அருளாளர்_சலோமியா (1211-1268)
நவம்பர் 17
இவர் (#Bl_Salomea_Of_Poland) போலந்து நாட்டைச் சார்ந்தவர். இவரது தந்தை போலந்தை ஆண்ட லஸ்ஜெக் என்பவர் ஆவார்.
ஒருசில அரசியல் காரணங்களுக்காக இவருக்கு மூன்றாம் வயதிலேயே அங்கேரி நாட்டு இளவரசரோடு மண ஒப்பந்தம் நடைபெற்று, ஏழாம் வயதில் திருமணம் நடைபெற்றது.
திருமணத்திற்கு பிறகு இவர் தனது கன்னிமையை கடவுளுக்கு ஒப்புக் கொடுத்து வாழ்ந்து வந்தார். 1245 ஆம் ஆண்டு இவரது கணவர் ஒரு போரில் இறந்துவிட, இவர் புனித கிளாரா சபையில் சேர்ந்து துறவியானார்.
துறவியான ஒரு சில ஆண்டுகளிலேயே இவருடைய எடுத்துக்காட்டாக வாழ்க்கையால் ஜவிசோஸ்ட் என்ற இடத்தில் இருந்த துறவுமடத்தின் தலைவியாக உயர்த்தப்பட்டார்.
இவ்வாறு இல்லறத்தில் தூய்மையாகவும், துறவறத்தில் எடுத்துக்காட்டாகவும் வாழ்ந்த இவர், 1268 ஆம் ஆண்டு இறையடி சேர்ந்தார். இவருக்கு 1673 ஆம் ஆண்டு திருத்தந்தை பத்தாம் கிளமெண்ட்டால் புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டது.
www.stjck.blogspot.com
Blessed Salomea of Galicia
Also known as
Salome
Profile
Born to the nobility. Married in her youth to Colomon, a prince of Hungary. Widowed, Salomea followed a call to religious life; she became a Franciscan Poor Clare nun, founded a monastery, and eventually serving as its abbess.
Born
13th century Galicia (in modern Poland)
Died
• 17 November 1268 near Cracow, Poland of natural causes
• relics enshrined in Cracow
Beatified
1673 by Pope Clement X (cultus confirmation)
No comments:
Post a Comment