புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

10 June 2020

புனித.பார்டோ (St.Bardo)மைன்ஸ் ஆயர்(Bishop of Mainz June 10

இன்றைய புனிதர்
2020-06-10
புனித.பார்டோ (St.Bardo)
மைன்ஸ் ஆயர்(Bishop of Mainz)
பிறப்பு
980
ஒப்பர்ஹோப்பன்(Oppershofen), ஹெஸன்(Hessen), ஜெர்மனி
இறப்பு
10 ஜூன் 1051
பாடர்போர்ன்(Paderborn), ஜெர்மனி

பார்டோ மிகவும் அமைதியானவராகவும் பக்தியானவராகவும் தன் வாழ்நாள் முழுவதும் திகழ்ந்தார். சிறுவயதிலிருந்தே தான் பிறந்த ஊரிலிருந்த ஆலயத்திற்கு சென்று, ஆலய பணிகளில் ஈடுபட்டு வந்தார். பார்டோ புல்டாவில்(Fulda) இருந்த ஆசீர்வாதப்பர் சபையில் சேர்ந்து குருவானார். குருவானபிறகு ஹெர்ஸ்பெல்டு(Herzfeld) என்ற ஊரிலிருந்த துறவற மடத்தில் பணிபுரிய அனுப்பப்பட்டார். அப்போது எதிர்பாராதவிதமாக அத்துறவற இல்ல தலைவர் இறந்துவிட்டார். இதனால் அவரை தொடர்ந்து, பார்டோ தலைவர் பொறுப்பேற்று, ஆலயப்பணிகளிலும் ஈடுபட்டார். அப்போதுதான் அவர் மைன்ஸ் என்ற மறைமாநிலத்திற்கு 1031 ஆம் ஆண்டு ஆயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் மற்றவர்களின் நல்வாழ்விற்காக தன் வாழ்வையே தியாகமாக்கினார். போதுமான அளவு உணவுகூட உண்ணாமல் வாழ்ந்தார். தன்னுடைய உணவையும், தனக்கு சொந்தமான அனைத்தையுமே ஏழைகளுக்கு கொடுத்துவிட்டு, மிகவும் ஏழ்மையான வாழ்வு வாழ்ந்தார். இதனால் திருத்தந்தை 9 ஆம் லியோ அவர்களால் கண்டிக்கப்பட்டார். பணியாற்ற உடலுக்கு சக்தி வேண்டுமென்று திருத்தந்தை அறிவுரை கூறினார். திருத்தந்தையின் ஆசீரையும் அறிவுரையும் பெற்ற பார்டோ, பாடர்போன் என்ற ஊருக்கு இறைபணிக்காக பயணம் செய்யும்போது காலமானார். அவரது கல்லறை ஜெர்மனியில் வைக்கப்பட்டுள்ளது. இவரது கல்லறையை ஏராளமானோர் பார்வையிட சென்றனர். அவர்கள் இவரிடம் மன்றாடும்போது, கேட்டவைகள் அனைத்தையும் பெற்றுக்கொண்டனர். இன்றுவரை இவரின் கல்லறையில் ஏராளமான புதுமைகள் நடந்த வண்ணமாக உள்ளது.


செபம்:
ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்குரியது என்று மொழிந்த இறைவா! ஏழைகளின் நல்வாழ்விற்காக, தன்னிடம் இருந்த அனைத்தையுமே புனித பார்டோ தியாகம் செய்தார். நாங்கள் அவரைப்போல எல்லாவற்றையுமே தியாகம் செய்யாவிட்டாலும், ஒருசிலவற்றையாவது பிறருடன் பகிர்ந்து வாழ, எங்களுக்கு நல்ல மனதை தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை இறைஞ்சுகின்றோம்.




இந்நாளில் நினைவுகூறப்படும் பிற புனிதர்கள்

பேராயர் கர்தினால் யோஹானஸ் தொமினிக் Johannes Dominici
பிறப்பு: 1357, புளோரன்ஸ் Florenz, இத்தாலி
இறப்பு: 10 ஜூன் 1419 புடாஸ்பெஸ்ட் Budapest, ஹங்கேரி


கொலோன் நகர் மறைசாட்சி மவ்ரினுஸ் Maurinus von Köln
பிறப்பு: 10 ஆம் நூற்றாண்டு
இறப்பு: 10 ஜூன், 10 நூற்றாண்டு


மறைசாட்சி ஒலிவியா Olivia
பிறப்பு: 10 ஆம் நூற்றாண்டு, செசிலியா Sizilien, இத்தாலி
இறப்பு: 10 ஆம் நூற்றாண்டு, துனிஸ் Tunis, துனேசியன்

No comments:

Post a Comment