புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

10 June 2020

பலெர்மோ நகர் புனிதர் ஒலிவியா June 10

† இன்றைய புனிதர் †
(ஜூன் 10)

✠ பலெர்மோ நகர் புனிதர் ஒலிவியா ✠
(St. Olivia of Palermo)
கன்னியர்/ மறைசாட்சி:
(Virgin/ Martyr)

பிறப்பு: கி.பி. 448
பலெர்மோ, சிசிலி
(Palermo, Sicily)

இறப்பு: கி.பி. 463
டுனிஸ், வட ஆபிரிக்கா
(Tunis, North Africa)

ஏற்கும் சமயம்: 
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
கிழக்கு மரபுவழி திருச்சபை
(Eastern Orthodox Church)

நினைவுத் திருவிழா: ஜூன் 10

பாதுகாவல்: 
சிசிலியின் நகரங்களான:
பலெர்மோ, மோன்டே சேன் கிலியானோ, டேர்மினி இமெரெஸ், அல்கமோ, பெட்டினியோ, செஃபலு
(Sicilian towns of Palermo, Monte San Giuliano, Termini Imerese, Alcamo, Pettineo, Cefalù)
ஒலேசா டி மொன்ட்செர்ராட் (கட்டலோனியா)
(Olesa de Montserrat (Catalonia)

புனிதர் ஒலிவியா கிறிஸ்தவ விசுவாசத்திற்காக கொடூரமாக துன்புறுத்தப்பட்டு மறைசாட்சியாக உயிர்துறந்த கன்னியரும் கிறிஸ்தவ புனிதரும் ஆவார்.

இவரது சரித்திரத்தை எழுதிய சரித்திரவியலாளர்களின் கூற்றின்படி, கி.பி. ஏறக்குறைய 448ம் ஆண்டு உன்னதமான சிசிலியன் குடும்பமொன்றில் பிறந்த அழகிய மகள் ஆவார். சிறு வயதிலிருந்தே ஏழைகளுக்கு தொண்டாற்ற விரும்பிய இச்சிறுமி, தமது குடும்பத்துக்கே உரித்தான வசதியான வாழ்க்கை மற்றும் கௌரவம் ஆகியவற்றை ஒதுக்கி, தம்மை ஆண்டவருக்கு அர்ப்பணித்துக் கொண்டவர் ஆவார்.

கி.பி. 454ம் ஆண்டு, சிசிலியை வெற்றிகொண்ட “வண்டல்ஸ்” அரசன் (king of the Vandals) “ஜென்செரிக்” (Genseric) என்பவன், “பலெர்மோ” (Palermo) மாநிலத்தை முற்றுகையிட்டதுடன் அநேகம் கிறிஸ்தவர்களை துன்புறுத்தி கொன்றான்.

ஒலிவியா தமக்கு பதின்மூன்று வயதானபோது, நோயாளிகளுக்கு வேண்டிய சேவைகளை செய்ய தொடங்கினார். தமது கிறிஸ்தவ விசுவாசத்தில் திடமாக, உறுதியாக இருக்குமாறு பிற கிறிஸ்தவ மக்களை வேண்டிக்கொண்டார். அவருடைய ஆத்மாவின் வலிமையால் “வண்டல்ஸ்” ஈர்க்கப்பட்டிருந்தது. அவருடைய விசுவாசத்திற்கு எதிராக எதுவுமே நடக்க முடியாது என்பதையும் அறிந்திருந்தது. “வண்டல்ஸ்” மக்கள் அவரை “டுனிஸ்” (Tunis) நகரத்துக்கு அனுப்பி வைத்தனர். அங்கே, ஆளுநர் அவருடைய நிலைப்பாட்டிலிருந்து அவரை மீட்டெடுக்க முயல்வார் என்று நம்பினார்கள்.

