புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

07 November 2020

Saint Cybi of Caenarvon November 8

 Saint Cybi of Caenarvon


புனித_சிபி (ஆறாம் நூற்றாண்டு)


நவம்பர் 08


இவர் இங்கிலாந்து நாட்டிலுள்ள கோன்வால் என்ற இடத்தில் பிறந்தவர். இவரது தந்தை கோன்வாலை ஆட்சிசெய்த மன்னர் என்பது குறிப்பிடத்தக்கது.


சிறுவயதிலிருந்தே இறைவன்மீது மிகுந்த பற்றுக்கொண்டு வாழ்ந்த இவர் வளர்ந்து பெரியவரானபோவது, உரோமைக்கும் எருசலேமிற்கும் திருப்பயணம் மேற்கொண்டார். அங்கு இவர் ஒரு சில துறவிகளின் வாழ்வால் தூண்டப்பெற்று, துறவியாகவும் பின்னாளில் ஆயராகவும் உயர்ந்தார்.


ஆயராக உயர்ந்த பிறகு இவர் தன்னுடைய சொந்த நாட்டிற்குத் திரும்பி வந்தார். அப்பொழுது இவரது தந்தை இறந்ததை அறிந்து, சில நாள்களுக்கு இவர் கோன்வாலின் மன்னராக இருந்தார்.


அது இவருக்கு மனநிறைவைத் தராததால், அவ்வாழ்க்கையைத் துறந்துவிட்டு, பல்வேறு இடங்களுக்கச் சென்று நற்செய்தி அறிவித்தார். பல கோயில்களைக் கட்டியெழுப்பினார். இவ்வாறு இறைப்பணிக்கென தன்னை முழுவதும் அர்ப்பணித்த இவர், 555 ஆம் ஆண்டு இறையடி சேர்ந்தார்.

Also known as

Cuby, Gybi, Kebius, Kybi


Additional Memorial

13 August in Cornwall


Profile

May have been the son of Saint Selevan; may have been the cousin of Saint David of Wales. Itinerent hermit, evangelist, monk and abbot. Found of the monastery of Caer Gybi (Cybi's Fort) at Holyhead, Anglesey, Wales, located within the walls of an ancient Roman fort, and is still venerated there. Missionary bishop to the area around the monastery. Friend of Saint Seiriol. Many exaggerated stories grew up around him.


Born

6th century Cornish

No comments:

Post a Comment