புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

05 October 2020

✠ அருளாளர் ஃபிரான்சிஸ் சேவியர் சீலோஸ் ✠(Blessed Francis Xavier Seelos) October 5

† இன்றைய புனிதர் †
(அக்டோபர் 5)

✠ அருளாளர் ஃபிரான்சிஸ் சேவியர் சீலோஸ் ✠
(Blessed Francis Xavier Seelos)
மறைப்பணியாளர், குரு, மிஷனரி:
(Religious, Priest and Missionary)

பிறப்பு: ஜனவரி 11, 1819
ஃப்யுஸ்சென், பவேரியா அரசு, ஜெர்மன் நேசநாடுகளின் கூட்டமைப்பு
(Füssen, Kingdom of Bavaria, German Confederation)

இறப்பு: அக்டோபர் 4, 1867
நியூ ஓர்லியன்ஸ், லூசியானா, ஐக்கிய அமெரிக்கா
(New Orleans, Louisiana, United States)

ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)

முக்திபேறு பட்டம்: ஏப்ரல் 9, 2000
திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுல்
(Pope John Paul II)

முக்கிய திருத்தலம்:
அருளாளர் ஃபிரான்சிஸ் சேவியர் சீலோஸ் தேசிய திருத்தலம்,
அன்னை மரியாள் விண்ணேற்பு ஆலயம், நியூ ஓர்லியன்ஸ், லூசியானா, ஐக்கிய அமெரிக்கா
(National Shrine of Blessed Francis Xavier Seelos, C.Ss.R.,
St. Mary's Assumption Church, New Orleans, Louisiana, United States)

நினைவுத் திருநாள்: அக்டோபர் 5

அருளாளர் ஃபிரான்சிஸ் சேவியர் சீலோஸ், ஐக்கிய அமெரிக்க நாடுகளின் எல்லைகளில் (United States Frontier) மறைப்பணியாற்றிய, ஜெர்மன் மகா பரிசுத்த மீட்பரின் சபையைச் (German Redemptorist) சேர்ந்த கத்தோலிக்க குரு ஆவார். தமது வாழ்க்கையின் முடிவில், அவர் மஞ்சள் காய்ச்சல் (Yellow Fever) நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சேவை செய்வதற்காக நியூ ஓர்லியன்ஸ் (New Orleans) சென்றார். பின்னர், அந்நோயால் பாதிக்கப்பட்ட அவர், அங்கேயே மரித்தார்.

கி.பி. 1819ம் ஆண்டு, ஜனவரி மாதம், 11ம் நாளன்று, “பவேரியா” (Kingdom of Bavaria) நாட்டில் “ஃப்யுஸ்சென்” (Füssen) நகரில் பிறந்த இவருடைய பெற்றோர், "மாங்க் சீலோஸ்" (Mang Seelos) மற்றும் "ஃபிரான்சிஸ்கா ஸ்கார்ஸ்ஸன்பாக்" (Franziska Schwarzenbach) ஆவர். இவர், தமது பெற்றோருக்குப் பிறந்த 12 குழந்தைகளில் ஒருவர் ஆவார். பிறந்த அன்றே திருமுழுக்குப் பெற்ற இவர், ஆக்ஸ்பர்க் (Augsburg) நகரிலுள்ள செயிண்ட் ஸ்டீஃபன் நடுநிலைப் (Institute of Saint Stephen) பள்ளியில் ஆரம்ப கல்வி பயின்றார். கி.பி. 1839ம் ஆண்டு, கல்வியில் தமது டிப்ளோமோ பட்டயம் வென்ற இவர், மேல் படிப்புக்காக “மியூனிச்” (Munich) நகரிலுள்ள பல்கலை சென்று, தத்துவ பாடங்களில் தமது கல்வியை நிறைவு செய்தார். குழந்தை பருவத்திலிருந்தே குருத்துவ வாழ்க்கையில் தமது விருப்பத்தை வெளிப்படுத்தி வந்த அவர், கி.பி. 1842ம் ஆண்டு, செப்டம்பர் மாதம், 19ம் தேதி, மறைமாவட்ட ஆயரக செமினரியில் இணைந்தார்.

