புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

10 June 2020

தூய கெட்டூலியஸ் (ஜூன் 10)

இன்றைய புனிதர் :
(10-06-2020)

தூய கெட்டூலியஸ் (ஜூன் 10)
“என் பொருட்டு ஆளுநர்களிடமும் அரசர்களிடமும் உங்களை இழுத்துச் செல்வார்கள். இவ்வாறு யூதர்கள் முன்னும் பிற இனத்தவர் முன்னும் சான்று பகர்வீர்கள். இப்படி அவர்கள் உங்களை ஒப்புவிக்கும்பொழுது, ‘என்ன பேசுவது? எப்படிப் பேசுவது?’ என நீங்கள் கவலைப்பட வேண்டாம். நீங்கள் என்ன பேசவேண்டும்? என்பது அந்நேரத்தில் உங்களுக்கு அருளப்படும். ஏனெனில் பேசுபவர் நீங்கள் அல்ல. மாறாக, உங்கள் தந்தையின் ஆவியாரே உங்கள் வழியாய் பேசுவார்” (மத் 10: 18 -20)

வாழ்க்கை வரலாறு

முதலாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் திருச்சபை வேகமாக வளர்ந்து வந்தது. இது பிடிக்காத ஒருசிலர் அப்போது உரோமையை ஆண்டுகொண்டிருந்த மன்னன் டிரேஜனிடம், கிறிஸ்தவர்கள் ஒன்றாகக் கூடிவந்து கேளிக்கைகளில் ஈடுபடுகிறார்கள், எதையெதையோ வழிபடுகிறார்கள் என்று பற்றி வைத்தார்கள். இதைக் கேட்டு சீற்றம் கொண்ட அவன் கிறிஸ்தவர்களைக் கொன்றொழிக்கத் திட்டம் தீட்டினான்.

இதற்கிடையில் டிரேஜனின் படையில் கெட்டூலியஸ் என்ற அதிகாரி ஒருவர் இருந்தார். அவர் கிறிஸ்துவின் போதனையால் தொடப்பட்டு, கிறிஸ்தவ மறையைத் தழுவினார். இதைத் தொடர்ந்து அவர், தான் வகிந்து வந்த பதவியைத் துறந்துவிட்டு திவோலிக்கு அருகில் இருந்த சபைன் என்ற குன்றுக்கு அருகில் குடிசை அமைத்து அங்கே கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியை அறிவிக்கத் தொடங்கினார். அவருடைய போதனையைக் கேட்க ஏராளமான பேர் வந்து போனார்கள்.

இச்செய்தி மன்னனின் காதுகளைச் சென்றடைந்தது. இதனால் சினமுற்ற மன்னன் கெட்டூலியசையும் அவரோடு இருப்பவர்களையும் கைதுசெய்து வருமாறு  செரேயாலிஸ் என்னும் படைவீரனை அனுப்பி வைத்தான். இப்படி வந்தவனிடம் கெட்டூலியஸ் ஆண்டவர் இயேசுவின் பாடுகளையும் அவருடைய அன்பையும் அவனுக்கு எடுத்துச் சொன்னார். இதைக் கேட்டு மனம்மாறிய அந்தப் படைவீரன் கெட்டூலியசோடு சேர்ந்துகொண்டு கிறிஸ்தவ நெறியைப் பின்பற்றத் தொடங்கினான். செய்தி மன்னனின் காதுகளை எட்டியது. அவன் பிரிமிட்வுஸ் என்னும் படைவீரனை அனுப்பி வைத்து, கெட்டூலியசையும் செரேயாலிசையும் கைது செய்து வருமாறு அனுப்பி வைத்தான். அவனும் கெட்டூலியசின் போதனையால் ஈர்க்கப்பட்டு கிறிஸ்தவ நெறியைப் பின்பற்றத் தொடங்கினான். இதைத் தொடர்ந்து கெட்டூலியசின் சகோதரன் அமாசியசும் கிறிஸ்தவரானார்.

இவை எல்லாவற்றையும் குறித்துக் கேள்விப்பட்ட மன்னன் டிரேஜன், லிசினியுஸ் என்பவனைக் கூப்பிட்டு, கெட்டூலியசையும் அவனோடு இருக்கக்கூடிய படைவீரர்களையும் மக்களையும் கிறிஸ்துவை மறுதலிக்கச் சொல். அப்படி அவர்கள் மறுதலிக்கவில்லையென்றால் அங்கேயே அவர்களைக் கொன்றுபோட்டு” என்று சொல்லி அனுப்பி வைத்தான். லிசினியுஸ் கெட்டூலியசிடம் வந்து, மன்னன் சொன்னதைக் சொன்னான். அதற்கு கெட்டூலியசோ, “நானும் இங்கே இருக்கின்ற எல்லாரும் ஒருபோதும் கிறிஸ்துவை மறுதலிக்க மாட்டோம்” என்று மிக உறுதியாகச் சொன்னார். இதனால் லிசினியுஸ் கெட்டூலியசோடு அங்கிருந்த அனைவரையும் கைது செய்தான்.

