புனித பெட்ரோனியூஸ் (-450)
அக்டோபர் 04
இவர் (Petronius) இத்தாலியைச் சார்ந்தவர்; இவரது தந்தை உரோமை அரசாங்கத்தில் உயரதிகாரியாகப் பணிபுரிந்து வந்தார்.
ஒருமுறை இவர் புனித நாடுகளுக்குச் சென்றபோது, அங்கு இவர் கண்ட காட்சிகள் இவரைக் கிறிஸ்துவின் மீது நம்பிக்கை கொள்ள வைத்தன. இதற்குப் பிறகு இவர் குருவாகி மாறி, இறைப்பணியைச் செய்யத் தொடங்கினார்.
432 ஆம் ஆண்டு இவர் போலோக்னா (Bologna) நகரின் ஆயராகத் திருநிலைப்படுத்தப்பட்டார். இவர் ஆயராக உயர்ந்த பிறகு இரண்டு முதன்மையான செயல்களைச் செய்தார். ஒன்று, எதிரிகளின் படையெடுப்பால் தரைமட்டமாக்கப்பட்ட திருக்கோயில்களை மீண்டும் கட்டியெழுப்பியது. இரண்டு, போலோக்னா நகரில் புனித ஸ்டீபன் திருக்கோயிலைக் கட்டியெழுப்பியது.
இந்த இரண்டு முதன்மையான பணிகளைச் செய்ததால் மக்களால் இவர் வெகுவாகப் பாராட்டப்பட்டார். இவர் கோயில்களைக் கட்டியெழுப்பது மட்டுமல்லாமல், மக்களையும் இறைவனுக்கு உகந்தவர்களாய் கட்டியெழுப்பினார். இந்நிலையில் தான் இவர் 450 ஆம் ஆண்டு வாலண்டைன் என்பவனால் கொல்லப்பட்டார்.
St. Petronius
Feastday: October 4
Patron: of Bologna
Death: 450
Bishop of Bologna. The son a Roman praetorian prefect named Petronius in Gaul, he was most likely a Roman official who went to Palestine and visited the holy places. Influenced by the visit, he entered the priesthood and later became bishop of Bologna about 432. His two main achievements were the repair of the many buildings and churches destroyed by the Goths during their invasion of the Western Empire and building the monastery of St. Stephen in the design of the sacred sites of the Holy Land. Petronius figured in a fictitious life which was immensely popular during the Middle Ages.
No comments:
Post a Comment