#புனித_அகஸ்தினா_பேத்ராந்தனி (1864-1894)
நவம்பர் 13
இவர் (#St_Agostina_Petrantoni) இத்தாலியைச் சார்ந்தவர். இவரது குடும்பம் ஒரு விவசாயக் குடும்பம்.
சிறுவயது முதலே இறைவன்மீது மிகுந்த பற்றுக்கொண்டு வாழ்ந்த இவர், வளர்ந்து பெரியவரானதும், உரோமையில் உள்ள ஹோலிஸ்பிரிட் மருத்துவமனையில் சேர்ந்து, செவிலியராகப் பணியாற்றி வந்தார்.
நோயாளர்கள்மீது மிகுந்த அக்கறையும் கரிசனையும் கொண்டிருந்த இவர், நோயாளர்களைக் கவனித்துக் கொள்வதற்காகவே ஏற்படுத்தப்பட்ட அன்பின் பணியாளர்கள் சபையில் 1887ஆம் ஆண்டு சேர்ந்து, அவர்கள் நடுவில் நல்ல விதமாய்ப் பணியாற்றி வந்தார்.
இவர் மருத்துவமனையில் காச நோயாளர்கள் பகுதியில் பணியாற்றிக் கொண்டிருக்கும்போது, ஒருநாள் காச நோயாளர் ஒருவர் இவரைத் தன் இச்சைக்கு பணிய வைக்க எவ்வளவோ முயற்சி செய்தார். அதற்கு இவர் மறுப்புத் தெரிவித்ததால், அந்த நோயாளர் இவரை அடித்துக் கொன்றுவிட்டார்.
இவ்வாறு இவர் தனது தூய்மையைக் காப்பாற்றுவதற்காக உயிர் துறந்த ஆண்டு 1894. இவருக்கு 1999 ஆம் ஆண்டு திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுலால் புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டது.
No comments:
Post a Comment