புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

12 July 2020

புனிதர்கள் லூயிஸ் மார்ட்டின் மற்றும் மேரி செலின் குரின் ✠(Saints Louis Martin and Marie-Zélie Guérin) July 12

† இன்றைய புனிதர் †
(ஜூலை 12)

✠ புனிதர்கள் லூயிஸ் மார்ட்டின் மற்றும் மேரி செலின் குரின் ✠
(Saints Louis Martin and Marie-Zélie Guérin)
பொதுநிலையினர்:
(Laypeople)

புனிதர் லூயிஸ் மார்ட்டின்:

பிறப்பு: ஆகஸ்ட் 22, 1823
போர்டியூக்ஸ், கிரோன்ட், ஃபிரான்ஸ்
(Bordeaux, Gironde, France)

இறப்பு: ஜூலை 29, 1894 (வயது 70)
அர்நீர்ஸ்-சுர்-இடன், யூர், ஃபிரான்ஸ்
(Arnières-sur-Iton, Eure, France)

ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)

முக்திபேறு பட்டம்: அக்டோபர் 19, 2008
திருத்தந்தை 16ம் பெனடிட்
(Pope Benedict XVI)

புனிதர் பட்டம்: அக்டோபர் 18, 2015
திருத்தந்தை ஃபிரான்சிஸ்
(Pope Francis)

நினைவுத் திருவிழா: ஜூலை 12

பாதுகாவல்: குடும்பம், தந்தை

புனிதர்கள் “லூயிஸ் மார்ட்டின்” (Louis Martin) மற்றும் “மேரி செலின் குரின்” (Marie-Azélie Guérin) ஆகிய இருவரும் திருமணமான ரோமன் கத்தோலிக்க ஃபிரெஞ்ச் பொதுநிலையினரும், “கார்மேல்” (Carmelite nun) சபையின் அருட்சகோதரியான “புனிதர் லிசியே நகரின் தெரெசா” (St. Thérèse of Lisieux) உள்ளிட்ட ஐந்து அருட்சகோதரியினரின் பெற்றோருமாவர். 2015ம் ஆண்டு, அக்டோபர் மாதம் 18ம் தேதி, இவர்களிருவரும் திருத்தந்தை ஃபிரான்சிஸ் அவர்களால் புனிதர்களாக அருட்பொழிவு செய்விக்கப்பட்டனர். கத்தோலிக்க திருச்சபையின் சரித்திரத்தில், முதன்முறையாக புனிதர்களான திருமணமான இணை இவர்களாவர்.

“லூயிஸ் ஜோசஃப் அலாய்ஸ் ஸ்டனிஸ்லாஸ் மார்ட்டின்” (Louis Joseph Aloys Stanislaus Martin) எனும் இயற்பெயர் கொண்ட “லூயிஸ் மார்ட்டின்” (Louis Martin), கி.பி. 1823ம் ஆண்டு, ஃபிரான்ஸ் நாட்டின் “போர்டியூக்ஸ்” (Bordeaux) எனுமிடத்தில் பிறந்தவர் ஆவார். “பியர்ரெ-ஃபிரான்காய்ஸ் மார்ட்டின்” (Pierre-François Martin) மற்றும் மேரி-ஆன்-ஃபன்னி போரியு” (Marie-Anne-Fanny Boureau) ஆகியோர் இவரது பெற்றோர் ஆவர். இவர், தமது பெற்றோருக்குப் பிறந்த ஐந்து குழந்தைகளில் மூன்றாவதாகப் பிறந்தவர் ஆவார். இவருடன் பிறந்த சகோதரர்கள் அனைவரும் முப்பது வயதாவதற்கு முன்னமே மரித்துப் போயினர்.

லூயிஸ், “அகுஸ்தீனிய பெரிய புனிதர் பெர்னார்ட்” (Augustinian Great St. Bernard Monastery) துறவு மடத்தில் இணைந்து ஒரு துறவி ஆக விரும்பினார் என்றாலும், இலத்தீன் மொழி கற்று தேற இயலவில்லையாதலால் இவர் நிராகரிக்கப்பட்டார். பின்னர் அவர், கடிகாரம் செய்பவராக ஆனார். அதற்காக “ரென்ஸ்” (Rennes) மற்றும் “ஸ்ட்ராஸ்பேர்க்” (Strasbourg) ஆகிய நகர்களில் கற்று தேறினார்.

