புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

07 November 2020

✠ அல்காலா நகரின் புனிதர் டிடாக்கஸ் ✠(St. Didacus of Alcalá)ஸ்பேனிஷ் ஃபிரான்சிஸ்கன் பொதுநிலை அருட்சகோதரர்:(Spanish Franciscan Lay Brother)நவம்பர் 7

† இன்றைய புனிதர் †
(நவம்பர் 7)

✠ அல்காலா நகரின் புனிதர் டிடாக்கஸ் ✠
(St. Didacus of Alcalá)

ஸ்பேனிஷ் ஃபிரான்சிஸ்கன் பொதுநிலை அருட்சகோதரர்:
(Spanish Franciscan Lay Brother)
பிறப்பு: கி.பி. 1400
சேன் நிக்கோலஸ் டெல் புயேர்டோ, செவில் அரசு, கேஸ்டில் கிரீடம்
(San Nicolás del Puerto, Kingdom of Seville, Crown of Castile)

இறப்பு: நவம்பர் 12, 1463 (வயது 62-63)
அல்காலா டி ஹெனெரெஸ், டோலிடோ அரசு, கேஸ்டில் கிரீடம்
(Alcalá de Henares, Kingdom of Toledo, Crown of Castile)

ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)

புனிதர் பட்டம்: கி.பி. 1588
திருத்தந்தை ஐந்தாம் சிக்ஸ்டஸ்
(Pope Sixtus V)

முக்கிய திருத்தலம்:
எர்மிட்டா டி சான் டியாகோ, சான் நிக்கோலா டெல் பியூர்டோ, செவில், ஸ்பெய்ன்
(Ermita de San Diego, San Nicolás del Puerto, Seville, Spain)

நினைவுத் திருநாள்: நவம்பர் 6

பாதுகாவல்:
சான் டியாகோ ரோமன் கத்தோலிக்க மறைமாவட்டம் (Roman Catholic Diocese of San Diego),
ஃபிரான்சிஸ்கன் பொதுநிலை அருட்சகோதரர்கள் (Franciscan Lay Brothers)

“டியேகோ டி சேன் நிக்கோலஸ்” (Diego de San Nicolás) என்ற பெயரிலும் அறியப்படும் அல்காலா நகரின் புனிதர் டிடாக்கஸ், புதிதாய் வெற்றிகொள்ளப்பட்டிருந்த “கனரி தீவுகளில்” (Canary Islands) பணியாற்றிய முதல் குழுவினருடன் மறைப்பணியாற்றிய “ஸ்பேனிஷ் ஃபிரான்சிஸ்கன் பொதுநிலை அருட்சகோதரரும்” (Spanish Franciscan Lay Brother), ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் புனிதருமாவார்.

கி.பி. 1400ம் ஆண்டு, “செவில்” அரசிலுள்ள (Kingdom of Seville) “சேன் நிக்கோலஸ் டெல் புயேர்டோ” (San Nicolás del Puerto) எனும் நகராட்சிப் பகுதியில் பக்தியான ஏழைக் குடும்பத்தில் பிறந்த இவரது பெற்றோர் இவருக்கு, ஸ்பெயின் நாட்டின் பாதுகாவலரான புனிதர் “சந்தியாகுவின்” (Santiago/ St. James) பெயரிலிருந்து மருவிய பெயரான “டியாகோ” (Diego) என்ற பெயரிட்டிருந்தனர். சிறு வயதிலேயே ஒதுங்கி வாழும் துறவு வாழ்க்கையை தழுவினார். பின்னர், அலைந்து திரியும் துறவு வாழ்வில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டார். ஆன்மீக வாழ்க்கைக்கு தாம் அழைக்கப்படுவதை உணர்ந்த இவர், “அல்பைதா” (Albaida) எனும் இடத்திலுள்ள “ஃபிரான்சிஸ்கன்” (Order of Friars Minor) சபையின் “விழிப்புடன் கூர்ந்து கவனிக்கும் அல்லது சீர்திருத்த” (Observant (or Reformed) கிளைகளில் இணைய விண்ணப்பித்தார். தென் ஸ்பெயின் நாட்டின் “அண்டலூசியாவின்” (Andalusia) “கொரொடோபா” (Córdoba) பிராந்தியத்திலுள்ள “அர்ருசஃபா” (Arruzafa) எனுமிடத்திலுள்ள துறவு மடத்திற்கு அனுப்பப்பட்டார். அங்கே இவர் “பொதுநிலை அருட்சகோதரராக” (Lay Brother) ஏற்றுக்கொள்ளப்பட்டார்.

டிடாக்கஸ், அங்கே வாழ்ந்த காலத்தில், தமது பிராந்தியத்தின் “கொரொடோபா”, “காடிஸ்”, மற்றும் “செவில்” (Córdoba, Cádiz and Seville) ஆகிய சுற்றுப்புற கிராமங்களில் அலைந்து திரிந்து பயணித்து பிரசங்கித்தார். இன்றும் அப்பகுதிகளில் அவர் மீதான பக்தி பரவியுள்ளது.