அதன்பின்னர் அவன் அவர்கள் அனைவரையும் 27 நாட்கள் சிறையில் வைத்து, கொடுமையாகச் சித்ரவதை செய்தான். பிறகு அவர்களை தீயிலிட்டு சுட்டெரித்தான். ஆனால் தீயானது அவர்களை ஒன்றும் செய்யவில்லை. கடைசியில் அவன் அவர்களை தலைவெட்டிக் கொன்றுபோட்டான். இவ்வாறு கெட்டூலியசும் அவரோடு இருந்தவர்களும் ஆண்டவர் இயேசுவுக்கு தங்களுடைய இரத்தம் சிந்தி சான்று பகர்ந்தார்கள்.

கெட்டூலியசின் உடல் அவருடைய மனைவியும் தூயவருமான தூய சிம்போரோசாவின் கல்லறைக்கு அருகிலேயே வைக்கப்பட்டது.

கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்

தூய கெட்டூலியசின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம், அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

விசுவாசத்தில் வேரூன்றி இருந்தல்

தூய கெட்டூலியசின் வாழ்க்கை வரலாற்றை வாசித்துப் பார்க்கின்றபோது அவர் கிறிஸ்தவ விசுவாசத்தில் வேரூன்றி, மிக உறுதியாக இருந்ததுதான் நம்முடைய நினைவுவுக்கு வந்து போகின்றது. அவர் நினைத்திருந்தால் உரோமைப் படையில் உயர் பதவியில் மிக சந்தோசமாக இருந்திருக்கலாம். ஆனால் அவர் அப்படிச் செய்யாமல், தனது மனதிற்குப் பிடித்த கிறிஸ்தவ நெறியைப் பின்பற்றி அதிலே இறுதிவரைக்கும் வேரூன்றி இருந்தார்.

தூய கெட்டூலியசின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம், நம்முடைய விசுவாசத்தில் வேரூன்றி இருக்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். இன்றைக்கு பலர் ஒரு சாதாரண கஷ்டம் வந்தாலே எல்லாவற்றையும் தூக்கி எறிந்துவிட்டு, கிறிஸ்துவை விட்டு விலகிநிற்பது வேதனைக்குரியதாக இருக்கின்றது. இத்தகைய நிலை மாறவேண்டும். அனைவரும் தங்களுடைய விசுவாசத்தில் வேரூன்றி இருக்கவேண்டும்.

ஆகவே, தூய கெட்டூலியசின் நினைவு நாளைக் கொண்டாடும் நாம், அவரைப் போன்று ஆண்டவர் இயேசுவின்மீது கொண்ட நம்பிக்கையில் மிக உறுதியாக இருப்போம். அவருக்காக எதையும் இழக்கத் துணிவோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.   

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.

Saint of the Day : (10-06-2020)

Saint Getulius of Tivoli

Saint Name: St Getulius
Place: Gabii, South Africa
Birth:  XXX
Death: June 10, 120 AD

St Getulius whose feast is celebrated on June 10 is venerated together with Amantius, Cerealus, and Primitivus as a Christian martyr and saint. They are considered to have died at Gabii. According to tradition, Getulius was the husband of Saint Symphorosa. Getulius is a name meaning “of the Gaetuli,” which was a tribe of North Africa.

He was the husband of St. Symphorosa. An officer in the Roman army, he resigned when he became a Christian and returned to his estates near Tivoli, Italy. There he converted Caerealis, an imperial legate sent to arrest him. With his brother Amantius and with Caerealis and Primitivus, Getulius was tortured and martyred at Tivoli.

According to his legend, Getulius was a native of Gabii in Sabina. Getulius was an officer in the Roman army who resigned when he became a Christian. He retired to his estates near Tivoli. Caerealis was an imperial legate sent to arrest him but was converted to Christianity by Getulius. Primitivus was another officer sent to arrest him, but he was also converted. Amantius was Getulius' brother.

According to his Passio, all four men were tied to a stake and set alight. However, the fire did not harm them, so they were brutally clubbed and then beheaded.

According to the Roman Martyrology, Getulius was killed on the Via Salaria and is called the father of the Seven Martyrs and the husband of Symphorosa. His companions are called Caerealis, Amantius, and Primitivus. They were imprisoned, thrown into the flames but emerged unharmed, and then beaten to death with clubs. The legend further states that Saint Symphorosa buried them in an arenarium on her estate.

Their seven sons (not to be confused with the seven sons of Felicity of Rome) are named specifically. According to their legend, each of them suffered a different kind of martyrdom. Crescens was pierced through the throat, Julian through the breast, Nemesius through the heart, Primitivus was wounded at the navel, Justinus was pierced through the back, Stracteus (Stacteus, Estacteus) was wounded at the side, and Eugenius was cleft in two parts from top to bottom.

---JDH---Jesus the Divine Healer---


No comments:

Post a Comment