† இன்றைய புனிதர் †
(நவம்பர் 13)
✠ புனிதர் ஃபிரேன்செஸ் சேவியர் கேப்ரினி ✠
(St. Frances Xavier Cabrini)
அருட்பணியாளர், நிறுவனர்:
(Religious and Foundress)
பிறப்பு: ஜூலை 15, 1850
சான் ஆஞ்சலோ லோடிகியனோ, லோடி பிராந்தியம், லொம்பார்டி-வெனீஷியா அரசு, ஆஸ்திரியன் பேரரசு
(Sant'Angelo Lodigiano, Province of Lodi, Kingdom of Lombardy-Venetia, Austrian Empire)
இறப்பு: டிசம்பர் 22, 1917 (வயது 67)
சிகாகோ, இல்லினோயிஸ், ஐக்கிய அமெரிக்க நாடுகள்
(Chicago, Illinois, United States America)
ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
முக்திபேறு பட்டம்: நவம்பர் 13, 1938
திருத்தந்தை பதினோராம் பயஸ்
(Pope Pius XI)
புனிதர் பட்டம்: ஜூலை 7, 1946
திருத்தந்தை பன்னிரெண்டாம் பயஸ்
(Pope Pius XII)
முக்கிய திருத்தலங்கள்:
அன்னை கேப்ரினியின் உயர்நிலைப் பள்ளி சிற்றாலயம், நியூ யார்க் நகர்
(Chapel of Mother Cabrini High School, New York City)
பாதுகாவல்:
வெளிநாட்டிலிருந்து வந்து குடியேறியவர்கள், மருத்துவமனை நிர்வாகிகள், லிங்கன்
(Immigrants, Hospital Administrators, Lincoln)
நினைவுத் திருநாள்: நவம்பர் 13
“ஃபிரேன்செஸ் சேவியர் கேப்ரினி” (Frances Xavier Cabrini) என்றும், “அன்னை கேப்ரினி” (Mother Cabrini) என்றும் அழைக்கப்படும் இப்புனிதர், ஒரு இத்தாலிய-அமெரிக்க (Italian-American) அருட்சகோதரி ஆவார். கத்தோலிக்க சமய நிறுவனமான "இயேசுவின் திருஇருதயத்தின் அருட்பணி சகோதரிகள்" (Missionary Sisters of the Sacred Heart of Jesus) என்றொரு சபையை நிறுவியவர் இவரேயாவார். இச்சபையானது இத்தாலியிலிருந்து அமெரிக்காவிற்கு புலம்பெயர்ந்து வந்து குடியேறியவர்களுக்கு பெரும் ஆதரவாக இருந்தது. புலம்பெயர்ந்து வந்து, அமெரிக்க குடியுரிமை பெற்று, ரோமன் கத்தோலிக்க திருச்சபையால் புனிதராக அருட்பொழிவு செய்யப்பட்ட முதல் நபர் இவரேயாவார்.
அப்போதைய “ஆஸ்திரிய பேரரசின்” (Austrian Empire) பிராந்தியமான “லோடியில்” (Lodi) பிறந்த இவரது தந்தையாரின் பெயர் "அகஸ்டினோ கேப்ரினி" (Agostino Cabrini) ஆகும். "ஸ்டெல்லா ஒல்டினி" (Stella Oldini) இவரது தாயார் ஆவார். வசதிவாய்ப்புள்ள செர்ரி மர விவசாயிகளான (Cherry Tree Farmers) இந்த தம்பதியினருக்கு பிறந்த பதின்மூன்று குழந்தைகளில் கேப்ரினி கடைக்குட்டி ஆவார். துரதிருஷ்டவசமாக, பதின்மூன்று பேரில் ஒன்பது பேர் வளர் இளம் பருவத்திலேயே மரித்துப் போயினர். கேப்ரினியுடன் சேர்த்து நான்கு பேரே உயிர் தப்பி வாழ்ந்தனர். இரண்டு மாத குறைப் பிரசவத்தில் பிறந்த கேப்ரினி, மிகவும் சிறிய உருவம் கொண்டவராகவும் பலவீனராகவும் காணப்பட்டார். வாழ்நாள் முழுதும் நோய்த்தொற்றுள்ளவராகவே வாழ்ந்தார். தமது சிறு வயதில், ஒரு விரைவான கால்வாய் அருகே வசித்து வந்த தமது தாய்மாமனும், கத்தோலிக்க குருவுமான, “டோன் லுய்கி ஒல்டினி” (Don Luigi Oldini of Livagra) என்பவரைக் காண செல்லும்போதெல்லாம், காகிதக் கப்பல்களைச் செய்து கால்வாயில் விட்டு விளையாடுவாராம். அங்குள்ள மலர்களை மறைப் பணியாளர்களென அழைக்கும் இச்சிறுமி, அவர்களை தாம் செய்யும் காகிதக் கப்பல்களில் சீனா மற்றும் இந்திய நாடுகளுக்கு செல்லுமாறு பணிப்பாராம்.