ஆனால், “டுனிஸ்” (Tunis) நகரில் ஒலிவியா அற்புதங்கள் நிகழ்த்தத் தொடங்கினார். ஏராளமான பாகன் இன மக்களை கிறிஸ்தவ மதத்திற்கு மனம் மாற்றினார். கோபமுற்ற ஆளுநர், ஒலிவியாவை கொடிய விலங்குகள் இருக்கும் காட்டில் கொண்டு தனிமையில் விட உத்தரவிட்டார். ஒன்று, ஒலிவியா பசி பட்டினியால் சாகனும்; அல்லது பசியெடுத்த காட்டு மிருகங்களுக்கு இரையாகணும் என்ற எண்ணத்தில் அவரை காட்டில் கொண்டு விட்டனர். ஆனால், அவர்களது எண்ணம் ஈடேறவில்லை. அங்கிருந்த காட்டு மிருகங்கள் அவரை சீண்டவேயில்லை. அவரைச் சுற்றிலும் அமைதியுடன் திரிந்தன.

ஒருமுறை, “டுனிஸ்” நகரிலிருந்து வேட்டையாடும் நோக்கில் ஓலிவியா இருந்த காட்டுக்கு வேட்டையாட வந்த சிலர், அங்கே ஒலிவியாவைக் கண்டு, அவரது அழகில் ஆசை கொண்டு, அவரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றனர். ஆனால், ஒலிவியா இறை வார்த்தைகளைக் கொண்டு அவர்களையும் மனம் மாற்றினார். பாகன் இன இளைஞர்களாகிய அவர்கள் அனைவரையும் கிறிஸ்தவ வேதத்திற்கு மனம் மாற்றினார். அவர்களுக்கு அங்கேயே திருமுழுக்கு அளித்தார்.
காட்டிலிருந்து வெளியே வந்த ஒலிவியா, “டுனிஸ்” பிராந்தியத்திலுள்ள நோயுற்ற மக்களை அற்புதமாக குணமாக்கினார். துன்புறும் மக்களை அதிசயமாக ஆறுதல் படுத்தினார். எண்ணற்ற பாகன் இன மக்களை கிறிஸ்தவ விசுவாசத்திற்கு மனம் மாற்றினார். இவற்றையெல்லாம் கேள்வியுற்ற ஆளுநர், ஒலிவியாவை கைது செய்து சிறையிலடைத்தார். மனம் மாறி வருத்தம் தெரிவித்து கிறிஸ்தவ விசுவாசத்தைக் கைவிட சந்தர்ப்பமளித்தார். ஆனால், இவை யாவற்றையும் மறுத்த ஒலிவியா கிறிஸ்தவ விசுவாசத்தை கைவிட தீர்க்கமாக மறுத்தார்.

சிறையிலடைக்கப்பட்ட ஒலிவியாவின் ஆடைகள் களையப்பட்டன. சிறுமியென்றும் பாராமல் இரக்கமற்ற வகையில் அவர் அடித்து துன்புறுத்தப்பட்டார். கொதிக்கும் எண்ணெயுள்ள கொப்பரையில் மூழ்கடிக்கப்பட்டார். ஆனால் இத்தகைய சித்திரவதைகள் அவருடைய உடலில் எவ்விதத்திலும் தீங்கு இழைக்கவில்லை. அதேபோல கிறிஸ்தவ விசுவாசத்தை கைவிடுமளவுக்கு அவரது மனமும் பலவீனப்படவில்லை. இறுதியில், கி.பி. 463ம் ஆண்டு, ஜூன் மாதம், பத்தாம் தேதி, ஒலிவியாவின் தலை துண்டிக்கப்பட்டு அவர் கொலை செய்யப்பட்டார். அவரது ஆன்மா ஒரு புறா வடிவில் வான் நோக்கி பறந்து சென்றதாக கூறப்படுகிறது.

ஒலிவியாவின் உடலை தேடிக்கொண்டிருந்த ஃபிரான்சிஸ்கன் (Franciscans) சபையினரால் கி.பி. 1500ம் ஆண்டின் இறுதியில் அவருடைய வழிபாட்டு முறை பரவத்தொடங்கியது.



ஜூன் 10 

புனித ஒலிவியா (448-463)

இவர் சிசிலியில் உள்ள பெலர்மா என்ற இடத்தில் 448 ஆம் ஆண்டு பிறந்தார்.

இவருடைய குடும்பம் செல்வச் செழிப்பான குடும்பம். ஆனாலும் இவர் ஆடம்பரத்தை நாடாமல் எளிமையை நாடினார். குறிப்பாக இவர் தன்னுடைய பகுதியில் வாழ்ந்து வந்த ஏழை எளியவர்களுக்கு உதவுவதில் சிறந்தவராக விளங்கி வந்தார்.

