புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

05 October 2020

புனித அன்னா செபர் (1882-1925)அக்டோபர் 05

புனித அன்னா செபர் (1882-1925)

அக்டோபர் 05

இவர் ஜெர்மனியில் உள்ள பவேரியா என்ற இடத்தில் பிறந்தவர். 
இவரது தந்தை ஒரு தச்சர். தான் செய்து வந்த தச்சுத்தொழிலின் மூலமாக குடும்பத்தைக்  காப்பாற்றி வந்த இவர், திடீரென இறந்து போனதால், குடும்பச்சுமை அன்னா செபரின் தோளில் விழுந்தது. இதனால்  இவரால் பள்ளிப் படிப்பைப் பாதியிலேயே கைவிடவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

சிறு வயதில் இவர் துறவியாகப் போக வேண்டும் என்றும் கனவு கண்டிருந்தார்; ஆனால் தன் தந்தை திடீரென இறந்து போனதால், இவரது கனவு கனவாகவே போனது. 

இதற்குப் பிறகு இவர் அக்கம் பக்கத்து வீடுகளில் கிடைத்த சிறு சிறு வேலைகளைச் செய்து, அதன் மூலம் கிடைத்த வருமானத்தைக் கொண்டு, தன்னுடைய குடும்பத்திற்கு உறுதுணையாக இருந்தார். 

1898 ஆம் ஆண்டு இவர் ஒரு காட்சி கண்டார். அக்காட்சியில் இயேசு இவரிடம், "நீ உன்னுடைய வாழ்வில் துன்பங்களுக்கு மேல் துன்பங்களைச் சந்திப்பாய்" என்று சொல்லிவிட்டு மறைந்தார். இதற்குப் பிறகு இவருக்கு ஒரு விபத்து ஏற்பட்டது. அதில் இவர் மிகவும் பாதிக்கப்பட்டார். 1901 ஆம் ஆண்டு இவர் தெரியாமல் கொதித்துக் கொண்டிருந்த நீருக்குள் விழுந்துவிடவே இவருடைய கால்கள் முடமாகின. 

இப்படி இவர் தொடர் துன்பங்களைச் சந்தித்துப் படுக்கையில் கிடந்தாலும், இவர் தன்னைச் சந்திக்க வந்தவர்களுக்கு நல்ல முறையில் ஆலோசனைகளைக் கூறி அவர்களை நல்வழிப்படுத்தினார். தொடர்ந்து இவர் ஐந்து காய வரங்களைப் பெற்றார். அவற்றைப் பெற்றுக்கொண்டபிறகு, இவர் யாருக்கும் காட்டிக் கொள்ளாமல் மறைவாக வைத்திருந்தார்.

இப்படிப் பல்வேறு துன்பங்களைச் சந்தித்து வந்தாலும், ஆண்டவர்மீது கொண்ட நம்பிக்கையில் மிக உறுதியாக இருந்தும், தன்னிடத்தில் வந்த மக்களுக்கு நல்ல முறையில் ஆலோசனைகளைச் சொல்லியும் வந்த இவர் 1925 ஆம் ஆண்டு இறையடி சேர்ந்தார். இவருக்கு 2012 ஆம் ஆண்டு திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் அவர்களால் புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டது.

Anna was a Laywoman and was paralyzed during an industrial accident in 1901. From her bed she carried out an apostalate through corresondence. Anna was known for her devotion to the Sacred Heart.

No comments:

Post a Comment