புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

12 July 2020

புனிதர் ஜான் ஜோன்ஸ் ✠(St. John Jones) July 12

† இன்றைய புனிதர் †
(ஜூலை 12)

✠ புனிதர் ஜான் ஜோன்ஸ் ✠
(St. John Jones)
இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடுகளின் நாற்பது மறைசாட்சிகள்:
(Forty Martyrs of England and Wales)

பிறப்பு: தெரியவில்லை
கிளின்னாக் ஃபாவ்ர், வேல்ஸ்
(Clynnog Fawr, Wales)
 
இறப்பு: ஜூலை 12, 1598

ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்கம்
(Roman Catholicism)

முக்திபேறு பட்டம்: 1929
திருத்தந்தை பதினோராம் பயஸ்
(Pope Pius XI)

புனிதர் பட்டம்: அக்டோபர் 25, 1970
திருத்தந்தை ஆறாம் பவுல்
(Pope Paul VI)

முக்கிய திருத்தலம்:
போன்டாய்ஸ், வடமேற்கு புறநகர், பாரிஸ், ஃபிரான்ஸ்
(Pontoise, Northwestern Suburbs of Paris, France)

நினைவுத் திருநாள்: ஜூலை 12

“ஜான் பக்கி” (John Buckley) என்றும், “ஜான் கிரிஃப்ஃபித்” (John Griffith) என்றும், “காட்ஃபிரே மௌரிஸ்” (Godfrey Maurice) என்றும் அறியப்படும் புனிதர் ஜான் ஜோன்ஸ் (St. John Jones), ஒரு ஃபிரான்சிஸ்கன் சபை துறவியும் (Franciscan friar), கத்தோலிக்க குருவும் (Catholic priest), மறைசாட்சியும் (Martyr) ஆவார். இவர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடுகளின் நாற்பது மறைசாட்சிகளுள் (Forty Martyrs of England and Wales) ஒருவர் ஆவார்.

“வேல்ஸ்” (Wales) நாட்டின் “சேர்னார்ஃபோன்ஷைர்” (Caernarfonshire) மாநிலத்தின் “கிளின்னாக் ஃபாவ்ர்” (Clynnog Fawr) எனுமிடத்தில் பிறந்த இவர், “இங்கிலாந்து (England), வேல்ஸ் (Wales) மற்றும் அயர்லாந்தின் (Ireland) வரலாற்றில், ஆங்கிலிகன் (Anglican) சேவைகளில் கலந்துகொள்ள பிடிவாதமாக மறுத்தவர்களுடைய” (Recusant Welsh) குடும்பங்களில் ஒன்றினைச் சேர்ந்தவர் ஆவார். எதிர் சீர்திருத்த சபைகளிருந்தும், தமது வாழ்க்கை முழுதும் கத்தோலிக்க விசுவாசத்தில் வாழ்ந்தவர்கள் ஆவர். தமது இளமையில், இங்கிலாந்தின் (England) கிரீன்விச்’இலுள்ள (Greenwich) ஃபிரான்சிஸ்கன் துறவறத்தில் சேர்ந்தார். 1559ம் ஆண்டு, ஃபிரான்ஸ் (France) நாட்டின் “போன்டாய்ஸ்” (Pontoise) சென்று, தமது உறுதிப்பாடுகளை ஏற்றார்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு, ஜோன்ஸ் ரோம் நகருக்கு பயணம் செய்தார். அங்கே, ஃபிரான்சிஸ்கன் இளம் துறவியருடன் தங்கினார். 1591ம் ஆண்டு, தம்மை ஆங்கிலேய மறைப்பணிகளுக்கு தம்மை அனுப்புமாறு வேண்டினார்.

ஜோன்ஸின் மேலுள்ள துறவியர், அவரது வேண்டுகோளைக் கருத்தில் கொண்டனர். பிரிட்டன் (Britain) நாடுகளுக்கு மறைப்பணியாற்ற செல்வோர் அடிக்கடி தூக்கிலிடப்படுவதையும் கொல்லப்படுவதையும் அவர்கள் அறிந்து வைத்திருந்தனர். இருந்த போதினும், அவரது மேலுள்ள துறவியர், இறுதியாக ஜோன்ஸ் மறைப்பணி வேண்டுகோளை அனுமதித்தனர். திருத்தந்தை எட்டாம் கிளமெண்ட் (Pope Clement VIII) அவர்களிடமிருந்து ஒரு சிறப்பு ஆசீர்வாதத்தையும் பாராட்டுக்களையும் பெற்றுத் தந்ததனர்.