♪ ✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯♪

புனிதர் மேரி செலின் குரின்:

பிறப்பு: டிசம்பர் 23, 1831
செயின்ட்-டெனிஸ்-சுர்-சர்தொன், ஒர்ன், ஃபிரான்ஸ்
(Saint-Denis-sur-Sarthon, Orne, France)

இறப்பு: ஆகஸ்ட் 28, 1877 (aged 45)
அலென்கான், ஒர்ன், ஃபிரான்ஸ்
(Alençon, Orne, France)

ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)

முக்திபேறு பட்டம்: அக்டோபர் 19, 2008
திருத்தந்தை 16ம் பெனடிட்
(Pope Benedict XVI)

புனிதர் பட்டம்: அக்டோபர் 18, 2015
திருத்தந்தை பிரான்சிஸ்
(Pope Francis)

நினைவுத் திருவிழா: செப்டம்பர் 25

இவர், “செயின்ட்-டெனிஸ்-சுர்-சர்தொன்” (Saint-Denis-sur-Sarthon) எனும் இடத்திற்கு அருகிலுள்ள “கண்டலெய்ன்” (Gandelain) என்னும் இடத்தில் பிறந்தவர் ஆவார். “இசிதோர் குரின்” (Isidore Guérin) மற்றும் லூயிஸ் ஜீன் மேஸ்” (Louise-Jeanne Macé) ஆகியோர் இவரது பெற்றோர் ஆவர். இவர் தமது பெற்றோரின் மூன்று குழந்தைகளில் இரண்டாவதாகப் பிறந்தவர் ஆவார். இவரது தமக்கை “மேரி லூயிஸ்” (Marie-Louise) பின்னாளில் “விசிடேஷன்” சபையின் (Visitandine nun) அருட்சகோதரியானார். இவரது இளைய சகோதரரான “இசிடோர்” (Isidore), ஒரு மருந்தாளுனரானார். தாமும் ஒரு அருட்சகோதரியாக துறவறம் பெற முயன்ற செலின், தமக்கிருந்த சுவாசக்கோளாறுகள் மற்றும் அடிக்கடி தொல்லை தந்த தலைவலி காரணமாக துறவறம் பெற இயலவில்லை. ஆகவே, தமக்கு நிறைய குழந்தை பாக்கியம் வேண்டி இறைவனை செபித்தார். ஆக, தமது குழந்தைகளை இறை சேவையில் அர்ப்பணிக்க விரும்பினார். பின்னர், பின்னலாடைகளுக்கான நூல் தயாரிக்கும் தொழில் தொடங்கிய செலின், கி.பி. 1858ம் ஆண்டு மார்ட்டினை சந்தித்து அவருடன் காதலில் வீழ்ந்தார். பின்னர் இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.

திருமண வாழ்க்கை:
அன்பில் இணைந்த இத்தம்பதியினர், ஒன்பது குழந்தைகளை பெற்றெடுத்தனர். அவர்களில் நால்வர் சிறுவயதிலேயே இறந்துவிட்டனர். மீதமுள்ள ஐந்து குழந்தைகளும் பிற்காலத்தில் அருட்சகோதரிகளாக மாறினர். இந்த தம்பதியரின் கடைசி குழந்தையாக (ஒன்பதாவது) பிறந்தவர்தான் “புனிதர் லிசியே நகரின் தெரெசா” (St. Thérèse of Lisieux).

இவர்களின் குழந்தைகள்:
1. மேரி லூயிஸ் (Marie Louise) (ஃபெப்ரவரி 22, 1860 – ஜனவரி 19, 1940), அருட்சகோதரி, “லிசியே நகர கார்மல்சபை” (Carmelite at Lisieux)
2. மேரி பவுலின் (Marie Pauline) (செப்டம்பர் 7, 1861 – ஜூலை 28, 1951), அருட்சகோதரி, “லிசியே நகர கார்மல்சபை” (Carmelite at Lisieux)
3. மேரி லியோனி (Marie Léonie) (ஜூன் 3, 1863 – ஜூன் 16, 1941), அருட்சகோதரி, “சேன்” நகர விசிடேஷன் சபை” (Visitandine at Caen)
4. மேரி ஹெலன் (Marie Hélène) (அக்டோபர் 3, 1864 – ஃபெப்ரவரி 22, 1870); 
5. ஜோசப் லூயிஸ் (Joseph Louis) (செப்டம்பர் 20, 1866 – ஃபெப்ரவரி 14, 1867); 
6. ஜோசப் ஜீன்-பேப்ஸ்ட் (Joseph Jean-Baptiste) (டிசம்பர் 19, 1867 – ஆகஸ்ட் 24, 1868); 
7. மேரி செலின் (Marie Céline) (ஏப்ரல் 28, 1869 – ஃபெப்ரவரி 25, 1959), அருட்சகோதரி, “லிசியே நகர கார்மல்சபை” (Carmelite at Lisieux)
8. மேரி மெலனி தெரஸ் (Marie Mélanie-Thérèse) (ஆகஸ்ட் 16, 1870 – அக்டோபர் 8, 1870); 
9. மேரி பிரான்கோய்ஸ் தெரஸ் (Marie Françoise-Thérèse) (ஜனவரி 2, 1873 – செப்டம்பர் 30, 1897), அருட்சகோதரி, “லிசியே நகர கார்மல்சபை” (Carmelite at Lisieux), 1925ஆண்டு, புனிதர் பட்டம்.

