புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

07 June 2020

புனித வில்லிபால்ட் (700-787) June 7

ஜூன் 7 

புனித வில்லிபால்ட் (700-787)
இங்கிலாந்து நாட்டைச் சார்ந்தவர் இவர்.

இவர் பிறந்த மூன்றாவது ஆண்டில், இவருக்குக் கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்டது. எல்லாரும் இவர் இறந்துவிடுவார் என்று நினைத்துக்கொண்டிருந்தபொழுது, இவருடைய பெற்றோர் இறைவனிடத்தில்,  "என் மகன் இவன் பிழைத்துக்கொண்டால், அவனை நாங்கள் உம்முடைய பணிக்குத் தந்துவிடுகின்றோம்" என்று சொல்லி மன்றாடினார்கள்.

இவர்கள் வேண்டியது போன்றே, வில்லிபால்ட் பிழைத்துக் கொண்டார். இதனால் இவரது பெற்றோர் இவரை இறைப்பணிக்கு அர்ப்பணித்தார்கள்.

சில காலத்துக்குப் பிறகு இவரும் இவருடைய தந்தையும் உரோமைக்கும் எருசலேமுக்கும் திருப்பயணம் மேற்கொண்டார்கள். போகிற வழியில் இவருடைய தந்தை இறந்துவிட, அவரை இவர் புதைத்துவிட்டு, தொடர்ந்து திருப்பயணம் மேற்கொண்டார். இப்படி இவர் தனியாகப் போகிறபோது, ஓரிடத்தில் இவரை உளவாளி என்று நினைத்துக் கைது செய்து, ஓரிரு ஆண்டுகள் சிறை வைத்தார்கள்.

சிறையிலிருந்து விடுதலையான பின் இவர், தன் சொந்த நாட்டிற்கு வந்து, தன்னுடைய தாயின் வழிகாட்டுதலின் பேரில், ஜெர்மனியில் இருந்த தன்னுடைய உறவினரான புனித போனிப்பாஸைச் சந்தித்தார். அவர் இவரை ஈஸ்டேட் என்ற பகுதியில் ஆயராக நியமித்தார்.

அங்கு இவர் ஏறக்குறைய 40 ஆண்டுகள் இறைப்பணியையும் மக்கள்பணியையும் ஒருங்கே செய்தார். தொடக்கத்தில் அப்பகுதியில் இவர் பணிகளைச் செய்தபோது, மிகப்பெரிய அளவில் சவால்களை சந்தித்தார்; ஆனாலும், இவர் மன உறுதியோடு இருந்து, ஆயர் பணியை சிறப்பாகச் செய்து நிறைவு செய்தார்.

இவர் 787 ஆம் ஆண்டு இறையடி சேர்ந்தார்.

No comments:

Post a Comment