கி.பி. 1592ம் ஆண்டின் இறுதியில் லண்டன் மாநகர் சென்று சேர்ந்த ஜோன்ஸ், அங்கே “ஜான் ஜெரார்ட்” (Father John Gerard, S.J) எனும் இயேசுசபை குரு ஏற்பாடு செய்து தந்திருந்த இல்லத்தில் தங்கினார். அவர் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உழைக்க ஆரம்பித்தார். இங்கிலாந்து நாட்டிலுள்ள அவரது சகோதர ஃபிரான்சிஸ்கன் துறவியர் அவரைத் தமது தலைமை துறவியாக தேர்ந்தெடுத்தனர்.

இங்கிலாந்து நாட்டின் அரசியான முதலாம் எலிசபெத்தின் (Elizabeth I of England) ஆட்சி காலத்தில், “ரிச்சர்ட் டாப்கிலிஃப்” (Richard Topcliffe) என்றொரு பாராளுமன்ற உறுப்பினர் இருந்தார். கத்தோலிக்க குருமாரை பிடித்து விசாரணை நடத்துவதும், சித்திரவதை செய்து துன்புறுத்தி கொல்வதிலும், கத்தோலிக்க நடைமுறைக்கு எதிரான தண்டனை விதிகளை அரசாங்கத்தின் சார்பாக செயல்படுத்துவதிலும் அவர் மிகவும் பிரதானமாக இருந்தார். 1596ம் ஆண்டு ஒருநாள், தந்தை ஜோன்ஸ் இரண்டு கத்தோலிக்கர்களின் இல்லங்களுக்கு விஜயம் செய்ததுவும், அங்கே திருப்பலி நிறைவேற்றியதுவும் ஒரு உளவாளி மூலமாக “ரிச்சர்ட் டாப்கிலிஃப்”கு அறியவந்தது. குற்றம் சாட்டப்பட்டபோது, அந்த இரண்டு கத்தோலிக்கர்களும் உண்மையில் சிறையில் இருந்ததாக பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது. இருந்தாலும், ஜோன்ஸ் கைது செய்யப்பட்டார், கடுமையாக சித்திரவதை செய்யப்பட்டார். ரிச்சர்ட், பின்னர் ஜோன்சை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று அவரை சித்திரவதைக்கு உட்படுத்தினான்.

தனது சித்திரவதைக்குப் பின்னர் ஜோன்ஸ் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் சிறையிலடைக்கப்பட்டார். இந்த சமயத்தில் ஜோன்ஸ் தனது விசுவாசத்தில் “ஜான் ரிக்பி” (John Rigby) எனும் கத்தோலிக்கருக்கு ஆதரித்து உதவிகள் புரிந்தார். பின்னாளில் இவரும் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடுகளின் நாற்பது மறைசாட்சிகளுள் (Forty Martyrs of England and Wales) ஒருவர் ஆனார். 1598ம் ஆண்டு, ஜூலை மாதம், 3ம் தேதி, இங்கிலாந்து அரசியின் ஆட்சி காலத்தில், தடை செய்யப்பட்ட ஆன்மீக (கத்தோலிக்க) நடைமுறைகளை செய்த குற்றத்திற்காக ஜோன்ஸ் விசாரிக்கப்பட்டார். அவர் மிக உயர்ந்த தேசத்துரோக குற்றத்திற்காக தண்டிக்கப்பட்டார். அவருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.

துாக்குத்தண்டனை:
இந்த நேரத்தில், இதுபோன்று மோசமாக தண்டிக்கப்படும் கத்தோலிக்கர்களுக்காக பொதுமக்கள் பரிவும் இரக்கமும் காட்டினார்கள். ஆகவே, பொதுமக்களுக்கு அறிய வருவதற்கு முன்னரே, அதிகாலை நேரத்தில் இவரது தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்ட்டது. தூக்கிலிடும் பணியாளர் கயிறு கொண்டுவர மறந்து விட்டதால், தண்டனை நிறைவேற்றுவதில் ஒரு மணிநேரம் தாமதம் ஆனது. ஜோன்ஸ், இந்த நேரத்தையும் வீணாக்காது, மறைபோதகம் செய்வதிலும், மக்களுக்கு அவர்களுடைய கேள்விகளுக்கு பதிலளிப்பதிலும் நேரத்தை செலவிட்டார்.