மரணம்:
செலின், மார்பக புற்றுநோய் காரணமாக, கி.பி. 1877ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், 28ம் தேதி, தமது நாற்பத்தைந்து வயதில், தமது கணவரையும் குழந்தைகளையும் விட்டுவிட்டு மரித்துப்போனார். அவர் லூயிஸை மணந்த அதே பேராலயத்தில் அவரது இறுதிச் சடங்கும் நடந்தது. செலின் மறைந்த சில வாரங்களின் பின்னர், லூயிஸ் தமது பின்னலாடை நூல் உற்பத்தி செய்யும் தொழிலையும் வீட்டையும் விற்றுவிட்டு, செலினின் சகோதரன் “இசிடோர் குரின்” (Isidore Guérin) வசித்த “நோர்மண்டி” (Normandy) அருகேயுள்ள “லிசியேக்ஸ்” (Lisieux) நகர் சென்று வசித்தார்.

கி.பி. 1889ம் ஆண்டு, இரண்டு முறை பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்ட லூயிஸ், இருதய தமனி நாள சுவர்களில் ஏற்பட்ட தடிமன், அடைப்புகள் காரணமாக மூன்று வருடங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். 1892ம் ஆண்டு வீடு திரும்பிய இவர், கி.பி. 1894ம் ஆண்டு, ஜூலை மாதம், 29ம் தேதி, தமது 70 வயதில் மரித்தார்.


† Saint of the Day †
(July 12)

✠ Saints Louis Martin and Marie-Azélie Guérin ✠

Laypeople:

Louis Martin:
Born: August 22, 1823
Bordeaux, Gironde, France

Died: July 29, 1894 (Aged 70)
Arnières-sur-Iton, Eure, France

Azélie-Marie Guérin:
Born: December 23, 1831
Saint-Denis-Sur-Sarthon, Orne, France

Died: August 28, 1877 (Aged 45)
Alençon, Orne, France

Venerated in: Roman Catholic Church

Beatified: October 19, 2008
Pope Benedict XVI

Canonized: October 18, 2015
Pope Francis

Feast: July 12

The Lord sends the Church the men and women who are needed to keep her holy in times of trouble. Among these are St. Francis of Assisi, St. John of the Cross, St. Ignatius of Loyola, St. Faustina, and the first married couple ever to be canonized together: Louis and Azelie-Marie (Zelie) Martin. Their feast day is July 12. Pope Benedict beatified them in 2008 and Pope Francis canonized them on October 18, 2015.

Louis Martin and Marie-Azélie "Zélie" Guérin martins were two married Roman Catholic French laypeople and the parents of five Roman Catholic nuns, including Thérèse of Lisieux, a Carmelite nun who was canonized as a saint of the Catholic Church in 1925. On 18 October 2015, the couple were also canonized as saints, becoming the first spouses in the church's history to be canonized as a couple.

Louis Martin, the third of five children, was born on August 22, 1823, in Bordeaux, France. His father came from a long line of soldiers. His parents, Pierre-Francois Martin and Marie-Anne-Fanny Boureau baptized him Louis Joseph Aloys Stanislaus Martin and, of all his siblings, only he lived past the age of 30.

From an early age, enamored with the life of the monks and their dogs who roamed the Alps to save weary and lost travelers, Louis yearned to join the monastery. He joined the Great St. Bernard Monastery, of the Augustinian order, but the monks eventually rejected him because of his failure at learning Latin.

Refused his first choice, Louis turned to the occupation of jeweler and watchmaker, studying the trade-in Rennes and then in Strasbourg. Eventually, he ended up in Alençon, where he would meet his future wife.

Azelie-Marie was born in Gandelain, near Saint-Denis-Sur-Sarthon, Orne, France, the second daughter of Isidore Guerin and Louise-Jeanne Macé. Her older sister, Marie-Louise, became a Visitation nun, and a younger brother, Isidore, became a pharmacist. She was born on December 22, 1831.

From a young age, Zelie wanted to become a nun with the Sisters of Charity of St. Vincent de Paul, but constant headaches and respiratory complications kept her from fulfilling her dream. In turn, since the religious life was not open to her, she prayed to God that she would become the mother of many children who would be consecrated to God.

