இன்றைய புனிதர்
2020-06-09
புனித எப்ரேம் (St.Ephrem)
மறைவல்லுநர், விசுவாசத்திற்கு பாதுகாவலர்
பிறப்பு
306
மெசப்பொட்டேமியா
இறப்பு
373
கப்படோசியா
புனிதர்பட்டம்: திருத்தந்தை 15 ஆம் பெனடிக்ட்
இவரின் பெற்றோர்கள் பற்றியும், இவரது குருத்துவத்தைப்பற்றியும் இருவிதமான கருத்துக்கள் நிலவுகின்றது. கிறிஸ்துவின் ஒளிபெறாத பெற்றோர் என்று கூறப்படினும், எப்ரேம், "உண்மையின் வழியில் பிறந்தவன் நான்" கூறுவதிலிருந்து, இவரின் பெற்றோர் ஞான ஒளி பெற்றவர்கள் என்று நம்ப இடமுண்டு, மேலும் இவர் தியோக்கான் என்று அழைக்கப்பட்டாலும், குருத்துவ மகிமை பெற்றிருந்ததாக அவர் எழுதியவற்றிலிருந்து தெரிகிறது. இவர் தமது 18 ஆம் வயதில் திருமுழுக்குப் பெற்றார். அன்று முதல் நிசிபிஸ் நகர் ஆயர் புனித ஜேக்கப்பின் கண்காணிப்பில் இருந்தார். ஆயர் 325 ல் நிசேயா என்ற பொது சங்கத்திற்கு போகும்போது எப்ரேம்மையும் தன் செயலராக அழைத்து சென்றார். அப்போது ஆயர் இறந்து போகவே நிசிபிசிலேயே தங்கினார். அங்கே பெர்சியர்கள் படையெடுத்து வந்த வேத கலாபனையை பாடல்களாக தொகுத்தார். பின்னர் 350 ஆம் ஆண்டில் திருச்சபைக்கு இருந்த ஆபத்து நீங்கியது. வேதகலாபனை போரில் பெர்சியர் தோல்வி அடைந்தனர். 13 ஆண்டுகளுக்குப்பின் மன்னன் ஜோவியன் ஆட்சிக்காலத்தில் அமைதியின் பயனாக, நிசிபிஸ் நகரை பெர்சியாவுக்கு கொடுத்தார்.
இதனால் மனமுடைந்த எப்ரேம் எடெஸ்ஸாவுக்கு அருகில் தனிமையை நாடிச்சென்று ஒரு குகையில் நாட்களை செலவழித்தார். அங்கு கடும் தவ முயற்சிகளை மேற்கொண்டார். திருவழிபாட்டில் மக்களின் மனதை இறைவன்பால் எழுப்பும் ஆற்றல் திருப்பாடல்களுக்கு நிறையவே உள்ளது என்பதை இவர் உணர்ந்தார். திருவழிபாட்டில் "திருப்பாடல்களின் தந்தை" என்ற பட்டம் இவருக்கு மக்களால் கொடுக்கப்பட்டது. இவர் பெண்களின் பாடற்குழுவிற்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்தார். இவர் இறுதிவரை தியாக்கோனாகவே இருந்தார். இவர் பல நூல்கள் எழுதினார். அனைத்திலுமே தான் ஓர் குருத்துவத்தை தேர்ந்துகொண்டதாகவே எழுதியுள்ளார். இவரின் நூல்கள் அனைத்தும் " இவருடைய நாட்களில் மக்கள் எப்படி விசுவாசத்தில் வளர்ச்சி அடைந்து வந்தனர். திருச்சபையில் எத்தகைய வழிபாட்டு முறைகள் நிலவி வந்தன என்பதை காட்டுகின்றது. அதேபோல் அன்னை மரியா எத்தகைய மாசு மறுவுமின்றி உற்பவித்தவர் என்று இவர் குறிப்பிடும்போது, அவரது நாட்களில் இவ்வுண்மையை விசுவாசிகள் தெரிந்து வைத்திருந்தனர். தாழ்ச்சியின் பொருட்டு, தமது அடக்க சடங்கின்போது, தம் உடலுக்கு தூபங்காட்ட வேண்டாம். இறைவனுக்கு மட்டுமே நறுமணத் தூபம் உரியது என்றும், ஆன்ம சாந்திக்காக திருப்பலி ஒப்புக்கொடுப்பது மட்டுமே சிறந்தது என்று கூறினார்.
