புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

05 October 2020

புனித புளோரா St.Flora, Virgin. October 5

இன்றைய புனிதர்
2020-10-05
05 புனித புளோரா St.Flora, Virgin

பிறப்பு
1309,
பிரான்ஸ்
இறப்பு
1347
பாதுகாவல்: தனிமையில் வாழும் பெண்கள், கைவிடப்பட்டவர்கள்
இவர் பெற்றோர் இவரை, சிறு வயதிலிருந்தே பக்தியில் வளர்த்தனர். இவர் வளர்ந்த பின்னர், இவரின் பெற்றோர், இவரை திருமணம் செய்துவைக்க ஏற்பாடு செய்தனர். இதனை அறிந்த புளோரா பெற்றோரை எதிர்த்தார். தான் பிறந்த வீட்டைவிட்டு வெளியேறி, தாதியர் படிப்பைப் படிக்க சென்றார். 1324 ஆம் ஆண்டில் ஜெருசலேம் புனித ஜான் மருத்துவ பள்ளியில் தனது படிப்பை முடித்தார். பிறகு அவர் பல சோதனைகளுக்கு ஆளாக்கப்பட்டார். மன அழுத்தத்தால் மிகவும் பாதிக்கப்பட்டார். பிறகு துறவறத்தைச் சார்ந்த அருட்சகோதரிகளால் கவனிக்கப்பட்டு, கடவுளின் அருளால் குணம் பெற்றார்.

புளோரா பலமுறை இறைவனிடமிருந்து காட்சிகளைப் பெற்றார். ஒருமுறை அனைத்துப் புனிதர்களின் விழாவன்று, சுவையான உணவுகளை உண்ணமாட்டேனென்றும், கடவுளின் அருளை மேலும் பெற, உண்ணா நோன்பு இருப்பேனென்றும், தனக்குள் உறுதி எடுத்துக்கொண்டார். பின்னர் ஒருமுறை செபித்துக்கொண்டிருக்கும்போது, தூய ஆவியால் தூண்டப்பட்டு, தரையிலிருந்து நான்கு அடி உயரத்திற்கு பறந்தார். என்று, அங்கு கூடியிருந்தோர் தெரிவித்தனர்.

இயேசுவின் திருக்காயங்களிலிருந்து வழிந்தோடிய, திரு இரத்தத்தைப்போலவே, இவரின் கைகளிலிருந்தும், வழிந்தோடியது என்று கூறப்படுகின்றது. இறைவனிடமிருந்து பெற்ற தீர்க்கதரிசனத்தால் எதிர் காலத்தில், என்ன நடக்க உள்ளது என்பதை, முன்னதாகவே அறிவித்தார். இவர் மிகவும் எளிமையான வாழ்வை வாழ்ந்தார். இயேசுவின் திருவுடலைப் பெற்றபின், தாழ்ச்சியோடு, தன்னை அவரிடம் அர்ப்பணித்தார். இறைவனிடம் இவர் கொண்டிருந்த பக்தியையும், விசுவாசத்தையும் கண்டு, இவரை பலர், தங்களது ஆன்மீக வழிகாட்டியாகத் தேர்த்தெடுத்தனர். இவர் வாழ்ந்தபோதும், இறந்தபின்பும் பல அற்புதங்களை செய்தார்.


செபம்:
வழிநடத்தும் தெய்வமே! எதிர்காலத்தில் நடக்க இருப்பவற்றை, முங்கூட்டியே அறிவிக்கும் பேற்றை புனித புளோராவிற்கு அருளினீர். பலரின் வாழ்வில், ஆன்மாவிற்கு வழிகாட்டியாக திகழ்ந்த இப்புனிதரைப்போல இன்றும் ஆன்மீக வழிகாட்டிகளாக திகழும். உம் சீடர்களை, உம் பாதுகாப்பில் வைத்து வழிநடத்தும் தூய ஆவியின் அருளையும், வரங்களையும், கொடையையும் பொழிந்து, வழிநடத்தியருள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.




இந்நாளில் நினைவுகூறப்படும் பிற புனிதர்கள்

• அன்னா ஷேஃபர் Anna Schäffer
பிறப்பு: 18 பிப்ரவரி 1882, மிண்டல்ஷ்டேட்டன் Mindelstätten, ஜெர்மனி
இறப்பு: 5 அக்டோபர் 1925, மிண்டல்ஷ்டேட்டன், ஜெர்மனி


• சமோரா ஆயர் அட்டில்லா Attila von Zamora
பிறப்பு: 9 ஆம் நூற்றாண்டு, தாராகோனா Tarragona, ஸ்பெயின்
இறப்பு: 5 அக்டோபர் 915, சமோரா, ஸ்பெயின்
புனிதர்பட்டம்: 1095 ஆம் ஆண்டு


• உரோம் நகர் காலா Galla von Rom
பிறப்பு: 500, உரோம், இத்தாலி
இறப்பு: 560, உரோம், இத்தாலி
பாதுகாவல்: விதவைகள்


• சுபியாகோ நகர் துறவி பிளாசிடஸ் Placidus von Subiaco OSB
பிறப்பு: 6 ஆம் நூற்றாண்டு, இத்தாலி
இறப்பு: 6 ஆம் நூற்றாண்டு, சுபியாகோ Subiaco, இத்தாலி
பாதுகாவல்: கப்பலோட்டிகள்


St. Flora, Virgin, Patron of the abandoned, of converts, single laywomen, and victims of betrayal - Feast day is October 5th. Flora was born in France about the year 1309. She was a devout child and later resisted all attempts on the part of her parents to find a husband for her. In 1324, she entered the Priory of Beaulieu of the Hospitaller nuns of St. John of Jerusalem. Here she was beset with many and diverse trials, fell into a depressed state, and was made sport of by some of her religious sisters. However, she never ceased to find favor with God and was granted many unusual and mystical favors. One year on the feast of All Saints, she fell into an ecstasy and took no nourishment until three weeks later on the feast of St. Cecelia. On another occasion, while meditating on the Holy Spirit, she was raised four feet from the ground and hung in the air in full view of many onlookers. She also seemed to be pierced with the arms of Our Lord's cross, causing blood to flow freely at times from her side and at others, from her mouth. Other instances of God's favoring of his servant were also reported, concerning prophetic knowledge of matters of which she could not naturally know. Through it all, St. Flora remained humble and in complete communion with her Divine Master, rendering wise counsel to all who flocked to her because of her holiness and spiritual discernment. In 1347, she was called to her eternal reward and many miracles were worked at her tomb.

No comments:

Post a Comment