புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

05 October 2020

மரிய பவுஸ்தீனா கோவால்ஸ்கா (கன்னியர்)நினைவுத் திருநாள் : 5 அக்டோபர்

இன்றைய புனிதர்:
(05-10-2020)

மரிய பவுஸ்தீனா கோவால்ஸ்கா (கன்னியர்)
நினைவுத் திருநாள் : 5 அக்டோபர்
பிறப்பு: 25 ஆகஸ்ட், 1905, குலோகோவிச், உருசிய பேரரசு

இறப்பு : 5 அக்டோபர், 1938(அகவை 33)கார்க்கோ, போலந்து

அருளாளர் பட்டம் : 18 ஏப்ரல் 1993
(திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர்)

புனிதர் பட்டம் : 30 ஏப்ரல் 2000,வத்திக்கான்
(திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர்)

பாதுகாவல் : உலக இளையோர் நாள்

மரிய பவுஸ்தீனா கோவால்ஸ்கா (ஆகஸ்ட் 25 1905 - அக்டோபர் 5 1938), போலந்து நாட்டில் பிறந்த கத்தோலிக்க அருட்சகோதரியும், இறைக்காட்சியாளரும், கத்தோலிக்க திருச்சபையின் புனிதரும் ஆவார். இவர் இறை இரக்கத்தின் தூதர் என்றும் அழைக்கப்படுகின்றார்.
இவர் தன் வாழ்நாள் முழுவதும் இயேசுவை பல காட்சிகளில் கண்டதாகவும் அவரோடு உரையாடியதாகவும் கூறியுள்ளார். இக்காட்சிகளை இவர் தனது நாட்குறிப்பேட்டில் எழுதி வைத்துள்ளார். 

இக்குறிப்புகள் பின்னாளில்Diary: Divine Mercy in My Soul என்னும் பெயரில் புத்தகமாக வெளியிடப்பட்டது. 
தனது 20ஆம் அகவையில் வார்சாவிலிருந்த கன்னியர் மடத்தில் சேர்ந்த இவர், பின்னாளில் ப்லாக் நகருக்கு மாற்றப்பட்டார். இவருக்கு மிக்கேல் ஸ்போகோ என்பவர் ஆன்ம குருவாக நியமிக்கப்பட்டார். இவரின் துணையாலேயே கோவால்ஸ்காவின் காட்சிகளில் விவரித்தபடி முதல் இறை இரக்கத்தின் படம் வரையப்பட்டது. மேலும் முதல் இறை இரக்கத்தின் நாள் (உயிர்ப்பு பெருவிழாவுக்கு அடுத்த ஞாயிறு) 
திருப்பலியில் இவரால் அப்படம் பயன்படுத்தப்பட்டது. 
இவர் தனது நாட்குறிப்பேட்டில், இவரின் செய்தி சிலகாலங்களுக்கு திருச்சபையினால் முடக்கப்பட்டு பின் ஏற்கப்படும் என முன்னுரைத்திருப்பது குறிக்கத்தக்கது. 

அவ்வன்னமே இவர் இறந்து 20 ஆண்டுகளுக்குப் பின் இவரின் பக்தி முயற்சிகள் கத்தோலிக்க திருச்சபையினால் தடைசெய்யப்பட்டது. 1978ஆம் ஆண்டு திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பரால் மீண்டும் பரிசீலிக்கப்பட்டு தடை நீக்கப்பட்டது. அப்போது இரண்டாம் உலகப்போர் நடந்து கொண்டிருந்ததாலும், போலந்தில் பொதுவுடமை வாதம் தழைக்க துவங்கியதாலும் வத்திக்கானுக்கும் போலந்து நாட்டுக்கும் இடையே இருந்த தொடர்பில் சிக்கல் ஏற்பட்டதால், இவரின் நாட்குறிப்பேட்டை மொழிபெயர்க்கும் போது பிழை ஏற்பட்டது. இதனால் இக்குழப்பம் நேர்ந்ததாகவும் அது கண்டு பிடிக்கப்பட்டதினால் தடை நீக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது.

இவருக்கு 30 ஏப்ரல் 2000 அன்று புனிதர் பட்டம் அளிக்கப்பட்டது. இவரே 21ம் நூற்றாண்டின் முதல் புனிதராவார். இவரின் விழா நாள் அக்டோபர் 5 ஆகும்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.

Saint of the Day: (05-10-2020)

Saint Faustina Kowalska

Third of ten children, she attended only three years of school. As a teenager, she worked as a domestic servant for other families. After being rejected by several religious orders, she became a nun in the Congregation of the Sisters of Our Lady of Mercy in Warsaw, Poland on 1 August 1925; the Congregation is devoted to care and education of troubled young women. She changed her name to Sister Maria Faustina of the Most Blessed Sacrament. During her 13 years in various houses, she was a cook, gardener, and porter.

She had a special devotion to Mary Immaculate, to the Sacrament, and to Reconciliation, which led to a deep mystical interior life. She began to have visions, receive revelations, and experience hidden stigmata. She began recording these mystical experiences in a diary; being nearly illiterate, it was written phonetically, without quotation marks or punctuation, and runs to nearly 700 pages. A bad translation reached Rome in 1958, and was labelled heretical. However, when Karol Wojtyla (Pope John Paul II) became Archbishop of Krakow, he was besieged by requests for a reconsideration. He ordered a better translation made, and Vatican authorities realized that instead of heresy, the work proclaimed God's love. It was published as Divine Mercy in my Soul.

In the 1930's, Sister Faustina received a message of mercy from Jesus that she was told to spread throughout the world, a message of God's mercy to each person individually, and for humanity as a whole. Jesus asked that a picture be painted of him with the inscription: "Jesus, I Trust in You." She was asked to be a model of mercy to others, to live her entire life, in imitation of Christ's, as a sacrifice. She commissioned this painting in 1935, showing a red and a white light shining from Christ's Sacred Heart.

Apostles of Divine Mercy is a movement of priests, religious, and lay people inspired by Faustina's experiences; they spread knowledge of the mystery of Divine Mercy, and invoke God's mercy on sinners. Approved in 1996 by the Archdiocese of Krakow, it has spread to 29 countries.

Born : 
25 August 1905 at Glogowiec, Poland as Elena (Helena) Kowalska

Died: 
5 October 1938 at Krakow, Poland of tuberculosis

Beatitude : 

18 April 1993 by Pope John Paul II
• her beatification miracle involved the cure of Maureen Digan who suffered Milroy's disease, a hereditary form of lymphedema that cost her a leg

Canonized: 
30 April 2000 by Pope John Paul II
• her canonization miracle involved the cure of Father Ronald P. Pytel's heart condition.

---JDH---Jesus the Divine Healer---

No comments:

Post a Comment