“கனரி” (Canary Islands) தீவுகளின் ஒரு பகுதியான “லேன்ஸரோட்” (Lanzarote) தீவின் “அர்ரஸிஃப்” (Arrecife) எனுமிடத்திலுள்ள சபையின் புதிதாய் அமைக்கப்பட்ட துறவு மடத்துக்கு டிடாக்கஸ் அனுப்பப்பட்டார். சுமார் 40 வருடங்களுக்கு முன்னர் ஸ்பேனிஷ் இராணுவத்தால் வெற்றிகொள்ளப்பட்ட அத்தீவுகளின் மக்களை கிறிஸ்தவ மதத்திற்கு அறிமுகம் செய்விக்கும் நடைமுறைப் பணிகளே இன்னமும் நடந்துகொண்டிருந்தன. அவர் போர்ட்டர் பதவிக்கு நியமிக்கப்பட்டார்.

கி.பி. 1445ம் ஆண்டு, “ஃபியூர்டேவெஞ்சுரா” (Fuerteventura) தீவிலுள்ள “ஃபிரான்சிஸ்கன் சமூகத்தினரின்” (Franciscan community) பாதுகாவலராக டிடாக்கஸ் நியமிக்கப்பட்டார். அங்கேயிருந்த “ஃபிரான்சிஸ்கன்” (Order of Friars Minor) சபையின் “விழிப்புடன் கூர்ந்து கவனிக்கும் கிளையினர்”, (Observant Franciscans) “தூய பொனவெஞ்சுரா” (Friary of St. Bonaventure) துரவுமடத்தை நிறுவினார்கள். இந்த நிலைப்பாட்டிற்கு ஒரு “பொதுநிலை அருட்சகோதரராக” சாதாரண விதிகள் விதிவிலக்காக இருந்தபோதிலும், அவருடைய ஆர்வமும், விவேகமும், பரிசுத்தமும் இந்த விருப்பத்தை நியாயப்படுத்தின.

கி.பி. 1450ம் ஆண்டு, ஸ்பெயின் அழைக்கப்பட்ட டிடாக்கஸ், திருத்தந்தை “ஐந்தாம் நிக்கோலஸ்” (Pope Nicholas V) அறிவித்திருந்த “ஜூபிலி ஆண்டில்” (Jubilee Year) பங்கேற்கவும், ஃபிரான்சிஸ்கன் துறவியான “பெர்னார்டின்” (Bernardine) என்பவரது புனிதர் பட்ட அருட்பொழிவு விழாவில் பங்குபெறவும் ரோம் நகருக்கு அனுப்பப்பட்டார். ஜூபிலி ஆண்டில் பங்குபெற வந்திருந்த பெரும் திருப்பயணியர் கூட்டமும், தமது சபையின் தூண்களில் ஒருவரான “பெர்னார்டினுடைய” (Bernardine) புனிதர் பட்ட விழாவில் பங்கேற்க வந்திருந்த ஆயிரக்கணக்கான துறவியர் கூட்டமும் சேர்ந்து, ரோம் நகரில் பல்வேறு நோய்த்தொற்றுகளை வரவழைத்தது. டிடாக்கஸ், மூன்று மாதங்கள் அங்கே தங்கியிருந்து நோயுற்றோருக்கு சேவை செய்வதிலும், தமது செப வல்லமையினால் அவர்களை குணமாக்குவதிலும் ஈடுபட்டிருந்தார்.

பின்னர், ஸ்பெயின் நாட்டுக்கு திரும்ப வரவழைக்கப்பட்ட டிடாக்கஸ், “அல்காலா” (Alcalá) நகரிலுள்ள “சான்ட மரியா டி ஜீசஸ்” (Friary of Santa María de Jesús) எனும் துறவு மடத்துக்கு அனுப்பட்டார். அங்கேயே தமது வாழ்நாளின் மீதமுள்ள நாட்களை தவம், தனிமை, மற்றும் ஆழ்ந்த சிந்தனைகள் தந்த மகிழ்வில் கழித்தார். அங்கே, கி.பி. 1463ம் வருடம், நவம்பர் மாதம், 12ம் நாள், “டியேகோ” என்றழைக்கப்பட்ட “டிடாக்கஸ்” மரித்தார்.

† Saint of the Day †
(November 7)

✠ St. Didacus of Alcalá ✠

Religious and Missionary:

Born: 1400 AD
San Nicolás del Puerto, Kingdom of Seville, Crown of Castile

Died: November 12, 1463 (Aged 62–63)
Alcalá de Henares, Kingdom of Toledo, Crown of Castile

Venerated in:
Catholic Church
(Franciscans, Roman Catholic Archdiocese of Seville and the Roman Catholic Diocese of San Diego)

Canonized: 1588 AD
Pope Sixtus V

Major shrine:
Ermita de San Diego, San Nicolás del Puerto, Seville, Spain

Feast: November 7

Patronage:
Roman Catholic Diocese of San Diego, Franciscan Lay Brothers

Saint Didacus of Alcalá, also known as Diego de San Nicolás, was a Spanish Franciscan lay brother who served as among the first group of missionaries to the newly conquered Canary Islands. He died at Alcalá de Henares on 12 November 1463 and is now honoured by the Catholic Church as a saint.