ஒருமுறை மூர் இனத்தவர் இவர் வாழ்ந்து வந்த பகுதியில் படையெடுத்து வந்தனர். அப்பொழுது அவர்கள் பலரையும் கொன்று போட்டுவிட்டு, இவரை இழுத்துச் சென்று தூனிஸ் என்ற இடத்தில் இருந்த ஒரு குகையில் சிறைவைத்தார். 

இவரோ தன்னிடத்தில் வந்தவர்களுக்குக் கிறிஸ்துவைப் பற்றி எடுத்துக்கூறி, அவர்களை கிறிஸ்துவின்மீது நம்பிக்கை கொள்ளச் செய்தார். மேலும் தீம் வழியில் சென்ற பலரையும் தன் போதனையால் நல்வழிப்படுத்தினார்.

இச்செய்தியை அறிந்த மன்னன் இவரைக் கிறிஸ்துவை மறுதலிக்கச் சொன்னான். இவரோ தன்னுடைய நம்பிக்கையில் மிகவும் உறுதியாக இருந்தார். இதனால் சீற்றம் கொண்ட மன்னன் இவரைத் தீயிலிட்டு,  அதன்பிறகு தலையை வெட்டிக் கொன்றுபோட்டான்.

இவர் தலைவெட்டிக் கொல்லப்பட்டபோது, இவருடைய ஆன்மா ஒரு புறாவைப் போல் விண்ணகத்திற்குச் சென்றதை மக்கள் பார்த்து வியப்படைந்தனர். 

இவ்வாறு ஒலிவியா தன்னுடைய நம்பிக்கை நிறைந்த வாழ்வால் இயேசுவுக்குச் சான்று பகர்ந்தார்

சிந்தனை:

“என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து தம் சிலுவையைத் தூக்கிக்கொண்டு என்னைப் பின்பற்றட்டும்" -இயேசு.

"ஒருவர் கடவுளுக்குச் செய்யும் மிகப்பெரிய சேவை தீயவனை நல்வழிப்படுத்துவதே" -லீமா நகர்ப் புனித ரோஸ்

"அறிவையும் ஆன்மாவையும் விரிவுபடுத்துவது கலாச்சாரம்" - நேரு.

- மறைத்திரு. மரிய அந்தோனிராஜ்
பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
† Saint of the Day †
(June 10)

✠ St. Olivia of Palermo ✠

Virgin/ Martyr:

Born: 448 AD
Palermo, Sicily

Died: 463 AD
Tunis, Northwest Africa

Venerated in:
Roman Catholic Church
Eastern Orthodox Church

Feast: June 10

Patronage:
Sicilian towns of: Palermo; Monte San Giuliano; Termini Imerese; Alcamo; Pettineo; Cefalù; Olesa de Montserrat (Catalonia).

Saint Olivia of Palermo is a Christian virgin-martyr who was venerated as a local patron saint of Palermo, Sicily in the Middle Ages, as well as in the Sicilian towns of Monte San Giuliano, Termini Imerese, Alcamo, Pettineo and Cefalù.

Her feast day is on June 10, and she is represented as a young woman with olive branches surrounding her, holding a cross in her right hand.

Hagiographic life:
According to the hagiographic legend, Olivia was the beautiful daughter of a noble Sicilian family, born around 448 AD. Local hagiographers state that she was born in the Loggia district of Palermo. From her early years, she devoted herself to the Lord while declining honors and riches and loved to give charity to the poor. In 454 AD Genseric, king of the Vandals conquered Sicily and occupied Palermo, martyring many Christians. When she was thirteen Olivia began to comfort the prisoners and urged the Christians to remain steadfast in their faith. The Vandals were impressed by the strength of her spirit, seeing that nothing could prevail against her faith, and so in deference to her noble house, they sent her to Tunis where the governor would attempt to overcome her constancy.

