புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

12 July 2020

புனிதர் ஜான் வால் ✠(St. John Wall. July 12

† இன்றைய புனிதர் †
(ஜூலை 12)

✠ புனிதர் ஜான் வால் ✠
(St. John Wall)
இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடுகளின் நாற்பது மறைசாட்சிகள்:
(Forty Martyrs of England and Wales)

பிறப்பு: 1620
பிரெஸ்டொன், லேன்கஷைர், இங்கிலாந்து
(Preston, Lancashire, England)

இறப்பு: ஆகஸ்ட் 22, 1679
வோர்செஸ்டர், இங்கிலாந்து
(Worcester, England)

ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்கம்
(Roman Catholicism)

முக்திபேறு பட்டம்: 1929
திருத்தந்தை பதினோராம் பயஸ்
(Pope Pius XI)

புனிதர் பட்டம்: அக்டோபர் 25, 1970
திருத்தந்தை ஆறாம் பவுல்
(Pope Paul VI)

முக்கிய திருத்தலம்:
டௌவை, ஃபிரான்ஸ்
(Douai, France)

நினைவுத் திருநாள்: ஜூலை 12

புனிதர் ஜான் வால், ஒரு ஆங்கிலேய கத்தோலிக்க ஃபிரான்சிஸ்கன் துறவி (English Catholic Franciscan friar) ஆவார். இவர், கத்தோலிக்க திருச்சபையால் புனிதராக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளார்.

வடமேற்கு இங்கிலாந்தின் “லேன்காஷைர்” (Lancashire) பிராந்தியத்தின் “பிரெஸ்டன்” (Preston) நகரில் பிறந்த இவர், தமது இளமையில் “டௌவை” எனுமிடத்திலுள்ள (தற்போதைய ஃபிரான்ஸ்) “ஆங்கிலேய இறையியல் கல்லூரியில்” (English College, Douai) இணைந்து இறையியல் கற்றார். கி.பி. 1645ம் ஆண்டு, குருத்துவ அருட்பொழிவு பெற்றார். தாயகம் திரும்பிய இவர், கத்தோலிக்கர்களுக்காக திருப்பலி நிறைவேற்றியதுடன், திருத்தந்தையருக்கு விசுவாசமாகவும் இருந்தார். “டௌவை” (Douai) திரும்பிய இவர், ஃபிரான்சிஸ்கன் இளம் துறவியர் சபையில் (Order of Friars Minor) இணைந்து, “புனிதர் அன்னாவின் துறவி ஜோச்சிம்” (Friar Joachim of St. Ann) எனும் ஆன்மீக பெயரையும் ஏற்றார். விரைவிலேயே புகுமுக துறவியரின் தலைவராக (Master of novices) நியமனம் பெற்றார்.

கி.பி. 1656ம் ஆண்டு, இங்கிலாந்துக்கு திரும்பிய இவர், “வோர்கெஸ்டெர்ஷர்” (Worcestershire) நகரில் குடியேறினார். அங்கே அவர் “அரசு இலக்கணப் பள்ளியின்” (Royal Grammar School Worcester) ஆளுநரானார்.

நாட்டின் கத்தோலிக்கர்களுக்கு 22 வருடம் சேவை புரிந்த இவர் மீது, இவர் “தீதுஸ் ஓட்ஸ்” (Titus Oates) என்பவரின் ஆதரவாளர் என்ற சந்தேகத்தின் பேரில், கி.பி. 1678ம் ஆண்டு, இவர் கைது செய்யப்பட்டு “வொர்செஸ்டர்” (Worcester) சிறையிலடைக்கப்பட்டார். (“தீதுஸ் ஓட்ஸ்” (Titus Oates), இங்கிலாந்து அரசன் இரண்டாம் சார்லசை (King Charles II) கொள்வதற்கு “போப்பிஷ் பிளாட்” (Popish Plot) எனப்படும் “கத்தோலிக்க சதித்திட்டம்” தீட்டியவர் என அடையாளம் காணப்பட்டவர்.)

ஏப்ரல் மாதம் 25ம் நாள், இவர்மீதான விசாரணை நடந்தது. லண்டனுக்கு அனுப்பி வைக்கப்பட்ட பின்னர், அவர் வர்செஸ்டர்க்கு கொண்டு வரப்பட்டு ஒரு கத்தோலிக்க பாதிரியாக இருப்பதற்கும், அத்தகைய நடைமுறைகளை செய்வதற்குமாக, இவர் தூக்கிலிடப்பட்டார்.