Zelie then became a lacemaker, producing the world-famous Alençon lace, one of the most beautiful and intricate handmade laces. She became so skilled at this occupation that she started her own business and became very successful.

While Louis was making watches and jewelry, and while Zelie expanded her lace-making trade, they met in Alençon on July 13, 1858. These two faithful Catholics, who had both been thwarted in becoming religious, fell in love and were married in October of the same year at the Basilica of Notre-Dame in Alençon.

For the first ten months of their marriage, by mutual agreement, they lived a celibate life even though Zelie had prayed for many children consecrated to God. Both Louis and Zelie were open about the life they were leading when they met with their spiritual director.

When he learned of the celibacy, he explained the obligations of the Sacrament of Matrimony, and that they should not deny the unitive and procreative purpose of the state of life they had chosen. Thus they consummated their marriage and had nine children over the next 14 years:

Marie Louise, 1860-1940, became Sr. Marie of the Sacred Heart, a Carmelite. Marie Pauline, 1861-1951, Mother Agnes of Jesus, also became a Carmelite. Their third daughter, Marie Leonie, 1863-1941, Sr. Francois-Therese, became a Visitation nun at Caen — her cause for canonization was opened in January 2015. Marie Helene only lived from 1864-1870. Two boys lived less than a year: Joseph Louis (September 1866 to February 1867) and Joseph Jean-Baptiste (December 1867 to August 1868).

Marie Celine (1869-1959) became Sr. Genevieve of the Holy Face, also a Carmelite. Marie-Melanie-Therese lived only eight weeks in 1870.

When the last of the nine children were born, the doctors held little hope that she would survive, but God had other plans. Little Marie Francois-Therese, born on January 2, 1873, became Sr. Therese of the Child Jesus and of the Holy Face, a Carmelite who not only became a saint but has also been declared a doctor of the Church. She died on September 30, 1897.

As parents Louis and Zelie found great joy in their children: loving them deeply, training them in the faith as well as in the joys of nature. Although they lost the two boys, their five-year-old daughter, and an infant girl within a short time, they never regretted having children. As Zelie wrote, “We lived only for them — they were all our happiness.”

It was after the deaths of these little children that Louis and Zelie welcomed their last child, who became the Little Flower, St. Therese. But Zelie wrote of her at the time, “I have no hope of saving her. The poor little thing suffers so horribly…it breaks your heart to see her.” Thankfully for Zelie — and for the Catholic Church — the little girl survived and just one year later became a “big baby, browned by the sun.” She was an entirely different child, full of life, laughter, and the joy of knowing that she was loved.

The Martin family was a bright light of Catholic charity and orthodoxy in post-revolution France. After their marriage, both Louis and Zelie continued their crafts, but eventually, Louis gave up his skill to help Zelie with her successful business. Unlike many businesses of their time (and our time), the Martins refused to open on Sundays.

They were heroic examples of Catholic living, as they attended daily Mass and received the sacraments frequently. As a family, they prayed and read spiritual classics such as The Imitation of Christ by Thomas à Kempis.

Their piety was complemented by times of play and pilgrimage.

Sadly, Zelie became ill in 1877 and died from breast cancer on August 28, 1877. The funeral was held in the same basilica where Louis and Zelie were married. Louis was left alone to raise their five remaining daughters.

Less than a month later, Louis sold the lace-making business and moved his family to Lisieux in Normandy, France. In Lisieux, he purchased a brick two-story home with a lovely garden just a few blocks from the Cathedral of St. Pierre, built in the 12th century. (Visitors can see the pew the Martins used as well as the altar they donated to the cathedral.)

As Therese grew up she greatly missed her mother but spent much time with her father, who loved nature’s animals and plants. He also made pilgrimages to Lourdes, Chartres, Rome, and the Holy Land.

At their home, now a museum, there is a marble bench in the garden with replicas of Louis and Therese when he gave his consent to her entering the Carmelite monastery. His face reflects his loving sacrifice and her arms are slightly raised in joy.

After his wife’s death, Louis lived like a monk, turning the top floor room into a “cell” where he spent many hours in prayer and meditation. His days were divided into worship, prayer, and garden work. Shortly after his last child entered religious life, Louis suffered a stroke which left him mostly paralyzed. He died on July 29, 1894.

Dear Louis and Zelie, during these chaotic times when families are being attacked and undermined from all directions, intercede for children and their parents that they may be heroic examples of both the love and the holiness so necessary to enter eternal life and to lead others to Christ. Amen!

No comments:

Post a Comment