தமது பதின்மூன்று வயதில், “திருஇருதய மகளிர்” (Daughters of the Sacred Heart) நடத்திய பள்ளியில் கல்வி கற்ற இவர், ஐந்து வருடங்களின் பின்னர், கற்பிக்கும் சான்றுடன் பட்டம் பெற்றார். கி.பி. 1870ம் ஆண்டு, தமது இருபது வயதில், தமது பெற்றோர் மரித்ததும் “அர்லுனோ” (Arluno) எனுமிடத்திலுள்ள “திருஇருதய மகளிர்” (Daughters of the Sacred Heart) சபையில் இணைய விண்ணப்பித்தார். இச்சபையின் அருட்சகோதரியர், இவரது முன்னாள் ஆசிரியைகள் ஆவர். அவர்கள், இவரது பலவீனம் மற்றும் நோய்களை காரணம் காட்டின் நிராகரித்தனர்.
இவர், “கொடோக்னோ” (Codogno) எனுமிடத்திலுள்ள பிராவிடன்ஸ் அனாதை இல்லத்தின் தலைமை ஆசிரியை ஆனார். அங்கே கற்பிக்கும் பணியாற்றிய இவர், அங்கேயே ஆன்மீக வாழ்வு வாழ்வதற்காக ஒரு சிறு சமூகத்தை உருவாக்கினார். 1877ம் ஆண்டு, தமது சமய பிரமாணங்களை ஏற்ற கேப்ரினி, இயேசு சபை புனிதரும் (Jesuit saint) மறை பரப்புப் பணிகளின் பாதுகாவலருமான "ஃபிரான்சிஸ் சேவியரை" (Francis Xavier) கௌரவிக்கும் விதமாக தம் பெயருடன் சேவியர் என்ற பெயரை இணைத்துக்கொண்டார்.
கேப்ரினி, தனது முப்பதாவது வயதிலேயே பல பொறுப்புகளை ஏற்றிருந்தார். நோயாளிகளை கவனித்து வந்துள்ளார். பெற்றோரை இழந்த பிள்ளைகளை பராமரித்து வளர்த்துள்ளார். வழிதவறி அலைந்த இளைஞர்களுக்கு நல்வழி காட்டியுள்ளார். விதவைப் பெண்களை ஒன்று சேர்த்து வேலை வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்து அவர்களின் வாழ்விற்கு வழிகாட்டியுள்ளார்.
இவ்வாறு பல பணிகளை செய்த இவர் நீண்ட நாள் தன் மனதில் இருந்த சபை ஒன்றை நிறுவும் கனவையும் நிறைவேற்ற முடிவு செய்தார். கி.பி. 1880ம் ஆண்டு, தம்முடன் ஆறு அருட்சகோதரியரையும் இணைத்துக்கொண்டு, "இயேசுவின் திருஇருதயத்தின் அருட்பணி சகோதரிகள்" (Missionary Sisters of the Sacred Heart of Jesus) என்றொரு சபையை நிறுவினார். இவரே அச்சபையின் முதல் சபைத் தலைவியாக பொறுப்பேற்று வழிநடத்தினார்.
கி.பி. 1877ம் ஆண்டு, செப்டம்பர் மாதம், சீன நாட்டில் அருட்பணி சகோதரிகளின் சபை ஒன்றினை தொடங்கிட திருத்தந்தை “ஒன்பதாம் பயசின்” (Pope Pius IX) அனுமதி வேண்டி சென்றார். ஆனால், திருத்தந்தையோ சீன நாட்டுக்கு பதிலாக அவரை அமெரிக்கா செல்ல அறிவுறுத்தினார். இத்தாலியிலிருந்து புலம்பெயர்ந்து அமெரிக்க நாடுகளுக்கு செல்லும் மக்களின் நல்வாழ்வுக்காகவும் அவர்களுக்கு வழிகாட்டவும் அங்கே இவரது சேவைகள் தேவைப்படும் என்று இயம்பிய திருத்தந்தை அவர்கள், கிழக்கேயல்ல - மாறாக மேற்கே செல் என்று அறிவுரை கூறினார்.
