ஞாயிறு
மூன்றாம் ஆண்டு
இதோ! உன் மகன் உயிருடன் இருக்கிறான்.
அரசர்கள் முதல் நூலிலிருந்து வாசகம் 17: 17-24
ஒருநாள் எலியா தங்கியிருந்த வீட்டுத் தலைவியின் மகன் நோயுற்றான். அவனது நோய் மிகவும் முற்றவே, அவன் மூச்சு நின்று விட்டது.
அவர் எலியாவிடம், “கடவுளின் அடியவரே, எனக்கு ஏன் இப்படிச் செய்தீர்? என் பாவத்தை நினைவூட்டவும் என் மகனைச் சாகடிக்கவுமா நீர் வந்திருக்கிறீர்?” என்றார்.
எலியா அவரிடம், “உன் மகனை என்னிடம் கொடு” என்று சொல்லி, அவனை அவர் மடியிலிருந்து எடுத்துத் தாம் தங்கியிருந்த மாடியறைக்குத் தூக்கிச் சென்று தம் படுக்கையில் கிடத்தினார்.
அவர் ஆண்டவரை நோக்கி, “என் கடவுளாகிய ஆண்டவரே, எனக்குத் தங்க இடம் கொடுத்த கைம்பெண்ணின் மகனைச் சாகடித்து அவளைத் துன்புறுத்தலாமா?” என்று கதறினார்.
அவர் அந்தச் சிறுவன்மீது மூன்று முறை குப்புறப் படுத்து ஆண்டவரை நோக்கி, “என் கடவுளாகிய ஆண்டவரே, இந்தச் சிறுவன் மீண்டும் உயிர் பெறச் செய்யும்” என்று மன்றாடினார்.
ஆண்டவரும் எலியாவின் குரலுக்குச் செவிகொடுத்தார். சிறுவனுக்கு மீண்டும் உயிர் திரும்பி வரவே, அவன் பிழைத்துக் கொண்டான். எலியா சிறுவனைத் தூக்கிக்கொண்டு மாடி அறையிலிருந்து இறங்கி வீட்டிற்குள் வந்து, “இதோ! உன் மகன் உயிருடன் இருக்கிறான்” என்று கூறி அவனை அவன் தாயிடம் ஒப்படைத்தார்.
அந்தப் பெண் எலியாவிடம், “நீர் கடவுளின் அடியவர் என்றும் உம் வாயிலிருந்து வரும் ஆண்டவரின் வாக்கு உண்மையானது என்றும் தெரிந்து கொண்டேன்” என்றார்.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
திபா 30: 1,3. 4-5. 10,11ய,12b (பல்லவி: 1யb)
பல்லவி: ஆண்டவரே, உம்மைப் புகழ்வேன்; ஏனெனில் என்னைக் கைதூக்கிவிட்டீர்.
1 ஆண்டவரே, உம்மை ஏத்திப் புகழ்வேன்; ஏனெனில், நீர் என்னைக் கைதூக்கிவிட்டீர்; என்னைக் கண்டு என் பகைவர் மகிழ நீர் விடவில்லை. 3 ஆண்டவரே, நீர் என்னைப் பாதாளத்திலிருந்து ஏறிவரச் செய்தீர்; சாவுக்குழியில் இறங்கிய எனது உயிரைக் காத்தீர். பல்லவி
4 இறையன்பரே, ஆண்டவரைப் புகழ்ந்து பாடுங்கள்; தூயவராம் அவரை நினைந்து நன்றி கூறுங்கள். 5 அவரது சினம் ஒரு நொடிப் பொழுதுதான் இருக்கும்; அவரது கருணையோ வாழ்நாள் முழுதும் நீடிக்கும்; மாலையில் அழுகை; காலையிலோ ஆர்ப்பரிப்பு. பல்லவி
10 ஆண்டவரே, எனக்குச் செவிசாயும்; என்மீது இரங்கும்; ஆண்டவரே, எனக்குத் துணையாய் இரும். 11ய நீர் என் புலம்பலைக் களிநடனமாக மாற்றிவிட்டீர்; 12b என் கடவுளாகிய ஆண்டவரே, உமக்கு என்றென்றும் நன்றி செலுத்துவேன். பல்லவி
இரண்டாம் வாசகம்
கடவுள், தம் மகனைப் பற்றிப் பிற இனத்தவர்க்கு அறிவிக்குமாறு அவரை எனக்கு வெளிப்படுத்தினார்.