கத்தோலிக்க செய்தித்தாளான சீயோனில் (Sion) வெளியிடப்பட்ட கடிதங்களால் ஈர்க்கப்பட்ட சீலோஸ், ஆயிரக்கணக்கான ஜெர்மன் மொழி பேசும் புலம்பெயர்ந்த மக்களுக்கு, மகா பரிசுத்த மீட்பரின் சபையைச் (German Redemptorist) சேர்ந்த  மிஷனரிகளிடமிருந்து ஆன்மீக கவனிப்புகளும் சேவைகளும் கிடைக்காத நிலை விவரிக்கப்பட்டிருந்ததை அறிந்திருந்தார். "அல்டோட்டிங்" (Altötting) நகரிலுள்ள மகா பரிசுத்த மீட்பரின் சபை இல்லத்துக்கு வருகை தந்த பின்னர், அச்சபையில் இணைய முடிவு செய்த சீலோஸ், ஐக்கிய அமெரிக்க நாடுகளில் ஒரு மிஷனரியாக பணியாற்ற அனுமதி வேண்டினார். கி.பி. 1842ம் ஆண்டு, நவம்பர் மாதம், 22ம் தேதியன்று, அச்சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட சீலோஸ், அதற்கு அடுத்த வருடம் மார்ச் மாதம், 17ம் நாளன்று, கடல் பயணம் புறப்பட்டார். கி.பி. 1843ம் ஆண்டு, ஏப்ரல் மாதம், 20ம் நாளன்று, நியூயார்க் (New York) நகர் வந்து சேர்ந்தார். கி.பி. 1844ம் ஆண்டு, டிசம்பர் மாதம், 22ம் தேதி, தனது புகுமுக துறவறம் (Novitiate) மற்றும் இறையியல் படிப்புகளை நிறைவுசெய்த பிறகு, பால்டிமோர் (Baltimore) நகரிலுள்ள செயின்ட் ஜேம்ஸ் மீட்பர் ஆலயத்தில், சீலோஸ் குருத்துவ அருட்பொழிவு பெற்றார்.

குருத்துவம் பெற்ற பிறகு, சீலோஸ், பென்சில்வேனியா (Pennsylvania), பிட்ஸ்பர்க் (Pittsburgh), புனித ஃபிலோமினா (Parish of St. Philomena) ஆலய பங்கில் ஒன்பது ஆண்டுகள் பணிபுரிந்தார். முதலில், "ரெடிம்ப்டரிஸ்ட்" சமூகத்தின் (Redemptorist community) தலைவராக இருந்த புனிதர் ஜான் நியூமனுக்கு (St. John Neumann) உதவி பங்குத் தந்தையாகவும், பின்னர், தாமே அச்சமூகத்தின் தலைவராகவும், பிறகு மூன்று ஆண்டுகள் போதகராகவும் பணியாற்றினார். இந்த காலகட்டத்தில், அவர் ரெடிம்ப்டரிஸ்ட் புதுமுக துறவியரின் தலைவராகவும் (Redemptorist Novice master) இருந்தார். நியூமனுடன், அவர் பிரசங்க பணிகளுக்கு தன்னை அர்ப்பணித்திருந்தார். "அவர் என்னை தீவிரமான நடைமுறை வாழ்க்கைக்கு அறிமுகப்படுத்தினார்" என்றும், "அவர் ஒரு ஆன்மீக இயக்குனராகவும், ஒப்புரவாளராகவும் என்னை வழிநடத்தியிருக்கிறார்" என்றும், நியூமனுடனான தமது உறவைப் பற்றி சீலோஸ் இவ்வாறு கூறினார்.

விசுவாசத்தின் தேவைகளைப் புரிந்துகொள்வதில் உள்ளார்ந்த தயவுள்ளவராகவும், ஆன்மீக இயக்குநராகவும் சீலோஸ் நன்கு அறியப்பட்டார், அண்டை நகரங்களிலிருந்தும் கூட மக்கள் அவரைத் தேடி வந்தார்கள். ஜெர்மன், ஆங்கிலம், மற்றும் பிரஞ்சு மொழிகளிலும், வெள்ளை மற்றும் கறுப்பு இன மக்கள் என்று அனைத்து மக்களின் பாவ சங்கீர்த்தனங்களையும் கேட்டு ஒப்புரவு அருட்சாதனம் வழங்கினார். ஒரு எளிய வாழ்க்கைமுறையை கடைப்பிடித்த அவர், தன்னை ஒரு எளிய முறையிலேயே வெளிப்படுத்தினார். அவருடைய பிரசங்கத்தின் கருப்பொருட்கள், விவிலிய உள்ளடக்கம் நிறைந்தவை. அவை எளிமையான மக்களால் எப்போதும் புரிந்துகொள்ளப்பட்டன. எப்போதும் சிரித்த முகத்துடனும் தாராள இதயமும் கொண்டவராக விவரிக்கப்பட்ட சீலோஸ், தேவையில் உள்ளவர்களுக்கு உதவுவதிலும் முன்னணியில் இருந்தார்.