எப்ரேம் 370 ஆம் ஆண்டில் கப்படோசியாவில் இருந்த புனித பாசிலை சந்தித்தார். ஏற்கெனவே பசிலியாரின் புகழ்பற்றி அவர் பலமுறை கேள்விப்பட்டிருந்தார். 372 ல் எப்ரேம் வாழ்ந்த பகுதிக்கருகில் மக்கள் கடும் பஞ்சத்தில் சிக்கினர். இவர் அம்மக்களை மீட்க அயராது உழைத்தார். எல்லாவிதமான முயற்சிகளையும் எடுத்து நிவாரணப் பணியில் ஈடுபட்டார். பஞ்சத்தில் அடிப்பட்ட நோயாளிகளுக்கு தொண்டாற்றினார். இப்பணிகளின் மிகுதியால் மிகவும் களைத்து போனார். தொடர்ந்து பணியாற்ற இவரின் உடல் ஒத்துழைக்கவில்லை. வாழ்விற்கு முற்றுப்புள்ளி வைக்கவே, தான் தங்கியிருந்த குகைக்குள் மெல்ல நகர்ந்து சென்றார். குகைக்குள் சென்றதுமே இறைவனடி சேர்ந்தார். இவர் ஓர் புகழ்மிக்க ஆசிரியர், தேன்சொட்டும் மறையுரையாளர், சிறந்த கவிஞர், விசுவாசத்தின் பாதுகாவலர், மறைநூலின் ஆழமான விளக்க உரையாளர் என்று இவர் வாழும்போதே, மக்கள் இவருக்கு புகழ் சூட்டினார்கள். இவர் சிரியன் ரீதியை சேர்ந்தவராக இருந்தபோதும் கூட "திருச்சபையின் மறைவல்லுநர்" என்ற பட்டம் இவர் ஒருவருக்கு மட்டுமே சூட்டப்பட்டது. திருவழிபாட்டில், திருப்பாக்களை சரளமாக புகுத்தும் பழக்கம் இவருக்கு இருந்ததால் இவரை "தூய ஆவியின் புல்லாங்குழல்" என்று அழைக்கப்பட்டார்.
செபம்:
இன்னிசை நாயகனே எம் தலைவா! இசையின் வழியாகவும், பல பாடல்களின் வழியாகவும், புனித எப்ரேம் உம்மை போற்றி புகழ்ந்தார். பல மனிதர்களையும் ஆன்மீக வாழ்விற்கு அழைத்து சென்றார். திருவழிபாட்டை உயிரோட்டமுள்ளதாக மாற்றினார். நாங்களும் எங்கள் வாழ்நாட்களில், பக்தியோடு திருவழிப்பாட்டில் பங்கு பெற்று, உமது நற்பலன்களை பெற்று கொள்ள வரம் தாரும்.
இந்நாளில் நினைவுகூறப்படும் பிற புனிதர்கள்
திருக்காட்சியாளர் அன்னா மரியா தைகி Anna Maria Taigi
பிறப்பு: 29 மே 1769, சியன்னா Sienna, இத்தாலி
இறப்பு: 9 ஜூன் 1837, உரோம், இத்தாலி
முத்திபேறுபட்டம்: 1920, திருத்தந்தை 15 ஆம் பெனடிக்ட்
திருக்காட்சியாளர் ஜோசப் தெ அங்கீட்டா Joseph de Anchieta SJ
பிறப்பு: 19 மார்ச் 1534, ஸ்பெயின்
இறப்பு: 9 ஜூன் 1591, ரேரிடிபா Reritiba, பிரேசில்
முத்திபேறுபட்டம்: 22 ஜூன் 1980
மக்டேபூர்க் நகர் பேராயர் டாகினோ Tagino von Magdeburg
பிறப்பு: 10 ஆம் நூற்றாண்டு, ரேகன்ஸ்பூர்க், பவேரியா
இறப்பு: 9 ஜூன் 1012, ரோட்டன்பூர்க், சாக்சன் அன்ஹால்ட்
† இன்றைய புனிதர் †
(ஜூன் 9)
✠ சிரிய புனிதர் எஃப்ரேம் ✠
(St. Ephrem the Syrian)
திருத்தொண்டர்/ ஒப்புரவாளர்/ மறைவல்லுநர்/ வணக்கத்துக்குரிய தந்தை/ ஆவியின் யாழ்:
(Deacon/ Confessor/ Doctor of the Church/ Venerable Father/ Harp of the Spirit)
