புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

07 November 2020

Blessed John Duns Scotus November 8

 Blessed John Duns Scotus


† இன்றைய புனிதர் †

(நவம்பர் 8)


✠ அருளாளர் ஜான் டுன்ஸ் ஸ்கோட்டஸ் ✠

(Blessed John Duns Scotus)


தத்துவஞானி & இறையியலாளர்:

(Philosopher & Theologian)


பிறப்பு: கி.பி. 1266

துன்ஸ், பெர்விக், ஸ்காட்லாந்து அரசு

(Duns, Berwick, Kingdom of Scotland)


இறப்பு: நவம்பர் 8, 1308

கொலோன், புனித ரோம பேரரசு

(Cologne, Holy Roman Empire)


ஏற்கும் சமயம்: 

ரோமன் கத்தோலிக்க திருச்சபை

(Roman Catholic Church)


அருளாளர் பட்டம்: மார்ச் 20, 1993

திருத்தந்தை இரண்டாம் ஜான் பால்

(Pope John Paul II)


முக்கிய திருத்தலம்:

ஃபிரான்சிஸ்கன் தேவாலயம், கொலோன், ஜெர்மனி

(Franciscan Church, Cologne, Germany)


நினைவுத் திருநாள்: நவம்பர் 8


பொதுவாக, டுன்ஸ் ஸ்கோட்டஸ் என்று அழைக்கப்படும் ஜான் டுன்ஸ், “உயர் மத்திய காலத்தைச்” (High Middle Ages) சேர்ந்த, மிகவும் பிரபலமான மூன்று தத்துவயியலாளர்கள் - இறையியலாளர்களில் ஒருவராவார். ஸ்கோட்டஸ் ரோமன் கத்தோலிக்க திருச்சபை மற்றும் மதச்சார்பற்றவர்களிடையே செல்வாக்கு பெற்றவராயிருந்தார். “இறைவன் உள்ளது” (Existence of God) பற்றியும், இறைவனின் அன்னை மரியாள் “ஜென்மப்பாவமின்றி கருத்தாங்கியது” (Immaculate Conception) பற்றியும் ஒரு சிக்கலான விவாதத்தை உருவாக்கியிருந்தார். இவருடைய ஊடுருவும் நுட்பமான சிந்தனை முறைக்காக, இவருக்கு (Doctor Marianus) எனும் முனைவர் பட்டம் தரப்பட்டது.


டுன்ஸ், கி.பி. 1291ம் ஆண்டு, மார்ச் மாதம், 17ம் நாள், இங்கிலாந்தின் “நார்தம்ப்ட்டனிலுள்ள” (Northampton) “பெனடிக்டின் சீர்திருத்த இல்லமான” (Benedictine Reform) “தூய ஆண்ட்ரூ” துறவுமடத்தில் (St Andrew's Priory) குருத்துவ அருட்பொழிவு பெற்றார். பின்னர், “தெற்கின் ராணி” (Queen of the South) என்றழைக்கப்படும் “டும்ஃபிரீஸ்” (Dumfries) எனுமிடத்தில், தமது மாமன் “எலியாஸ் டுன்ஸ்” (Elias Duns) என்பவர் பாதுகாவலராக இருக்கும் ஃபிரான்சிஸ்கன் இளம் துறவியர் மடத்தில் துறவியர் சீருடைகளைப் பெற்றார்.


பாரம்பரியங்களின்படி, இவர் “ஆக்ஸ்ஃபோர்டு, “தூய எப்பேஸ் ஆலயத்தின்” (St. Ebbe's Church, Oxford) பின்பகுதியிலுள்ள ஃபிரான்சிஸ்கன் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றார்.


டுன்ஸ் ஸ்கோட்டஸ், ஆங்கிலேய திருச்சபை மாகாணத்தின் துறவிகள் குழுவில் பட்டியலிடப்பட்டிருந்ததால் கி.பி. 1300ல் ஆக்ஸ்ஃபோர்டில் இருந்தார். கி.பி. 1302ம் ஆண்டின் இறுதியில் "மதிப்புமிக்க பாரிஸ் பல்கலைக்கழகத்தில்" (Prestigious University of Paris) “பீட்டர் லொம்பார்ட்” வசனங்கள் (Peter Lombard's Sentences) குறித்து சொற்பொழிவாற்றத் தொடங்கினார்.


கி.பி. 1307ம் ஆண்டு, அக்டோபர் மாதம் அவர் மேற்கு ஜெர்மனியின் “கொலோன்” (Cologne) நகரிலுள்ள ஃபிரான்சிஸ்கன் பள்ளிக்கு பணிமாற்றல் செய்யப்பட்டார்.


டுன்ஸ் ஸ்கோட்டஸ், கி.பி. 1308ம் ஆண்டு, நவம்பர் மாதம், எதிர்பாராத விதமாக கொலோன் நகரில் இறந்தார். பிரசித்திபெற்ற “கொலோன் பேராலயத்தின்” (Cologne Cathedral) அருகேயுள்ள “ஃபிரான்சிஸ்கன் ஆலயத்தில்” (Franciscan church) அடக்கம் செய்யப்பட்டார்.

Also known as

• Doctor Subtilis

• Johannes Scotus

• The Subtle Doctor


Profile

Son of a wealthy farmer. Friar Minor at Dumfries where his uncle Elias Duns was superior. Studied at Oxford and Paris. Ordained 17 March 1291 at Saint Andrew's Church, Northampton at age 25. Lectured at Oxford and Cambridge from 1297 to 1301 when he returned to Paris to teach and complete his doctorate.


John pointed out the richness of the Augustinian-Franciscan tradition, appreciated the wisdom of Saint Thomas Aquinas, Aristotle and the Muslim philosophers, and still managed to be an independent thinker. His ideas led to the founding of a school of Scholastic thought called Scotism. In 1303 when King Philip the Fair tried to enlist the University of Paris on his side in a dispute with Pope Boniface VIII over the taxation of Church property, but John dissented and was given three days to leave France.


He returned to Paris in 1305, and received his doctorate. He then taught there, and in 1307 so ably defended the Immaculate Conception of Mary that the university officially adopted his position. Drawing on this work, Pope Pius IX solemnly defined the Immaculate Conception of Mary in 1854.


The Franciscan minister general assigned John to the Franciscan school in Cologne, Germany; he died there the next year.


Born

1266 at Duns, Berwick, Scotland


Died

• 8 November 1308 of natural causes at Cologne, North Rhine-Westphalia (in modern Germany)

• buried in a Franciscan church near the Cologne cathedral


Beatified

6 July 1991 by John Paul II (cultus confirmed)

No comments:

Post a Comment