திருத்தந்தையின் அறிவுரைப்படி தமது சக அருட்சகோதரிகள் ஆறு பேருடன் அமெரிக்கா கிளம்பிய கேப்ரினி, கி.பி. 1889ம் ஆண்டு, மார்ச் 31ம் நாள், நியூயார்க் நகர் சென்றடைந்தார். அவர் எடுத்து வைத்த ஒவ்வொரு படியிலும் ஏமாற்றங்களையும் சிரமங்களையுமே எதிர்கொண்ட கேப்ரினி மனம் தளர்ந்து போகவில்லை. ஆரம்பத்தில் அவர்களுக்கு அணுசரணையாய் இல்லாத “பேராயர் மைக்கேல் கொர்ரிகன்” (Archbishop Michael Corrigan), அவர்கள் தங்குவதற்கு "கருணையின் சகோதரிகள்" (Sisters of Charity) பள்ளியை ஏற்பாடு செய்து தந்தார். கேப்ரினி, நியூ யார்க் நகரில் 'வெஸ்ட் பார்க்' (West Park, New York) என்ற இடத்தில், ஒரு அனாதைகள் இல்லம் தொடங்கிட பேராயர் அவர்களிடம் அனுமதி பெற்றார். இன்று, அதே அனாதைகள் இல்லமானது "புனிதர் கேப்ரினி இல்லம்" (Saint Cabrini Home) என்ற பெயரில் இயங்குகின்றது.
இத்தாலியிலிருந்து புலம்பெயர்ந்து அமெரிக்காவில் குடியேறிய மற்றும் அவசியப்படும் மக்களுக்கு மத இலக்கண மற்றும் கல்வி வகுப்புகள் ஏற்பாடு செய்து தந்தார். மிகப்பெரிய முரண்பாடுகளுக்கும் தடைகளுக்கும் மத்தியிலும் பள்ளிகள் மற்றும் அநாதை இல்லங்களை நிறுவி நடத்தினார். கேப்ரினி ஜெப சிந்தையோடு இருந்தது போலவே சமயோசிதமாகவும் இருந்தார். தாராள மனப்பான்மை கொண்ட மக்களை இனம்கண்டு வைத்திருந்தார். அவர்களால் அவருக்கு அவசியப்படும்போது பணம், நேரம், உழைப்பு, மனித சக்தி, ஆதரவு போன்ற அனைத்து உதவிகளும் தேடி வந்தன. நியூ யார்க் நகரில் "கொலம்பஸ் மருத்துவமனை" மற்றும் "இத்தாலியன் மருத்துவமனை" (Columbus Hospital and Italian Hospital) ஆகிய இரண்டு மருத்துவமனைகளை நிறுவினார். 1980களில் அவையிரண்டு மருத்துவமனைகளும் "காப்ரினி மருத்துவ மையம்" (Cabrini Medical Center) என்ற பெயரில் ஒன்றிணைக்கப்பட்டன. ஆயினும், 2008ம் ஆண்டு, இம்மருத்துவமனை மூடப்பட்டது.
கேப்ரினி மற்றும் அவரது சக அருட்சகோதரிகளால் “சிக்காகோ” (Chicago) நகரின் இதயப்பகுதியில் "கொலம்பஸ் விரிவாக்க மருத்துவமனை" (Columbus Extension Hospital) என்ற பெயரில் ஒரு மருத்துவமனையை நிறுவினர். பின்னர் இது "புனிதர் கேப்ரினி மருத்துவமனையாக" (Saint Cabrini Hospital) பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் இவ்விரண்டு மருத்துவமனைகளும் மூடப்பட்டன.
புனிதர் கேப்ரினி அமெரிக்காவின் “நியூ யார்க்” (New York), “சிக்காகோ” (Chicago), “டேஸ் ப்லேய்ன்ஸ்” (Des Plaines), “இல்லினாய்ஸ்” (Illinois), “சியாட்டல்” (Seattle), “நியூ ஒர்லியான்ஸ்” (New Orleans), “டென்வர்” (Denver), “கோல்டன்” (Golden), “கொலராடோ” (Colorado), “லாஸ் ஏஞ்சலிஸ்” (Los Angeles), “ஃபிலடெல்ஃபியா” (Philadelphia) ஆகிய நகரங்களிலும் தென் அமெரிக்கா மற்றும் ