புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

13 November 2020

Saint Serapion of Alexandria November 14

#புனித_சேராபியன் (மூன்றாம் நூற்றாண்டு)


நவம்பர் 14


இவர் எகிப்து நாட்டிலுள்ள அலெக்சாந்திரியாவைச் சார்ந்தவர்.


கிறிஸ்துவின்மீது மிகுந்த பற்றுக்கொண்டு வாழ்ந்த இவர், கிறிஸ்தவ மறையைப் பின்பற்றினால் ஆபத்து வரும் என்று தெரிந்தும்கூட தன்னுடைய நம்பிக்கையில் மிக உறுதியாக இருந்தார்.


இவருடைய காலத்தில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான வேத கலாபனை நடைபெற்றது. அப்பொழுது ஒருவர், "இவர் கிறிஸ்தவர்" என்று காட்டிக்கொடுக்க, கலகக்காரர்கள் இவரை இவருடைய வீட்டின் மாடியிலிருந்து தூக்கி வீசிக் கொன்று போட்டார்கள்.


இவ்வாறு இவர் ஆண்டவர் இயேசுவுக்காகத் தன் இன்னுயிரைத் துறந்து, அவருக்குச் சான்று பகர்ந்தார்.


 Saint Serapion of Alexandria

Profile

A man very public about his faith, Serapion was abused and killed in anti-Christian riots during the persecutions of Septimius Severus. Martyr.


Died

thrown off the roof of his own home in 252 in Alexandria, Egypt

No comments:

Post a Comment