பிறப்பு: கி.பி. 306
நிசிபிஸ் (தற்போதைய துருக்கி)
(Nisibis (Modern-day Turkey))
இறப்பு: ஜூன் 9, 373
எடிஸ்ஸா (தற்போதைய துருக்கி)
(Edessa (Modern-day Turkey))
ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
கிழக்கு மரபுவழி திருச்சபை
(Eastern Orthodox Church)
கிழக்கு மரபுவழி கத்தோலிக்க திருச்சபைகள்
(Church of the East)
ஓரியண்டல் மரபுவழி திருச்சபை
(Oriental Orthodoxy)
ஆங்கிலிக்கன் சமூகம்
(Anglican Communion)
சிரிய மரபுவழி திருச்சபை
(Syriac Orthodox Church)
புனிதர் பட்டம்: திருத்தந்தை 15ம் பெனடிக்ட்
நினைவுத் திருநாள்: ஜூன் 9
பாதுகாவல்:
ஆன்மீக வழிகாட்டிகள்; ஆன்மீக தலைவர்கள்
சிரியனான புனிதர் எஃப்ரேம், 4ம் நூற்றாண்டில் வாழ்ந்த “சிரிய திருத்தொண்டரும்” (Syriac Christian Deacon), சிரிய மொழியில் புலமை பெற்ற பாடலாசிரியரும், இறையியலாளரும் ஆவார். இவரின் படைப்புகள் கிறிஸ்தவர்களிடையே மிகவும் புகழ் பெற்றதாய் இருந்தன. பல கிறிஸ்தவப் பிரிவுகள் இவரை புனிதராக ஏற்கின்றன. இவர், திருச்சபையின் மறைவல்லுநர் என கத்தோலிக்க திருச்சபையால் ஏற்கப்படுகின்றார். சிரிய மரபுவழி திருச்சபையில் இவருக்கு மிக முக்கிய வணக்கம் செலுத்தப்படுகின்றது.
எஃப்ரேம் பாடல்கள், கவிதைகள், மறை உரைகள் மற்றும் உரைநடை வடிவில் விவிலிய விளக்க உரைகள் பல எழுதி உள்ளார். இவை துன்ப வேளையில் திருச்சபையை சீர்திருத்த உதவும் வகையில் நடைமுறை இறையியல் படைப்புக்களாக இருந்தன. இவரின் படைப்புகளில் மேற்கு சிந்தனைகளின் தாக்கம் சிறிதாகவே இருப்பதால் அவை கிறிஸ்தவத்தின் துவக்க வடிவத்தைக் காட்டுகின்றது. இவர் சிரிய மொழி பேசும் திருச்சபை தந்தையர்களுல் மிக முக்கியமானவராகக் கருதப்படுகின்றார்.
கவிஞர், ஆசிரியர், பேச்சாளர், விசுவாசத்தின் பாதுகாவலர் என பன்முகம் கொண்ட எஃப்ரேம் ஒருவரே சிரிய இன மக்களிலிருந்து மறைவல்லுனராக அங்கீகரிக்கப்பட்டவர் ஆவார். இவரது காலத்தில் பரவலாக இருந்த தவறான கோட்பாடுகளுக்கெதிரான நிலைப்பாடுகள் எடுப்பதிலும் கத்தோலிக்க திருச்சபையின் கோட்பாடுகளைக் காப்பதிலும் தீவிரம் கொண்டிருந்தார்.
கி.பி. 308ம் ஆண்டு, “நிசிபிஸ்” (Nisibis) நகரின் இரண்டாவது ஆயராக நியமிக்கப்பட்ட “ஜேகப்பின்” (Jacob) மேற்பார்வையில் எஃப்ரேம் வளர்ந்தார். இளமையிலேயே திருமுழுக்கு பெற்ற இவர், திருத்தொண்டராகவும் அருட்பொழிவு பெற்றார். ஆனால், எப்போதுமே இவர் குருத்துவ அருட்பொழிவு பெறவில்லை. ஆயர் ஜேகப்பினால் ஆசிரியராக பணி நியமனம் பெற்ற இவர், சிரிய கிறிஸ்தவ மக்களிடையே பெரும் மதிப்பு பெற்றிருந்தார்.