In Tunis, Olivia worked miracles and began to convert the pagans. The governor, therefore, ordered that she be relegated to a lonely place as a hermitess, where there were wild animals, hoping that the beasts would devour her or that she would die of hunger. However, the wild animals lived peacefully around her. One day some men from Tunis who were hunting found her and impressed by her beauty tried to abuse her, but Olivia converted them too with the word of the Lord and they were baptized. After miraculously curing many of the sick and suffering in the region, Olivia converted many pagans to the Christian faith. When the governor heard about these things he had her arrested and imprisoned in the city in an attempt to make her apostatize. She was scourged and she was stripped and submerged into a cauldron of boiling oil, but these tortures did not cause her any harm, nor did they make her renounce her faith. Finally, she was beheaded on June 10 of the year 463, and her soul "flew to the sky in the form of a dove"

Patron saint of Palermo:
At the end of 1500, her cult was spread by the Franciscans, who sought her body.

On 5 June 1606, the people and Senate of Palermo elected Saint Olivia as Patroness of the city, together with Saint Agatha, Saint Christina, and Saint Nympha. These four patronesses were chosen for each of the four major parts of the city. Their commemoration was entered in the Permian Calendar by Cardinal Giannettino Doria in 1611.

Their veneration waned following the discovery in 1624 of the (alleged) relics of Saint Rosalia, who had appeared to rescue the city from the plague. Thereafter Saint Rosalia began to be venerated as a patroness of the city as well.

In 1940 a parish was dedicated to Saint Olivia in the city.

Her commemoration as patron saint continued to be celebrated by the Church in Palmero until 1980 as a mandatory commemoration. However, in 1981 it was officially removed from the local Liturgical Calendar.

In Tunis, the Roman Catholic Cathedral of St. Vincent de Paul and Saint Olivia is also dedicated to her. It was begun in 1893, replacing the oldest Christian monument in the city (a chapel built Father Jean Le Vacherin 1650), and was opened on Christmas of 1897.

Saint Olivia and Islam:
The Great Mosque of Al-Zaytuna ("Mosque of Olive") is the oldest in the Capital of Tunisia and covers an area of 5,000 square meters (1.2 acres) with nine entrances. Its exact building date varies according to the sources. Ibn Khaldun and Al-Bakri wrote that it was built in 116 Hijri (731 AD) by Obeid-Allah Ibn Al-Habhab. However, Ahmed In Abu Diyaf and Ibn Abi Dinar attributed its foundation to Hasan ibn al-Numan, who led the conquest of Tunis and Carthage. Most scholars agree that the closest date is 84 Hijri (703 AD), and what Al-Habhab did was in fact enlarge the mosque and improve its architecture.

One legend states that it was called "Mosque of Olive" because it was built on an ancient place of worship where there was an olive. However, the most accepted explanation is that transmitted by the 17th-century Tunisian historian Ibn Abi Dinar, who spoke about the presence of the tomb of Santa Olivia at that location. Recent research has shown that indeed this mosque was built on a Christian basilica. With the advent of Islam, the church was converted into a mosque, retaining the dedication, but translating the name into Arabic.

The saint is particularly venerated in Tunisia because it is superstitiously thought that if the site and its memory are profaned then misfortune will happen; this includes a belief that when her relics are recovered Islam will end. This ancillary legend related to the discovery of the saint's relics is widespread in Sicily, however, it is connected to other Saints as well.

In 1402 king Martin I of Sicily requested the return of Saint Olivia's relics from the Berber Caliph of Ifriqiya Abu Faris Abd al-Aziz II, who refused him. Even today the Tunisians, who still venerate her, believe that the dominion of their religion will fade when the body of the Virgin Olivia will disappear.

Historicity:
The main criticism of the life of Saint Olivia is that the elements of her legend do not have a personal nature in and of themselves, but they all derive, with slight modifications, from old themes or archetypes that were dear to the medieval imagination, such as that of the 'sacred heroine' or the 'persecuted maiden'. The Italian teacher and writer Giuseppe Agnello carefully undertook to sift the hagiographic tradition from the literary one and did not see anything more than a random homonymous saint of Palermo conflated with the heroine of the mystery play dedicated to her, which was studied extensively by Alessandro d'Ancona and Alexander Veselovsky (who in turn cited Ferdinand Wolf).

Nevertheless, Msgr. Paul Collura defends Saint Olivia's historicity writing that "the core of our ancient legends has a substrate that should not be underestimated, and since the Arab domination in Sicily (827–1092) made a clean sweep of all the written documents, sacred and profane, the memory of several Saints has been handed down only on the thread of memory."

Furthermore, it has been accurately pointed out that the Roman Catholic church has remained somewhat aloof from Southern Italian saint cults.

No comments:

Post a Comment