திருத்தூதர் பவுல் கலாத்தியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 1: 11-19
சகோதரர் சகோதரிகளே, உங்களுக்கு ஒன்று தெரிவிக்க விரும்புகிறேன்: நான் உங்களுக்கு அறிவித்த நற்செய்தி மனிதரிடமிருந்து வந்ததல்ல. எந்த மனிதரிடமிருந்தும் நான் அதைப் பெற்றுக்கொள்ளவில்லை; எந்த மனிதரும் அதை எனக்குக் கற்றுக்கொடுக்கவில்லை. மாறாக இயேசு கிறிஸ்து அருளிய வெளிப்பாட்டின் வாயிலாக அது எனக்குக் கிடைத்தது. நான் யூத நெறியைப் பின்பற்றி வந்த காலத்தில் எவ்வாறு நடந்து கொண்டேன் என்பதுபற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். கடவுளின் திருச்சபையை மிகக் கொடுமையாகத் துன்புறுத்தி ஒழிக்க முயன்றேன். மூதாதையர் மரபுகளில் ஆர்வம் மிக்கவனாய் என் இனத்தவருள் என் வயதினர் பலரைவிட யூத நெறியில் சிறந்து விளங்கினேன்.
ஆனால் தாயின் வயிற்றில் இருந்தபோதே என்னைத் தமக்கென ஒதுக்கிவைத்துத் தமது அருளால் என்னை அழைத்த கடவுள், தம் மகனைப் பற்றிய நற்செய்தியைப் பிற இனத்தவர்க்கு நான் அறிவிக்குமாறு அவரை எனக்கு வெளிப்படுத்தத் திருவுளங்கொண்டார்.
அப்போது நான் எந்த மனிதரிடமும் போய்க் கலந்து பேசவில்லை. எனக்கு முன் திருத்தூதர்களாய் இருந்தவர்களைக் காண எருசலேமுக்குப் போகவுமில்லை. ஆனால் உடனே அரேபியாவுக்குச் சென்றேன். அங்கிருந்து தமஸ்கு நகருக்குத் திரும்பினேன். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகுதான் கேபாவைப் பார்த்துப் பேச எருசலேமுக்குப் போனேன். அங்கே பதினைந்து நாள் அவரோடு தங்கியிருந்தேன். ஆண்டவரின் சகோதரரான யாக்கோபைத் தவிர திருத்தூதருள் வேறு எவரையும் நான் போய்ப் பார்க்கவில்லை.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
லூக் 7: 16
அல்லேலூயா, அல்லேலூயா! நம்மிடையே பெரிய இறைவாக்கினர் ஒருவர் தோன்றியிருக்கிறார். கடவுள் தம் மக்களைத் தேடி வந்திருக்கிறார். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
இளைஞனே, நான் உனக்குச் சொல்கிறேன், எழுந்திடு.
லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 11-17
அக்காலத்தில் இயேசு நயீன் என்னும் ஊருக்குச் சென்றார். அவருடைய சீடரும் பெருந்திரளான மக்களும் அவருடன் சென்றனர். அவர் அவ்வூர் வாயிலை நெருங்கி வந்தபோது, இறந்த ஒருவரைச் சிலர் தூக்கி வந்தனர். தாய்க்கு அவர் ஒரே மகன்; அத்தாயோ கைம்பெண். அவ்வூரைச் சேர்ந்த பெருந்திரளான மக்களும் அவரோடு இருந்தனர்.
