இன்றைய புனிதர்
2020-11-17
ஹெல்ஃப்டா நகர் துறவி கெட்ரூட் Getrud von Helfta OC
பிறப்பு
6 ஜனவரி 1256,
ஐஸ்லேபன் Eisleben, தூரிங்கன் Thüringen
இறப்பு
13 நவம்பர் 1302,
ஹெல்ஃப்டா Helfta, சாக்சன்
பாதுகாவல்: பெரு நாடு
இவருக்கு 5 வயது நடக்கும்போதே, இவரின் பெற்றோர் கெட்ரூட்டை சிஸ்டர்சியன்சரின் (Zisterzienserin) துறவற மடத்தில் சேர்த்தனர். அங்கு அவர் ஜெர்மனி மொழியைக் கற்றுக்கொண்டு, தன் கல்வியை தொடர்ந்தார். ஆன்மீகக் காரியங்களில் அக்கறைக்கொண்டு வளர்ந்தார். இவர் ஜனவரி 27 ஆம் தேதி 1281 ஆம் ஆண்டு தனது 25 ஆம் வயதில் முதல் திருக்காட்சியை பெற்றார். அதன்பிறகும், பலமுறை திருக்காட்சியில் அளவில்லா கடவுளின் அன்பை சுவைத்தார். இவை அனைத்தையும் அவர் கடிதமாக எழுதியுள்ளார்.
இவர் இறைவன் ஒருவரையே தந்தையாகவும், தாயாகவும் எண்ணினார். தன் பெற்றோரிடம் பெறாத அன்பை, இறைவனிடம் பெற்றார். இயேசுவின் திரு இதயத்தைப்பற்றி இடைவிடாமல் எடுத்துரைத்தார். இவர் தான் இறக்கும் வரை இயேசுவின் திரு இருதய பிரார்த்தனையை தொடர்ந்து செபித்தார். இவர் இவ்வார்த்தைகளை தான் சாகும் தருவாயில் கூறிக்கொண்டே இருந்தார். "அன்பான கடவுளே உம் விருப்பம் போல் என்னை நடத்தும். உம் திட்டத்தின்படி வாழ எனக்கு வழிகாட்டும்" இறுதியாக இவ்வார்த்தைகளை உச்சரித்த வண்ணம் உயிர் நீத்தார்.
செபம்:
இயேசுவின் திருஇதயமே! எம் இதயத்தையும் உம் இதயத்திற்கு ஒத்ததாக செய்தருளும். துறவி கெட்ரூட்டை முன்மாதிரியாக கொண்டு, இதய இயேசுவின் அன்பு பிள்ளைகளாக வாழ, எம் வாழ்வை மாற்றியருளும். இயேசுவின் அன்பை சுவைத்து வாழ வழிகாட்டும்.
இந்நாளில் நினைவுகூறப்படும் பிற புனிதர்கள்
• வின்ஸ்காவ் நகர் குரு புளோரினுஸ் Florinus von Vinschgau
பிறப்பு: 8 ஆம் நூற்றாண்டு, தென் டிரோல் Südtirol, இத்தாலி
இறப்பு: 17 நவம்பர் 856(?) ரெமுஸ் Remüs, சுவிஸ்
பாதுகாவல்: வின்ஸ்காவ், கூர் Chur மறைமாவட்டம்
• தூர்ஸ் நகர் ஆயர் கிரகோரி Gregor von Tours
பிறப்பு: 30 நவம்பர் 538 அல்லது 539, பிரான்சு
இறப்பு: 17 நவம்பர் 594, தூர்ஸ் Tours, பிரான்சு
• துறவி சலோமி Salome OSCI
பிறப்பு: 1210, கிராக்கவ், போலந்து
இறப்பு: 17 நவம்பர் 1268, குரோட்சிஸ்கோ Grodzisko, போலந்து
No comments:
Post a Comment