ஆசிரிய பணியின் பகுதியாக பாடல்களை இயற்றி, இசையமைத்து, விவிலிய வர்ணனைகளை எழுத ஆரம்பித்தார். சில வேளைகளில் தமது பாடல்களில் தம்மை ஒரு மந்தை பணியாளாகவும், தமது ஆயரை மேய்ப்பராகவும் தமது சமூகத்தினரை மந்தை நிலமாகவும் சித்தரித்திருப்பார். எஃப்ரேம், “நிசிபிஸ் நகர பள்ளிகளை” (School of Nisibis) நிருவியவர் என்று பிரபலமாக புகழப்பட்டார். பின்வந்த நூற்றாண்டுகளில், அப்பள்ளி சிரியாக் மரபுவழி திருச்சபையின் கற்றல் மையமாக விளங்கியது.
ரோமப் பேரரசில் கிறிஸ்தவத்தின் நடைமுறைகளை சட்டப்பூர்வமாக்கியவரும் ஊக்குவித்தவருமான பேரரசர் “முதலாம் காண்ஸ்டன்டைன்” (Emperor Constantine I) கி.பி. 337ம் ஆண்டில் மரணமடைந்தார். இந்த வாய்ப்பைப் பற்றிக்கொண்ட பாரசீக மன்னன் “இரண்டாம் ஷாபூர்” (Shapur II of Persia) “ரோமன் வட மெசொப்பொட்டேமியாவில்” (Roman North Mesopotamia) தொடர் தாக்குதல்களை நடத்தினான். நிசிபிஸ் நகரம் கி.பி. 338, 346 மற்றும் 350 ஆகிய ஆண்டுகளில் முற்றுகையிடப்பட்டது. முதலிரண்டு முற்றுகைகளின்போது, எஃப்ரேமின் ஜெப வல்லமையால் நிசிபிஸ் காப்பாற்றப்பட்டது. கி.பி. 350ம் ஆண்டு நடந்த மூன்றாவது முற்றுகைக்காக “மைக்டோனியஸ் ஆற்றை” (River Mygdonius) திசை திருப்பி நிசிபிஸ் நகரின் சுற்றுச் சுவர்களை பலவீனப்படுத்த மன்னன் “இரண்டாம் ஷாபூர்” முயன்றான். ஆனால் நிசிபிஸ் நகர மக்கள் விரைந்து சுவற்றை சரி செய்து, தாக்குதலுக்காக வந்த யானைப்படை ஈர, சதுப்பு நிலங்களில் சறுக்கி விழுந்து சிதறிப்போக காரணமாயினர். எஃப்ரேம் கொண்டாடப்பட்டார். தாம் கண்ட நிசிபிஸ் நகரின் அற்புத இரட்சிப்பினை கவிதையாக வடித்தார். வெள்ளத்தில் பாதுகாப்பாக மிதந்து நீந்திச் சென்ற “நோவாவின் பேழை’யாக” (Noah's Ark) நிசிபிஸ் நகரை வர்ணித்திருந்தார்.
தமது கடைசி காலத்தை “எடிஸ்ஸா” (Edessa) நகரில் கழித்த எஃப்ரேம், பிளேக் கொள்ளை நோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு செய்வாய் செய்கையில் அதே பிளேக் நோயால் பாதிக்கப்பட்டு மரித்தார்.
இப்புனிதரால் இயற்றப்பட்ட நானூறுக்கும் மேற்பட்ட பாடல்கள் இன்றளவும் பாதுகாப்பாக உள்ளன.
† Saint of the Day †
(June 9)
✠ St. Ephrem the Syrian ✠
Deacon/ Confessor/ Doctor of the Church/ Venerable Father/ Harp of the Spirit:
Born: 306 AD
Nisibis (Modern-day Turkey)
Died: June 9, 373
Edessa (Modern-day Turkey)
Venerated in:
Catholic Church
Eastern Orthodox Church
Church of the East
Oriental Orthodoxy
Anglican Communion
Feast: June 9
Patronage: Spiritual directors and Spiritual leaders
Ephrem the Syrian was a Syriac Christian deacon and a prolific Syriac-language hymnographer and theologian of the fourth century.