அவரைக் கண்ட ஆண்டவர், அவர்மீது பரிவு கொண்டு, ``அழாதீர்'' என்றார். அருகில் சென்று பாடையைத் தொட்டார். அதைத் தூக்கிச் சென்றவர்கள் நின்றார்கள்.
அப்பொழுது அவர், ``இளைஞனே, நான் உனக்குச் சொல்கிறேன், எழுந்திடு'' என்றார். இறந்தவர் எழுந்து உட்கார்ந்து பேசத் தொடங்கினார். இயேசு அவரை அவர் தாயிடம் ஒப்படைத்தார்.
அனைவரும் அச்சமுற்று, ``நம்மிடையே பெரிய இறைவாக்கினர் ஒருவர் தோன்றியிருக்கிறார். கடவுள் தம் மக்களைத் தேடி வந்திருக்கிறார்'' என்று சொல்லிக் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தனர். அவரைப் பற்றிய இந்தச் செய்தி யூதேயா நாடு முழுவதிலும் சுற்றியுள்ள பகுதிகளிலும் பரவியது.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
இந்த வார ஞாயிறு மறையுரை....
பொதுக்காலம்10 ஆம் ஞாயிறு மரணமே நீ வாழ்க!
1அர 17~17-24 கலா 1~11-19 லூக் 7~11-17
‘ஷெங்காய்’ என்ற ஜென் ஞானியின் வாழ்வில் நடந்த சம்பவம்.
ஒரு பெரும் செல்வர் ஞானியிடம் வந்து வேண்டுகோள் ஒன்றை முன்வைத்தார். தனக்கொரு இறுதி வாசகம் எழுதித் தருமாறு ஞானியைக் கேட்டார். அந்த காலத்தில் அது ஜப்பானில் ஒரு பழக்கமாக இருந்தது. ஞானிகள்இ துறவிகள் பெரிய மனிதர்கள் மரண வேளையில் எதையாவது சுருக்கமாக சொல்லிவிட்டு போவது வழக்கம். அந்த வாசகம் அவர்களின் வாழ்க்கைச் சாரமாக அனுபவ மொழியாக மக்கள் போற்றுவதுண்டு. அந்த வாசகத்தை எழுதி வைத்துப் பொன்மொழி போல் பாதுகாப்பார்கள்.
அந்த முறையில் அந்தச் செல்வர் ஞானியிடம் கேட்டார். ஞானியும் எழுதிக் கொடுத்தார். அதைப் பார்த்த செல்வர் திடுக்கிட்டார். ‘என்ன இது இப்படி அமங்கலமாக எழுதிவிட்டீர்களே’ என்றார் செல்வர். அவர் எழுதிக்கொடுத்த வாசகம் இதுதான்.
தந்தை இறப்பார்
மகன் இறப்பான்
அப்புறம் பேரன்..இறப்பான்
- ஷெங்காய்.
செல்வருக்கு கடுமையாக கோபம். அவருடைய சினத்தைக் கண்டு ஞானி சிரித்தார். ‘இது அமங்கலமான வாசகம் அன்று: மங்கல வாசகம். நீங்கள் உயிரோடு இருக்கையில் உங்கள் மகன் இறந்துவிட்டால் உனக்கு எப்படி இருக்கும். உன் பேரன் உன் மகனுக்கு முன்போஇ உனக்கு முன்போ இறந்துவிட்டால் எப்படி இருக்கும்? யோசித்துப் பாருங்கள். அதைவிட துக்கம் தரக்கூடியது ஏதாவது உண்டா? அதைவிட அமங்கலமான நிகழ்ச்சி வேறு உண்டா? அமங்கலம் அதுதான். இப்போது நான் எழுதியிருப்பது என்ன ?