உள்ளூரில் அவர் மிகவும் மரியாதைக்குரிய நபராக இருந்தார். பொதுமக்களின் எதிர்விளைவானது, மக்களுக்கு அவர்மேல் அனுதாபங்கள் முற்றிலும் இருந்ததாகக் காட்டியது. பெரும்பாலும் எதிர்திருச்சபைகளைச் சேர்ந்த பார்வையாளர்கள், வாய்விட்டு கதறி அழுதனர். வெளிப்படையாக அழுத நகர தலைவர் (Sheriff), ரோமன் கத்தோலிக்க திருத்தந்தை அல்லது பாப்பிறை அமைப்புகளுடன் தொடர்புடைய கோட்பாடுகள், நடைமுறைகள் மற்றும் விழாக்களுக்கு எதிரான நடவடிக்கைகளை கைவிடுமாறு வலியுறுத்தினார்.

வர்செஸ்டரின் செயிண்ட் ஓஸ்வால்ட் ஆலயத்தின் (Church of St. Oswald of Worcester) அருகில் உள்ள கல்லறையில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. இப்புனிதரின் தலை மட்டும், ஃபிரான்சிலுள்ள (France) “டௌவை” (Douai) எனுமிடத்திலுள்ள அன்னாரின் துறவு மடத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அது, இன்னமும் பாதுகாக்கப்பட்டு வணங்கப்படுகின்றது.

புனிதர் ஜான் வால், ஒரு தலைசிறந்த கல்வியாளராக இருந்தார். ஒருவேளை அவருடைய தலைமுறையின் மிகுந்த அறிவார்ந்த ஆங்கில கத்தோலிக்க குருவாக இருந்தார்.

† Saint of the Day †
(July 12)

✠ St. John Wall ✠

Forty Martyrs of England and Wales:

Born: 1620 AD
Preston, Lancashire, England

Died: August 22, 1679
Worcester, England

Venerated in: Roman Catholic Church

Beatified: 1929 AD
Pope Pius XI

Canonized: October 25, 1970
Pope Paul VI

Major shrine: Douai, France

Feast: July 12

John Wall, O.F.M., was an English Catholic Franciscan friar, who is honored as a martyr. Wall served on the English mission in Worcestershire for twenty-two years before being arrested and executed at the time of Titus Oates's alleged plot.

John Wall, in religion Father Joachim of St Anna, was the fourth son of Anthony Wall of Chingle (Singleton) Hall, Lancashire. He was born in 1620, and when very young, was sent to the English College at Douai. From there he proceeded to Rome, where he was raised to the priesthood in 1648. Several years later he returned to Douai and was clothed in the habit of St Francis in the convent of St Bonaventure. He made his solemn profession on January 1, 1652. So great was the estimation in which he was held by his brethren, that within a few months he was elected vicar of the convent, and soon after, master of novices.

In 1656 he joined the English mission, and for twelve years he labored in Worcestershire under the names of Francis Johnson or Webb, winning souls even more by his example than by his words. At Harvington to this day the memory of Blessed Father Johnson is cherished, and stories of his heroic zeal are recounted by the descendants of those who were privileged to know and love the glorious martyr.

Some of the charges raised against Father Wall when he was captured, were that he had said Mass, heard confessions and received converts into the Church. He was accidentally found, in December 1678, at the house of a friend, Mr. Finch of Rushock, and carried off by the sheriff’s officer. He was committed to Worcester jail, and lay captive for five months, enduring patiently all the loneliness, suffering, and horrors of prison life, which at that time were scarcely less dreadful than death itself.

On April 25, 1679, Blessed John Wall was brought to court. His condemnation was a foregone conclusion. He was sent back to prison until the king’s further pleasure concerning him should be known, and for another four months, he languished in captivity. It was during this period that he was offered his life if he would deny his faith. “But I told them,” said the martyr, “that I would not buy my life at so dear a rate as to wrong my conscience.”

One of Father Wall’s brethren in religion, Father William Levison, had the privilege of seeing the martyr for the space of four or five hours on the day before his execution. Father William tells us:

“I heard his confession and communicated him, to his great joy and satisfaction. While in prison he carried himself like a true servant of his crucified Master, thirsting after nothing more than the shedding of his blood for the love of his God, which he performed with courage and cheerfulness becoming a valiant soldier of Christ, to the great edification of all the Catholics, and the admiration of all Protestants.”

Father Wall’s martyrdom took place on Red Hill, overlooking the city of Worcester, on August 22, 1679. His head was kept in the convent at Douai until the French Revolution broke out and the community fled to England. What became of it, then, is not known.

The Catholics of Worcester found consolation in remarking, as a proof of his sanctity, that the grass around the grave of Blessed John Wall always appeared green, while the rest of the churchyard was bare. A large crucifix was raised in the little Catholic churchyard at Harvington to the memory of this saintly son of St Francis, Father Joachim of St Anna.

Father Joachim of St Anna was beatified under the name of Blessed John Wall, December 15, 1929, together with a fellow Franciscan, Father Godfrey Maurice Jones, or Blessed Godfrey, and one hundred and thirty-four companions.
~ From The Franciscan Book of Saints, Fr. Marion Habig, OFM

No comments:

Post a Comment