பல வழிகளில், பலமுறை வெற்றியும் கண்டார்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.
Saint of the Day: (03-10-2020)

St. Mother Theodora Guérin

She was born on October 2, 1798 in a village near Brittany in France. Her father was Laurent Guerin, a Navy Officer under Napoleon Bonaparte and her mother was Isabella. She was a model for virtue and revered as an inspiration for many people. She was the founder of the Sisters of Providence of Saint Mary-of-the-Woods. She worked in the diocese of Lafayette in Indiana. - She died on May 14, 1856. Sister Mary Theodosia prayed one night at the tomb of St. Mary Theodora Guerin for the cure from breast cancer and abdominal tumor in the year 1908. In the next morning the sister Theodosia was cured miraculously from the deadly diseases. Another person McCord, who was having very bad eye sight (rate of 20/800 in one eye and 20/1000 in another eye), prayed this saint for regaining good eye sight. He was also miraculously cured on the next day and his eye sight became 20/20. This happened in the year 2001.

Mother Theodora Guerin was beatified in October 1998 by Pope John Paul-II and canonized by Pope Benedict-XVI on October-15, 2006.

---JDH---Jesus the Divine Healer---

No comments:

Post a Comment