உங்கள் குடும்பம் பாரம்பரியச் சிறப்புள்ளது. இதுவரை இருந்து வந்தது போலவே தந்தைஇமகன்இ பேரன் என்று வரிசையாக முதுமை அடைந்த பின் மரணம் நிகழ்வது புனிதமான மகிழ்ச்சியானது அல்லவா? அதனால்தான் இப்படி எழுதினேன்’ என்றார் ஞானி. மரணம் இயல்பாக அமைதியாக நிகழ்வது மங்கலம்.
இன்றைய நற்செய்தியிலும் முதல் வாசகத்திலும் பிள்ளைகளை பறிகொடுத்த தாய்மார்களைப் பார்க்கிறோம். இருவருமே கணவனை இழந்த கைம்பெண்கள். எவ்வளவு துடி துடித்திருப்பார்கள்: இறைவனை எப்படியெல்லாம் சபித்திருப்பார்கள். கணவனை இழந்த பொழுதைவிட இந்த மகனை இழந்த பொழுது கணத்துப் போயிருக்கும். கொடிது கொடிது இளமையில் வறுமையும் மரணம். இந்த நிலையில்தான் மரணத்தை எதிர்கொள்வதற்கான பாடம் கற்பிக்கப்படுகிறது. இயேசு சொல்லுகிற வார்த்தை ‘அழாதீர்’ என்பதுதான்.
மரணமே நீ வாழ்க!
மரணம். இது மானுடத்தின் மாறாத ரணம். இறைவனின் படைப்பில் இந்த மரணம் மட்டும் இல்லாமல்போனால் படைப்பில் எந்த சுவாரசியமும் இருந்திராது. இறப்பே இல்லாதொழிந்தால் வாழ்வில் எவருக்கும் பிடிப்பே இல்லாமல் இருந்திருக்கும். சருகுகளே இல்லாவிட்டால் எப்படி புதிய தளிர்களுக்குப் பூபாளம் இருந்திருக்கும்? ஓட்டப்பந்தயத்தில் எல்லைக்கோடு என்ற ஒன்று இருக்கிற காரணத்தினாலேயே ஓடுபவர்களுக்கு உற்சாகம் பிறக்கிறதல்லவா?! அது இல்லாமலிருந்திருந்தால் அயற்சியும் சோர்வும் மட்டுமே மிஞ்சியிருக்கும்: ஆபத்து அதன் முடிவாயிருக்கும். கரையே இல்லாத கடலும் இல்லை: முடிவே இல்லாத நதியே இல்லை: சிகரமே இல்லாத மலைகளும் இல்லை. அப்படியிருப்பின் அவை இயற்கையில் மூல தர்மத்திற்கு முரணானவை. ஒவ்வொரு மூலத்திற்கும் ஒருமுடிவு தவிர்க்க முடியாதது: மனித வாழ்க்கையில் மரணமும் அப்படித்தான். ஆகையால் மரணத்தை நேசியுங்கள். மரணத்தைக் கொண்டாடுங்கள். மரணம் ஆராதனைக்குரியது: அச்சத்திற்குரியதன்றுஇ மரணத்தை வென்றதுதான் கிறிஸ்தவம். சாவின் கொடுக்குகளைத் தகர்த்தெறிந்தவர்தான் கிறிஸ்து. மரணம் கொண்டாடப்படவேண்டும்.
மரணமே ஞானம்!
