புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

07 June 2013


தூய ஆவி விழாவுக்குப் பின்வரும் 2ஆம் ஞாயிறை அடுத்த வெள்ளி
இயேசுவின் திருஇதயம்

மூன்றாம் ஆண்டு
 முதல் வாசகம்
 நானே என் மந்தையை மேய்த்துஇளைப்பாறச் செய்வேன்.
இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து வாசகம் 34: 11-16
தலைவராகிய ஆண்டவர் கூறுகிறார்: நானே என் மந்தையைத் தேடிச் சென்று பேணிக்காப்பேன். ஓர் ஆயன் தன் மந்தையினின்று சிதறுண்ட ஆடுகளைத் தேடிச் செல்வதுபோலநானும் என் மந்தையைத் தேடிப் போவேன். மப்பும் மந்தாரமுமான நாளில் அவற்றை எல்லா இடங்களினின்றும் மீட்டு வருவேன். மக்களினங்களினின்று அவற்றை வெளிக்கொணர்ந்துநாடுகளினின்று கூட்டிச்சேர்த்து,அவற்றின் சொந்த நாட்டிற்கு அழைத்து வருவேன். அவற்றை இஸ்ரயேலின் மலைகளிலும் ஓடையோரங்களிலும் நாட்டின் எல்லாக் குடியிருப்புகளிலும் மேய்ப்பேன். நல்ல மேய்ச்சல் நிலத்தில் அவற்றை மேய்ப்பேன்.
இஸ்ரயேலின் மலையுச்சிகளில் அவற்றின் மேய்ச்சல் நிலம் இருக்கும். அங்கே வளமான மேய்ச்சல் நிலத்தில் அவை இளைப்பாறும். இஸ்ரயேலின் மலைகளின்மேல் செழிப்பான மேய்ச்சல் நிலத்தில் அவை மேயும். நானே என் மந்தையை மேய்த்து,இளைப்பாறச் செய்வேன்என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.
காணாமல் போனதைத் தேடுவேன்அலைந்து திரிவதைத் திரும்பக் கொண்டு வருவேன்காயப்பட்டதற்குக் கட்டுப் போடுவேன்;நலிந்தவற்றைத் திடப்படுத்துவேன். ஆனால்கொழுத்ததையும் வலிமையுள்ளதையும் அழிப்பேன். இவ்வாறு நீதியுடன் அவற்றை மேய்ப்பேன்.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்
திபா 23: 1-3ய. 3b-4. 5. 6 (பல்லவி: 1)
பல்லவி: ஆண்டவரே என் ஆயர்எனக்கேதும் குறையில்லை.
ஆண்டவரே என் ஆயர்எனக்கேதும் குறையில்லை. 2 பசும் புல்வெளிமீது எனை அவர் இளைப்பாறச் செய்வார்அமைதியான நீர்நிலைகளுக்கு எனை அழைத்துச் செல்வார். 3ய அவர் எனக்குப் புத்துயிர் அளிப்பார். பல்லவி
3b தம் பெயர்க்கேற்ப எனை நீதிவழி நடத்திடுவார்; 4 மேலும்சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும்நீர் என்னோடு இருப்பதால் எத்தீங்கிற்கும் அஞ்சிடேன்உம் கோலும் நெடுங்கழியும் என்னைத் தேற்றும். பல்லவி
என்னுடைய எதிரிகளின் கண்முன்னே எனக்கொரு விருந்தினை ஏற்பாடு செய்கின்றீர்என் தலையில் நறுமணத் தைலம் பூசுகின்றீர்;எனது பாத்திரம் நிரம்பி வழிகின்றது. பல்லவி
உண்மையாகவேஎன் வாழ்நாள் எல்லாம் உம் அருள் நலமும் பேரன்பும் எனைப் புடைசூழ்ந்து வரும்நானும் ஆண்டவரின் இல்லத்தில் நெடுநாள் வாழ்ந்திருப்பேன். பல்லவி