“நெக்கிங்கர்” (Neckinger) நதியின் மேலுள்ள சிறிய ஆற்றுப்பாலம் அமைந்துள்ள “செயின்ட் தாமஸ் வாட்டரிங்” (St. Thomas' Watering) எனும் இவ்விடம், “வால்ட்டிங் தெரு” (Watling Street) என்று அழைக்கப்படுகின்றது. இங்கேதான் ஜோன்ஸ் தூக்கிலிடப்பட்டார்.

† Saint of the Day †
(July 12)

✠ St. John Jones ✠

Forty Martyrs of England and Wales:

Born: 1530? AD
Clynnog Fawr, Wales

Died: July 12, 1598
Southwark, England

Venerated in: Roman Catholicism

Beatified: 1929 AD
Pope Pius XI

Canonized: October 25, 1970
Pope Paul VI

Major shrine: Pontoise

Feast: July 12 (individual);
October 25, collectively as one of the Forty Martyrs of England and Wales

John Jones OFM, also known as John Buckley, John Griffith, Godfrey Maurice, or Griffith Jones was a Franciscan friar, Roman Catholic priest, and martyr. He was born at Clynnog Fawr, Caernarfonshire (Gwynedd), Wales, and was executed 12 July 1598 at Southwark, England. He is one of the Forty Martyrs of England and Wales.

Saint John (Godfrey) Jones 1530? - 1598: John Jones was born to a Catholic family in Clymag Faur in the county of Carnarvon in Wales around the year 1530. In his youth, Queen Mary Tudor accomplished the restoration of the Catholic Church after the brief reign of Edward VI had taken the Church of England into the Calvinist fold. Mary's accession had allowed the English friars who had fled into exile to Flanders and Scotland to return and in April 1555 the friary at Greenwich, in which Mary and Elizabeth had been baptized, was reopened. John joined the friary and took the name Godfrey Maurice, becoming known for his piety. At Mary's untimely death in 1558, however, her half-sister Elizabeth assumed the throne and it was not long before Catholics were once more persecuted in England. John Jones, although still a novice was forced to flee to France. The English Observant Franciscans fled to a friary in Pontoise where John was professed and trained. He has probably ordained a priest at Rheims, where there was another friary of the exiled English Province.

Towards 1590 John was sent to the friary of Ara Coeli in Rome, the General headquarters of the Order. From there he wished to return to England to take part in the mission to care for faithful Catholics, who risked their livelihoods and often their lives to sustain their missionary priests. The priests themselves were subject to the dreadful death of hanging, drawing, and quartering as traitors for the simple fact of exercising their priesthood. John begged an audience with the Pope and Clement VIII embraced him, gave him a solemn blessing, and told him: “Go because I believe you to be a true son of Saint Francis. Pray to God for me and for his holy Church."

In England John Jones exercised a heroic hidden ministry, animating the Catholic faith among recusants and prudently seeking to reconcile those who had submitted to Elizabeth's Church of England. The existence of a missionary priest in England was one of the frequent moves, constant vigilance, and continued flight from Elizabeth's vigilant secret services, supervised by William Cecil and Francis Walsingham.

Despite his care, John Jones was caught in late 1595 or early 1596 by Richard Topcliffe, who nurtured a cruel hatred for the Catholic faith and was sanctioned by the Queen to maintain a private torture chamber in his house for the Catholic priests he apprehended. John Jones was accused of being a spy and sent to the notorious Clink prison, from which we derive the expression “being in the clink”. There he languished for nigh on two years awaiting trial. In prison, Jones continued his ministry and converted many, including Saint John Rigby, who was himself martyred two years after John Jones (on 21st June 1600). On 3rd July 1598, John Jones was finally brought to trial for having exercised his ministry as a Catholic priest in England. He was sentenced to hanging, drawing, and quartering at Saint Thomas Watering, but was meanwhile imprisoned at Marshalsea prison. The Jesuit Henry Garnet recounts in a letter that on 12th July 1598 John was tied to a trellis and dragged to the place of his torment. [The executioner had forgotten to bring ropes, so there was a delay.] He was held there for an hour before execution during which time Topcliffe harangued the crowd with his supposed crimes. Garnet recounts that the crowd was touched more by John's prayers than by the calumnies of his torturer and executioner. His remains were hung up on the road between Newington and Lambeth.

With 39 other English martyrs, John Jones was beatified by Pius XI on 15th December 1929 and canonized by Paul VI on 25th October 1970. The Franciscans in England remember all their martyrs, Supremacy (Henry VIII), Recusant (Elizabeth I to Charles I), and Popish Plot (Charles II) on the 12th of July--St. John Jones is pictured above with St. John Wall, a Popish Plot martyr of 1679.

No comments:

Post a Comment