மரணம் ஞானத்தின் உறைவிடம். ஞானத்தைப் போதிப்பதில் எந்த ஆசானும் அதற்கு இணையாக முடியாது. கண்களை மூடி கல்லறைக்குள் இருப்பதாக கற்பனைச் செய்திடுங்கள். வாழ்வின் அர்த்தம் புரியும். எப்படி வாழ்ந்தீர்;கள் என்பது தெரியும். சித்தார்த்தன்இ புத்தனாக போதி மரத்தில் ஞானம் பெற ஒருவரின் ‘சாவு’ அனுபவம்தான் காரணமாக இருந்தது. மரணத்திற்குப் பிறகு என்ன சம்பவிக்கும்? அதனையும் யாரும் அனுபவித்து போதித்ததில்லை. மரணம் ஒரு மறைபொருளாக இருக்கிறது. ‘கண்டவர் விண்டிலர்: விண்டவர் கண்டிலர்’ என்பதுதான் அதன் சூட்சமம். கல்லறை அனுபவத்தை வாழும்போதே நாம் ஒருமுறையாவது அனுபவித்தாக வேண்டும். அப்பொழுதுதான் வாழ்க்கை அர்த்தம் பெறும். கல்லறையிலிருந்து நான்கு நாள் கழித்துஇ லாசரே வெளியே வா! என்ற இயேசுவின் வார்த்தைக்குப் பணிந்து உயிருடன் திரும்ப வந்த லாசர் நிச்சயம் முன்பு வாழ்ந்ததை விட அதற்குப் பிறகு நிச்சயம் நல்ல மனிதராக வாழ்ந்திருப்பார். இன்றைய நற்செய்தியில் இடம்பெறும் ஏழைக் கைம்பெண்ணின் மகனும் அப்படித்தான். பாடை அனுபவம் அவனுக்குப் பாடம் புகட்டியிருக்கும்.
பாடை ஏன்?!
நம்முடைய மரபில் பாடையில் வைத்து ஒருவரைக் கல்லறைக்குக் (மண்ணறை) கொண்டு செல்வது வழக்கம். கல்லறை என்பதைவிட மண்ணறை என்பதே சாலப் பொருத்தமாகும். சுமந்து செல்லும் அந்தப் பாடையை எப்பொழுதுமே மூங்கிலால் கட்டமைத்துஇ தென்னை மட்டைகளைக் கொண்டு கீற்று முடைந்து வைப்பதுண்டு. பெரும்பாலும் முழுத் தென்னை மட்டையை அப்படியே பயன்படுத்துவர்: பிளந்துகூட முடைவதில்லை. அது ஏன்? என்கிறபோது ‘தென்னை மட்டை மரத்தை விட்டு விழும்போது அது அந்த மரத்தில் தான் இருந்ததற்கு அடையாளமாக ஒரு வடுவை ஏற்படுத்திவிட்டுத்தான் கீழே விழும். அந்த வடு அந்த மரம் அழியும் வரை இருக்கும். அதே போன்றுதான்இ தென்னை மட்டையினால் செய்த பாடையைப் பார்க்கும் மற்ற மனிதர்களுக்குஇ தங்கள் பிறப்பை இந்த உலகம் உள்ளளவும் மறக்காத வகையில் ஏதேனும் நற்செயலைஇ ஓர் அடையாளமாகச் செய்துவிட்டுச் செல்ல வேண்டும் என்ற எண்ணம் வரச் செய்வதற்காகத்தான். வாழ்ந்தோம் என்பதற்கான வரலாற்றுச் சுவடு இந்த உலகில் ஏற்படுத்தப்பட வேண்டும். எனவேதான் பாடை தென்னை ஓலையில் கட்டப்படுகிறது. இன்றைய இளைஞன் ஒருவேளை வரலாற்றில் இடம்பெறுகிற வண்ணம்இ எந்தச் சுவடையும் விட்டுச் செல்லாமல் இருந்திருக்கலாம்: இந்த பாடை அனுபவத்திற்குப் பிறகு நிச்சம் இவனுடைய வாழ்வியல் முறையில் மாற்றம் இருந்திருக்கும்.