இரண்டாம் வாசகம்
கடவுள் நம்மீது கொண்டுள்ள தம் அன்பை எடுத்துக்காட்டியுள்ளார்.
திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 5: 5b-11
சகோதரர் சகோதரிகளேநாம் பெற்றுள்ள தூய ஆவியின் வழியாய்க் கடவுளின் அன்பு நம் உள்ளங்களில் பொழியப்பட்டுள்ளது. நாம் இறைப்பற்று இன்றி வலுவற்று இருந்தபோதேகுறித்த காலம் வந்ததும் கிறிஸ்து நமக்காகத் தம் உயிரைக் கொடுத்தார். நேர்மையாளருக்காக ஒருவர் தம் உயிரைக் கொடுத்தலே அரிது. ஒருவேளை நல்லவர் ஒருவருக்காக யாரேனும் தம் உயிரைக் கொடுக்கத் துணியலாம். ஆனால்நாம் பாவிகளாய் இருந்தபோதே கிறிஸ்து நமக்காகத் தம் உயிரைக் கொடுத்தார். இவ்வாறு கடவுள் நம்மீது கொண்டுள்ள தம் அன்பை எடுத்துக்காட்டியுள்ளார்.
ஆகையால் இப்போது நாம் கிறிஸ்துவின் இரத்தத்தினால் கடவுளுக்கு ஏற்புடையவர்களாகிஅவர் வழியாய்த் தண்டனையிலிருந்து தப்பி மீட்புப் பெறுவோம் என மிக உறுதியாய் நம்பலாம் அன்றோநாம் கடவுளுக்குப் பகைவர்களாயிருந்தும் அவருடைய மகன் நமக்காக உயிரைக் கொடுத்ததால் கடவுளோடு ஒப்புரவாக்கப்பட்டுள்ளோம். அப்படியானால் ஒப்புரவாக்கப்பட்டுள்ள நாம்வாழும் அவர் மகன் வழியாகவே மீட்கப்படுவோம் என மிக உறுதியாய் நம்பலாம் அன்றோ! அதுமட்டும் அல்லஇப்போது கடவுளோடு நம்மை ஒப்புரவாக்கியுள்ள நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வழியாய் நாம் கடவுளோடு உறவு கொண்டு பெருமகிழ்ச்சி அடைகிறோம். இம்மகிழ்ச்சியை நமக்குத் தருபவர் கடவுளே.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

 நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
யோவா 10: 14
அல்லேலூயாஅல்லேலூயா! நல்ல ஆயன் நானே. நானும் என் ஆடுகளை அறிந்திருக்கிறேன். என் ஆடுகளும் என்னை அறிந்திருக்கின்றனஎன்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

அல்லது
மத் 11: 29b
அல்லேலூயாஅல்லேலூயா! நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன். ஆகவே என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு என்னிடம் கற்றுக் கொள்ளுங்கள்என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்
என்னோடு மகிழுங்கள்காணாமற்போன ஆட்டைக் கண்டுபிடித்து விட்டேன்.
லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 15: 3-7
அக்காலத்தில் இயேசு பரிசேயர்களுக்கு இந்த உவமையைச் சொன்னார்: ``உங்களுள் ஒருவரிடம் இருக்கும் நூறு ஆடுகளுள் ஒன்று காணாமற் போனால் அவர் தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் பாலை நிலத்தில் விட்டுவிட்டுகாணாமற்போனதைக் கண்டுபிடிக்கும்வரை தேடிச்செல்ல மாட்டாரா?
கண்டுபிடித்ததும்அவர் அதை மகிழ்ச்சியோடு தம் தோள்மேல் போட்டுக்கொள்வார்வீட்டுக்கு வந்துநண்பர்களையும் அண்டை வீட்டாரையும் அழைத்து, `என்னோடு மகிழுங்கள்ஏனெனில் காணாமற்போன என் ஆட்டைக் கண்டுபிடித்து விட்டேன்என்பார்.
அது போலவே மனம் மாறத் தேவையில்லாத் தொண்ணூற்றொன்பது நேர்மையாளர்களைக் குறித்து உண்டாகும் மகிழ்ச்சியை விடமனம் மாறிய ஒரு பாவியைக் குறித்து விண்ணுலகில் மிகுதியான மகிழ்ச்சி உண்டாகும் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்.''
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

சிந்தனை
காணாமற் போன ஆட்டை தேடுவேன்.
அன்பின் நிறைவினை பெற்று அனுபவிக்க, அவரோடு நாம் ஒன்றித்து வாழ்ந்திடல் வேண்டும்.  அவரிடம் நாம் அன்பின் தன்மைகளை கற்றறிந்து கொள்ள வேண்டும்.
காணாமல் போனதை தேடிடவும், காயப்பட்டதை ஆற்றுப்படுத்தவும் முன்னுரிமையுண்டு என்று தெளிவாகவே விவரிக்கின்றார். இது ஓரவஞ்சனையாகுமா? உண்மை அன்பிலே இது யதார்த்தமானது.
இதனால் தான் அவருடைய போதனை அன்பு செய்பவருக்கே, அன்பு காட்டினால் அதனால் என்ன பெரிய காரியம் நீங்கள் செய்த விட்டீர்கள் என்று கேட்டுப் பார்க்க சொல்லுகின்றார்.
காணாமல் போனதையும், காயப்பட்டதையும் கவனிப்பதே இறையாட்சிப்பணியாகும்.

பெயர் கொண்டோருக்கும், இதயம் கொண்ட நல்உள்ளங்களுக்கும், கடின இதயத்தோடு போராடுவோருக்கும் நல்வாழ்த்துக்கள்.

No comments:

Post a Comment