Today is the Feast of St. Didacus.  While most people are not aware, the City of San Diego, CA is named after St. Didacus of Alcalá.

St. Didacus was a Spanish lay brother of the Order of Friars Minor who served as among the first group of missionaries to the newly conquered Canary Islands. He was born in c. 1400 to poor yet pious parents who named him after St. James, the patron saint of Spain.  In Spanish, St. James is called "St. Santiago" and Diego is a derivative of Santiago.

Even as a young age he was called to the religious life.  He joined the Order of Friars Minor at the friary in Albaida.  He is remembered today for his missionary work in the New World.  For a time he also headed a large monastery he had founded there. St. Didacus was above all a contemplative, and his abundant good works were the fruit of his ardent love of Christ. His charity for the sick was especially moving.

He died at Alcalá de Henares on 12 November 1463.

           "St. Didacus was canonized by Pope Sixtus V in 1588, the first after a long hiatus following the Reformation, and the first of a lay brother of the Order of Friars Minor. His feast day is celebrated on 13 November, since 12 November, the anniversary of his death was occupied, first, by that of Pope Saint Martin I, then by that of the Basilian monk and Eastern Catholic bishop and martyr, Josaphat Kuntsevych"

There are many miracles attributed to the intercession of St. Didacus.  One such miracle follows:

                            On a hunting trip, Henry IV of Castile fell from his horse and injured his arm. In intense pain and with his doctors unable to relieve his agony, he went to Alcalá and prayed to Didacus for a cure. The saint's body was removed from his casket and placed beside the king. Henry then kissed the body and placed the saint's hand on his injured arm. The king felt the pain disappear and his arm immediately regained its former strength.

Saint Didacus was born in Andalusia in Spain, towards the beginning of the fifteenth century. He was remarkable from childhood for his love of solitude, and for conversations concerning holy things. When still young he retired to live with a hermit not far from his village, where he spent several years in vigils, fasting, and manual work. Like the Fathers of the desert, he made baskets and other objects with willow branches and gave them to those who brought alms to the two hermits.

God inspired him to enter into the Order of the seraphic Saint Francis; he did so at the convent of Arrizafa, not far from Cordova. He did not aspire to ecclesiastical honours, but to the perfection and inviolable observance of his Rule — an admirable ideal, the practice of which, according to Saint Thomas Aquinas, is equivalent to martyrdom in merit. He made himself the servant of all his brethren. Any occupation was his choice. All his possessions were a tunic, a crucifix, a rosary, a prayer book and a book of meditations; and these he did not consider as his own and wanted them to be the most worn of all that was in the house. He found ways to nourish the poor who came to the convent, depriving himself of bread and other food given him, and if unable to do so consoled them with such gentle words that they left with profit nonetheless.

At one time he was sent by his superiors to the Canary Islands, and went there joyfully, hoping to win the crown of martyrdom. Such, however, was not God's Will. After making many conversions by his example and holy words, he was recalled to Spain. He was assigned to the care of the sick and when he went to Rome for the Jubilee year of 1450, with 3,800 other religious of his Order, most of whom fell ill there, he undertook to care for them, succeeding in procuring for them all they needed even in that time of scarcity.

Saint Didacus one day heard a poor woman lamenting, and learned that she had not known that her seven-year-old son had gone to sleep in her large oven; she had lighted a fire and lost her senses when she heard his cries. He sent her to the altar of the Blessed Virgin to pray and went with a large group of persons to the oven; although all the wood was burnt, the child was taken from it without so much as a trace of burns. The miracle was so evident that the neighbours took the child in triumph to the church where his mother was praying, and the Canons of the Church dressed him in white in honour of the Blessed Virgin. Since then, many afflicted persons have invoked the Mother of Heaven there.

After a long and painful illness, Saint Didacus ended his days in 1463, embracing the cross which he had so dearly loved during his entire life. He died having on his lips the words of the hymn, Dulce lignum [Sweet wood - a chant of Good Friday]. His body remained incorrupt for several months, exposed to the devotion of the faithful, ever exhaling a marvellous fragrance. He was canonized in 1588; Philip II, king of Spain, had laboured to obtain that grace after his own son was miraculously cured in 1562 by the relics of the Saint when he had fallen from a ladder and incurred a mortal wound on his head.

Reflection: If God is in your heart, He will be also on your lips; for Christ has said, Out of the abundance of the heart the mouth speaketh.

Prayer:
Almighty and eternal God, Your wondrous providence has chosen the weak things of the world to confound the strong. Hear our humble prayer and grant that the prayers of Your blessed confessor Didacus may make us worthy of eternal glory in heaven. Through Our Lord!

No comments:

Post a Comment