மரணம் அனைவருக்கும் பொதுவானது. அதற்கு சாதிஇ மதமோஇ நிற பேதமோ எதுவும் இல்லை. வர்க்க வேற்றுமைகள்கூட அதனைத் தடுத்த நிறுத்த முடியாது. மரணத்தை யாரும் அணைப் போட்டு தடுத்திட முடியாது. மரணத்தை நிறுத்த மருந்தில்லை. மரணம் பூரணத்துவம் வாய்ந்தது. எல்லோருக்கும் உரியது. அப்படிப்பட்ட மரணம் இவ்வுலகில் இயேசு ஒருவரைத்தான் ஆராதித்தது. அவரை ‘ஆண்டவர்’ ஆக்கியது: ஆண்டவர் என்றால் வென்றவர் என்று பொருள். அவர் மரணத்தை வெற்றிக்கொண்டு ஆண்டவராக உயிர்த்தெழுந்தார். எனவேதான் கிறிஸ்தவர்களுக்கு மரணம் அச்சத்திற்குரிய மறைபொருளன்று: மாறாகஇ ஆராதனைக்குரியது. மரணத்தை எவரும் தேடிச் செல்ல வேண்டியதில்லை: மாறாகஇ அது நம்மைத் தழுவ வரும்போது ஒரு தேவதையைப் போல வாழ்த்தி வரவேற்க கற்றுக்கொள்ள வேண்டும். மரணம் நம்மை முத்தமிடும்போதுஇ தேவாலயத்தின் தெய்வீக அமைதி நம்மில் தென்படவேண்டும்: புயலின் மையத்தில் எழும் கண்ணாக அமைதி நம்மில் நிலவிட வேண்டும்.
மரணத்திற்கு தயாரா?!
உலகில் ஒவ்வொருவரும் ஐந்து நிலைகளில் மரணத்திற்கு தயார்படுத்திக்கொள்கிறார்கள்.
முதலாவதாக மறுத்தல் (னுநnயைட). தனக்கு மரணம் வராது என்று மறுக்கிற நிலை. தனக்கு இதயத்தில் அடைப்பு இருக்கிறது என்பதை சிலர் ஒப்புக்கொள்ளமாட்டார்கள்: பரிசோதனைச் செய்து கொள்ள மறுப்பார்கள். தான் நன்றாக இருப்பதாக சாதிப்பார்கள். தனக்கு கொழுப்பே இல்லை என்று சத்தியம் செய்வார்கள்.
இரண்டாவதாகஇ கோபம் (யுபெநச). ஒரு கட்டத்தில் மரணத்திற்கு தான் தப்பிக்க முடியாது என்று தெரிந்துவுடன் தாங்கவெண்ணா கோபம் வெளிப்படும். தன்னுடைய நிலைக்கு மற்றவர்கள்தான் காரணம் என்று கோபிப்பார்கள். அடுத்தவர்மீது பழி சுமத்துவாhர்கள். தங்களை விட ஆரோக்கியமாக இருப்பவர்கள்மேல் எல்லாம் கோபப்படுவார்கள். தனக்கு வந்த நோய் மற்றவருக்கும் வர வேண்டும் என்கிற எண்ணம்கூட சிலருக்குத் தோன்றும்.
மூன்றாவதாக பேரம் பேசுதல் (டீயசபயiniபெ). இன்னும் கொஞ்ச நாட்களாவது வாழ வேண்டும் என்ற ஆசை வரும். நிறைவேறாத அல்லது நிறைவேற்ற முடியாத கடமைகள் அனைத்தும் கண்முன் நிழலாடும்: பயமுறுத்தும். மரணத்தை எவ்வளவு தள்ளிப்போட முடியுமோ அவ்வளவுக்கு முயற்சிப்பார்கள். மாத்திரைகளை உட்கொள்ளுவார்கள்: மருத்துவர்களை ஆலோசிப்பார்கள். அறுவை சிகிச்சைக்கு கூட அனுமதிப்பார்கள்.
நான்காவது நிலை சோர்வு (னுநிசநளளழைn). இனி வேறு வழியில்லை என்ற தீர்ப்பு அளவற்ற சோர்வைத் தரும். வாழ்க்கைப் பிடிப்பற்றுப் போயிடும். நடைபிணங்களாக வாழ்ந்திடுவர். அளவற்ற சலிப்பும் எரிச்சலும் ஏற்படும். வாழ்க்கை அர்த்தம் இழந்து நிற்கும்.
