இன்றைய புனிதர்:
(12-10-2020)
புனித வில்பிரிட் St. Wilfrid
நினைவுத்திருநாள்: அக்டோபர் 12
பிறப்பு : 633, உம்பிரியன் (North Umbria)
இறப்பு : 710
பாதுகாவல்: ரிப்பன் மறைமாவட்டம் Ripon
இவர் லிண்டஸ்பார்னே (Lindesfarne) என்ற ஊரில் கல்வி கற்றார். பிறகு பிரான்ஸ் நாட்டிலுள்ள லியோன்ஸ் நகரிலும் (Lyons), உரோம் நகரிலும் தனது நேரத்தை கழித்தார். அங்கிருந்து இங்கிலாந்து நாட்டிற்கு திரும்பி, 658 ஆம் ஆண்டு ரிப்பனில் (Ripon) மடாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது உரோம் நகர விதிகளை இங்கிலாந்து நாட்டில் அறிமுகப்படுத்தி, அவற்றை நடைமுறைப்படுத்த பயிற்சி கொடுத்தார்.
669 ல் யார்க்கிற்கு(York) ஆயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் அப்பணியை ஆர்வத்துடன் ஆற்றினார். தனது மறைமாநிலத்தில் புனித ஆசீர்வாதப்பர் சபைக்கென்று பல மடங்களை நிறுவினார். 686 ஆம் ஆண்டு கடினமாக உழைத்து, சாக்சனில்(Saxon) தீவிரமாக நற்செய்திப் பணியை ஆற்றினார். 691 ஆம் ஆண்டு உரோம் நகரிலிருந்து வந்த செய்தியின்படி, ஆயர் பதவியிலிருந்து ஓய்வு பெற்றார். பிறகு 703 ஆம் ஆண்டு தனது மடாதிபதி பதவியையும் விட்டு விலகினார். பின்னர் ரிப்பன் மடத்திலேயே தங்கி, செப வாழ்வை ஆழமாக்கி, இறைவனோடு ஒன்றிணைந்திருந்தார். தான் இறக்கும் வரை, மிக திறமையாக செயல்பட்டார். தனது துறவற மடத்திற்கு, உள்நாட்டு அரசால் தொந்தரவு ஏற்பட்ட போது, அவர்களை அன்போடு அணுகி ரிப்பன் மடத்திற்கு வந்த தொல்லைகளை நீக்கினார்.
திருச்சபையின் ஒழுங்குகளை நிறைவேற்றி, மக்கள் அவற்றில் நிலையாக வாழவேண்டுமென்பதற்காக, இங்கிலாந்தில் பல துன்பங்களை அனுபவித்தார். ஆனால் அவை அனைத்தையும் மிக பொறுமையோடு ஏற்று, சிறந்த மறைப்போதகராக பணியாற்றினார். இவர் பல திறமையான மறைப்பணியாளர்களை உருவாக்கி அவர்களை ஜெர்மனி நாட்டில் மறைபரப்பு பணியை ஆற்ற அனுப்பினார்.
செபம்:
எல்லாம் வல்ல தந்தையே! தீவிரமாக நற்செய்திப் பணியை ஆற்றி, திருச்சபை ஒழுங்குகளை தானும் கடைபிடித்து, மற்றவர்களையும் அதன்பிடி வாழச் செய்த மனித வில்பிரட்டைப் போல திருச்சபையின் சட்டங்களை நாங்கள் கடைபிடித்து வாழ உம்மை இறைஞ்சுகின்றோம்.
---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.
Saint of the Day: (12:10-2020)
St. Wilfrid
Born in Northumberland in 634, St. Wilfrid was educated at Lindesfarne and then spent some time in Lyons and Rome. Returning to England, he was elected abbot of Ripon in 658 and introduced the Roman rules and practices in opposition to the celtic ways of northern England. In 664, he was the architect of the definitive victory of the Roman party at the Conference of Whitby. He was appointed Bishop of York and after some difficulty finally took possession of his See in 669. He labored zealously and founded many monasteries of the Benedictine Order, but he was obliged to appeal to Rome in order to prevent the subdivision of his diocese by St. Theodore, Archbishop of Canterbury. While waiting for the case to be decided, he was forced to go into exile, and worked hard and long to evangelize the heathen south Saxons until his recall in 686. In 691, he had to retire again to the Midlands until Rome once again vindicated him. In 703, he resigned his post and retired to his monastery at Ripon where he spent his remaining time in prayer and penitential practices, until his death in 709. St. Wilfrid was an outstanding personage of his day, extremely capable and possessed of unbounded courage, remaining firm in his convictions despite running afoul of civil and ecclesiastical authorities. He helped bring the discipline of the English Church into line with that of Rome. He was also a dedicated pastor and a zealous and skilled missionary; his brief time spent in Friesland in 678-679 was the starting point for the great English mission to the Germanic peoples of continental Europe. His feast day is October 12th.
---JDH---Jesus the Divine Healer---
No comments:
Post a Comment