இவரது குருத்துவ நடவடிக்கைகளில் ஒரு நிலையான முயற்சி,  குழந்தைகளை விசுவாசத்தில் அறிவுறுத்தியது ஆகும். சீலோஸ் தமது ஊழியத்தை ஆதரித்தது மட்டுமல்லாமல், அவர் திருச்சபையில் கிறிஸ்தவ சமுதாயத்தின் வளர்ச்சிக்காக இதனை அடிப்படையாகக் கொண்டிருந்தார். எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த எதிர்கால ரெடிம்ப்டரிஸ்ட் மிஷனரிகள் அவர் உற்சாகம், தியாக மனப்பான்மை மற்றும் மக்களுடைய ஆன்மீக மற்றும் உலக சம்பந்தமான லௌகீக நலன்களுக்கான திருத்தூதுப் பணிகளில் கடினமாக ஈடுபட்டிருந்தார். அவர், கனெக்டிகட் (Connecticut), இல்லினாய்ஸ் (Illinois), மிச்சிகன் (Michigan), மிசூரி (Missouri), நியூ ஜெர்சி (New Jersey), நியூயார்க் (New York), ஓஹியோ (Ohio), பென்சில்வேனியா (Pennsylvania), ரோட் தீவு (Rhode Island) மற்றும் விஸ்கான்சின் (Wisconsin) மாநிலங்களில் ஆங்கிலம் மற்றும் ஜெர்மனி மொழிகளில் பிரசங்கிக்கின்ற ஒரு, ஊர் விட்டு ஊர் செல்லும் நாடோடி மிஷனரி (Itinerant Missionary) வாழ்க்கைக்கு தன்னை அர்ப்பணித்தார்.

கி.பி. 1867ம் ஆண்டு, செப்டம்பர் மாதம், மஞ்சள் காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டவர்களை பார்க்கச் சென்று, அவர்களுக்கு உதவுவதிலும் சேவை செய்வதிலும் முழுமூச்சாய் இருந்த சீலோஸ், இறுதியில் தாமும் அதே மஞ்சள் காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டார். பல வாரங்கள் நோயில் உழன்ற சீலோஸ், கி.பி. 1867ம் ஆண்டு, அக்டோபர் மாதம், 4ம் தேதியன்று, தமது 48 வயதில் மரித்தார்.

Saint Francis Xavier Seelos

Patron Saint against cancer

Francis Xavier Seelos was born in Fussen, Germany, in 1819. Expressing his desire for the priesthood since an early age, he entered the diocesan seminary of Augsburg after completing his studies in philosophy. Upon learning of the charism and missionary activity of the Congregation of the Most Holy Redeemer, he decided to join and go to North America. He arrived in the United States on April 20, 1843, entered the Redemptorist novitiate and completed his theological studies, being ordained a priest on December 22, 1844. He began his pastoral ministry in Pittsburgh, Pennsylvania, where he remained nine years, working closely as assistant pastorof his confrere St. John Neumann, while at the same time serving as Master of Novices and dedicating himself to mission preaching. In 1854, he returned to Baltimore, later being transferred to Cumberland and then Annapolis, where he served in parochial ministry and in the formation of the Redemptorist seminarians. He was considered an expert confessor, a watchful and prudent spiritual director and a pastor always joyfully available and attentive to the needs of the poor and the abandoned. In 1860, he was a candidate for the office of Bishop of Pittsburgh. Having been excused from this responsibility by Pope Pius IX, from 1863 until 1866 he became a full-time itinerant missionary preacher. He preached in English and German in the states of Connecticut, Illinois, Michigan, Missouri, New Jersey, New York, Ohio, Pennsylvania, Rhode Island, and Wisconsin. He was named pastor of the Church of St. Mary of the Assumption in New Orleans, Louisiana, where he died of the yellow fever epidemic caring for the sick and the poor of New Orleans on October 4, 1867, at the age of 48 years and nine months. The enduring renown for his holiness which the Servant of God enjoyed occasioned his Cause for Canonization to be introduced in 1900 with the initiation of the Processo Informativo . On January 27, Your Holiness declared him Venerable, decreeing the heroism of his virtues.

No comments:

Post a Comment