Born at Nisibis, then under Roman rule, early in the fourth century; died June, 373. The name of his father is unknown, but he was a pagan and a priest of the goddess Abnil or Ibiza. His mother was a native of Amid. Ephraem was instructed in the Christian mysteries by St. James, the famous Bishop of Nisibis, and was baptized at the age of eighteen (or twenty-eight). Thenceforth he became more intimate with the holy bishop, who availed himself of the services of Ephraem to renew the moral life of the citizens of Nisibis, especially during the sieges of 338, 346, and 350.
One of his biographers relates that on a certain occasion he cursed from the city walls the Persian hosts, whereupon a cloud of flies and mosquitoes settled on the army of Sapor II and compelled it to withdraw. The adventurous campaign of Julian the Apostate, which for a time menaced Persia, ended, as is well known, in disaster, and his successor, Jovianus, was only too happy to rescue from annihilation some remnant of the great army which his predecessor had led across the Euphrates. To accomplish even so much the emperor had to sign a disadvantageous treaty, by the terms of which Rome lost the Eastern provinces conquered at the end of the third century; among the cities retroceded to Persia was Nisibis (363).
To escape the cruel persecution that was then raging in Persia, most of the Christian population abandoned Nisibis en masse. Ephraem went with his people, and settled first at Beit-Garbaya, then at Amid, finally at Edessa, the capital of Osrhoene, where he spent the remaining ten years of his life, a hermit remarkable for his severe asceticism. Nevertheless, he took an interest in all matters that closely concerned the population of Edessa. Several ancient writers say that he was a deacon; as such he could well have been authorized to preach in public. At this time some ten heretical sects were active in Edessa; Ephraem contended vigorously with all of them, notably with the disciples of the illustrious philosopher Bardesanes.
To this period belongs nearly all his literary work; apart from some poems composed at Nisibis, the rest of his writings-sermons, hymns, exegetical treatises-date from his sojourn at Edessa. It is not improbable that he is one of the chief founders of the theological "School of the Persians", so-called because its first students and original masters were Persian Christian refugees of 363. At his death St. Ephraem was borne without pomp to the cemetery "of the foreigners". The Armenian monks of the monastery of St. Sergius at Edessa claim to possess his body.
The aforesaid facts represent all that is historically certain concerning the career of Ephraem. All details added later by Syrian biographers are at best of doubtful value. To this class belong not only the legendary and occasionally puerile traits so dear to Oriental writers but also others seemingly reliable, e.g. an alleged journey to Egypt with a sojourn of eight years, during which he is said to have confuted publicly certain spokesmen of the Arian heretics. The relations of St. Ephraem and St. Basil are narrated by very reliable authors, e.g. St. Gregory of Nyssa (the Pseudo?) and Sozomen, according to whom the hermit of Edessa, attracted by the great reputation of St. Basil, resolved to visit him at Caesarea.
He was warmly received and was ordained deacon by St. Basil; four years later he refused both the priesthood and the episcopate that St. Basil offered him through delegates sent for that purpose to Edessa. Though Ephraem seems to have been quite ignorant of Greek, this meeting with St. Basil is not improbable; some good critics, however, hold the evidence insufficient, and therefore reject it, or at least withhold their adhesion. The life of St. Ephraem, therefore, offers not a few obscure problems; only the general outline of his career is known to us. It is certain, however, that while he lived he was very influential among the Syrian Christians of Edessa, and that his memory was revered by all, Orthodox, Monophysites, and Nestorians. They call him the "sun of the Syrians," the "column of the Church", the "harp of the Holy Spirit".
More extraordinary still is the homage paid by the Greeks who rarely mention Syrian writers. Among the works of St. Gregory of Nyssa (P.G., XLVI, 819) is a sermon (though not acknowledged by some) which is a real panegyric of St. Ephraem. Twenty years after the latter's death St. Jerome mentions him as follows in his catalog of illustrious Christians: "Ephraem, deacon of the Church of Edessa, wrote many works [opuscula] in Syriac, and became so famous that his writings are publicly read in some churches after the Sacred Scriptures.
No comments:
Post a Comment