ஐந்தாவது நிலை ஏற்றுக்கொள்ளுதல் (யுஉஉநிவயnஉந ). இதுவே இறுதிகட்டம். இந்நிலையில் மரணத்தைச் சந்திக்க மனம் தயாராகிவிடுகிறது. ஆன்மீகம்.. விதி..மறுவுலக வாழ்க்கை.. ஆத்மா.. நிலையற்ற வாழ்க்கை என்ற தத்துவம்..எல்லாம் தோன்றும். ஒவ்வொருவரும் ஒவ்வொன்றை வலியுறுத்தி மனதைத் தேற்றிக்கொள்வார்கள். மரணம் ஒரு மறைபொருள். காலம் உள்ளவரை அதுவும் நிலைத்திருக்கும். கருவறை இருக்கிற வரை கல்லறை நிச்சயம் இடம்பெறும்.
மரணத்தின் தாக்கம்!
மரணம் மனிதர்களிடம் இரண்டு வகைகளில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. நம்மோடு பழகிஇ உண்டு உறவாடிஇ இதயத்திற்கு நெருக்கமாக இருக்கிறவர்இ இறக்கிறபோதுஇ அவரின் மரணம் நம்மை மனதளவில் பாதித்துஇ நம்முடைய வாழ்வைக் கேள்விக்குள்ளாக்குகிறது. அவர்களுடைய பிரிவை நம்மால் தாங்கிக்கொள்ள முடியாமல் தவிப்பை உண்டாக்குகிறது. இரண்டாவதாகஇ மரணம் வந்துவிடுமோ என்ற நித்தம் நித்தம் அஞ்சிஇ வாழ்வைக் கொண்டாடாமல்.. பயந்து பயந்து வாழ வழி உண்டாக்குகிறது. இந்த இரண்டுமே தவறுதான். வாழ்க்கை வாழ்வதற்கே என்று உச்சி மீது வான் இடிந்து வீழுகிற போதும் வசந்தம் பூத்து வாழ்ந்திட வேண்டும்: மரணத்தைக் கண்டு அஞ்சுதல் கூடாது. ‘காலா உனைச் சிறுபுல்லென மதிக்கிறேன்- என்றன் காலருகே வாடா உனைச் சற்றே மிதிக்கிறேன்- என்ற பாரதியின் துணிச்சல் நமக்கு வேண்டும். அஞ்சுவது யாதென்றும் இல்லை: அஞ்ச வருவது மில்லை’ என்ற மனப்பான்மை நமக்கு வேண்டும்.
நாம் நிச்சயம் மரணத்தைச் சந்தித்தே ஆக வேண்டும்: அல்லது மரணம் ஏதோ ஒரு நொடிப் பொழுதில் நம்மைச் சந்தித்தே தீரும். அச்சந்திப்பு நிகழ்வதற்கு முன்பு நம்முடைய வாழ்க்கை அர்த்தம் பெற வேண்டும். உயிர்ப்பு மரணத்தில்தான் அர்த்தம் பெறுகிறது. எப்படி வாழ்கிறோம் என்பதில்தான் மறுவாழ்வு நிர்ணயிக்கப்படுகிறது. மரணமே! நீ வாழ்க!
சோகங்களிலேயே மிகவும் சோகமானது இளமையில் இறப்பதல்ல: ஆனால் 75 வயது வரை வாழ்ந்தும் உண்மையாகவே வாழாமல் இருப்பதுதான் -மார்ட்டீன் லூதர் கிங்
தந்தை லாசருக்கு நன்றி.
