புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

07 November 2020

புனித_அக்கிலஸ் (-313)நவம்பர் 07

புனித_அக்கிலஸ் (-313)

நவம்பர் 07

இவர் எகிப்தில் உள்ள அலெக்சாந்திரியா நகரைச் சார்ந்தவர்.
கல்வியிலும் இறைப் பற்றிலும் சிறந்து விளங்கிய இவர், முதலில் அலெக்சாந்திரியா நகரின் ஆயராகவும், பின்னர் பதினெட்டாவது திருத்தந்தையாகவும் உயர்த்தப்பட்டார். 

இவருடைய காலத்தில் திரு அவைக்குப் பல தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் வந்தன. குறிப்பாக ஆரியன் என்ற குருவானவர் இயேசு கிறிஸ்துவின் இறைத் தன்மையை மறுத்து வந்தார். அவரை எதிர்த்து  இவர் போராடியதால், அவர் தன்னோடு ஒருசிலரைச் சேர்த்துக் கொண்டு இவருக்கு எதிராகக் கிளர்ச்சி செய்தார். அப்படிப்பட்ட சூழ்நிலையிலும் இவர் மனவுறுதி இருந்து, அவரையும், அவருடைய தப்பறைக் கொள்கையையும் முறியடித்தார். 

இப்படித் திருஅவையைத் தப்பறைக் கொள்கையிலிருந்தும், எதிரிகளிடமிருந்தும் காப்பாற்றிய இவர், 313 ஆம் ஆண்டு இறையடி சேர்ந்தார்.

புனித அத்தனாசியஸ் இவரிடமிருந்த அறிவையும் ஞானத்தையும் பார்த்துவிட்டு, இவரை பெரிய அக்கிலஸ் என்று அழைப்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment