† இன்றைய புனிதர் †
(ஃபெப்ரவரி 14)
புனித வாலன்டைன்
மகிழ்ச்சியான திருமணங்களின் பாதுகாவலர்
காதலைத் தட்டி எழுப்பாதீர் ; தானே விரும்பும்வரை அதைத் தட்டி எழுப்பாதீர் (இபா 3:5)
தொடக்கக்கால மறைசாட்சியாளர்கள் பற்றிய குறிப்பில் புனித வாலன்டைன் என்ற பெயரில் மூன்று நபர்கள் பிப்ரவரி 14 ஆம் தேதியில் குறிப்பிடப்படிருக்கிறார்கள் . ஒருவர் ஆப்பிரிக்கா நாட்டில் மறைப்பணியாற்றி பல்வேறு துன்பங்களை அனுபவித்து இறந்தவர். இவரைப்பற்றி மேலதிக விபரங்கள் கிடைக்கப் பெறவில்லை .
மற்ற இருவரில் ஒருவர், இன்டெரம்னா என்ற இடத்தின் ஆயராக இருந்தவர் .மற்றவர் உரோமையில் குருவாகப் பணியாற்றியவர் .இவர்கள் இருவருமே மறைக்கலகத்தின் போது கொடூர துயரங்களையும் தாங்கிக்கொண்டு நற்செய்தி போதித்தவர்கள் . மூன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கொலையுண்டு மறைசாட்சியானவர்கள் .
உரோமையில் குருவாக இருந்த வாலன்டைன் ஒரு மருத்துவரும் கூட .இவர் பேரரசர் இரண்டாம் கிளாடியுசின் காலத்தில் நடந்த மறைக்கலகத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்குச் சேவையாற்றினார். எண்ணற்றோர் அத்துன்பக் கிண்ணத்தைப் பருகாமல் தப்பித்துச் செல்ல வழிவகுத்தார். சிறைச்சாலைகளுக்குள் சென்று ஆறுதல் மொழி கூறி ஆற்றுப் படுத்தினார்.
இதே காலத்தில் பெர்சியாவில் இருந்து புனித மாரியுஸ் குடும்பத்தினர் உரோமைக்குத் திருப்பயணமாக வந்தார்கள் .வந்தவர்கள் வாலன்டைன் செய்த அரும்பணிகளைப் பார்த்தார்கள் .சவால் நிறைந்த இந்தப் பணிக்கு புனித மாரியுஸ் மற்றும் அவருடைய குடும்பத்தினர் அனைவருமே வாலன்டைனுக்கு உதவியாக இருந்தார்கள் .
திருமணமான படை வீரர்களை விட திருமணம் ஆகாத வீரர்களே வீரமான முழு திறனுடன் போராடுவார்கள் என்று நினைத்த பேரரசன் வீரர்கள் திருமணம் செய்வதை தடுத்து வந்தார். இத்தடையை மீறி பல வீரர்களுக்கு வாலன்டைன் மணமுடித்து வைத்தார்.
வாலன்டைன் செய்வது யெல்லாம் கேட்டறிந்த பேரரசன் அவரைக் கைது செய்து , உரோமை அளுநனிடம் அனுப்பினார். பொறுமையாக இருந்த அளுநன் கத்தோலிக்க கிறிஸ்தவ மழையை மறுத்த உரோமை தெய்வத்தை, பேரரசரை வணங்க கட்டளையிட்டான் . வாலன்டைன் மறுத்தார். துன்புறுத்தினான் .வாலன்டைன் உறுதியுடன் இருந்தார் . வெகுண்டெழுந்த அளுநன் கொலை செய்ய ஆணை பிறப்பித்தான் .
வாலன்டைன் ஏறக்குறைய 270 ஆம் ஆண்டு பிப்ரவரி 14 அன்று தலை வெட்டப்பட்டுக் கொலை செய்யப்பட்டார் . நகர வாயிலில் இருந்து அரை கிலோ மீட்டர் தள்ளி இருந்த சுரங்கக் கல்லறையில் அவரது உடலை அடக்கம் செய்தார்கள். நான்காம் நூற்றாண்டில் அந்த இடத்தை திருத்தந்தை முதலாம் ஜூலியஸ் பூமிக்கு அடியில் பேராலயம் ஒன்றை எழுப்பினார் .அது திருத்தந்தை முதலாம் ஹனோரியஸ் என்பவரால் ஏழாம் நூற்றாண்டில் புதுப்பிக்கப்பட்டது. காலப்போக்கில் காதலர்கள் தங்கள் பாதுகாவலராகவே வாலன்டைனை நினைத்துப் போற்றினார்கள் .இன்று வரை அது தொடர்கிறது .
காதல் என்பது புனிதமான உணர்வு அதனை இச்சை க்குரியதாய் மாற்றாமல் உணர்வுப் பரிமாற்றமாக்கிக் கொண்டால் ஆனந்தம் ஆனந்தமே.
No comments:
Post a Comment