2013 Jun 9 SUN: TENTH SUNDAY IN ORDINARY TIME
1 Kgs 17: 17-24/ Ps 30: 2. 4. 5-6. 11. 12. 13 (2a)/ Gal 1: 11-19/ Lk 7: 11-17
உணவு உடை உறைவிடம் கொடுப்பது தர்மம். உயிர் கொடுப்பது உன்னதர் அளிக்கும் உயரியக் கொடை. சாரிபாத்து கைம்பெண்ணின் இறந்த மகனை உயிர் பெறச் செய்கின்றார் இறைவாக்கினர் எலியா. நயீம் ஊர் கைம்பெண்ணின் மகனை உயிர்ப்பிக்கின்றார் இறைமகன் இயேசு. ஆதரவற்ற விதவைகளின் அழுகுரல் இறைவாக்கினர் மற்றும் இறைமைந்தனை நெகிழச் செய்தது.
உருகமாக ஆண்டவரிடம் மன்றாடம் போது அவர் நம் குரலை கேட்காதிருப்பாரோ? கேளுங்கள் கொடுக்கப்படும். தட்டுங்கள் திறக்கப்படும். தேடுங்கள் கண்டடைவீர்கள், என்று அவரிடம் உருக்கமாக வேண்டுவோம் வாழ்வடைவோம்.
முன்னுரை
அன்புள்ளவர்களே!
பொதுக்கால 10 ம்ஞாயிறுக்கு வந்துள்ளோம். அனைவரையும் அன்புடனே வரவேற்கின்றோம்.
கடவுள் நம்மை தேடிவரம் காலத்தில் கல்லரையில் உள்ளவர்கள் அனைவரும் உயிர்த்தெழுவார்கள்.
அன்றைக்கு நடந்த உயிர்ப்பின் பின் மக்கள் அனைவரும், கடவுளே தங்களது நடுவினிலே வந்துள்ளதாக உணர்ந்தார்களாம்.
நாமும் அத்தகைய ஒரு உணர்வினை பெரும் காலம்வரை, நம்மை நம்பிக்கையில் காத்துக் கொள்ள வேண்டிய பொறுப்புண்டு என உணர்ந்து பலியிலே பங்கேற்போம்.
இறப்பினால் ஏற்பட்ட காயங்களை குணமாக்க அருள் கேட்டும் மன்றாடுவோம்.
சந்திப்போம் புதுப்பிறப்பிலே என்ற நம்பிக்கையோடு பயணிப்போம்.
மன்றாட்டு
திருஅவையை வழிநடத்துவோரை ஆசீர்வதித்தருளும். காலத்தின் குரலுக்கு ஏற்ப தன்னை புதுப்பித்துக் கொண்டு, உண்மையான அர்ப்பணத்தோடு இயங்கிட வரமருள இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
நாட்டை ஆள்வோரை ஆசீர்வதித்தருளும். மக்களின் அள்றாட தேவைகிளல் மட்டுமல்லாது, நீண்டகால தீர்க்கமான திட்டங்களோடு, நேர்மையாய் செயல்பட வரமருள இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
வழிபாட்டில் பங்கேற்கும் எம்மை ஆசீர்வதித்தருளும். மரணத்தை இழப்பு என கண்டு அஞ்சாது, அது நிலையான வாழ்வுக்கான வழியென்பதனை புரிந்து, ஏற்றுக் கொள்ளும் வரமருள இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
அவநம்பிக்கை கொண்டவர்களை ஆசீர்வதித்தருளும். தங்களை மாய்த்துக் கொள்ள துடிக்கும் இத்தகைய மனம் கொண்டவர்களை ஆவியினால் வழிநடத்தி, தற்கொலை எதற்குமே தீர்வாகாது என்பதனை புரிந்து சவால்களை உம் துணையோடு சந்திக்க வரமருள இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
மரணபடுக்கையில் இருப்போரை ஆசீர்வதித்தருளும். இறுதி மட்டும் மனவுறுதிப்பாட்டோடு பயணிக்க, வரமருள இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
No comments:
Post a Comment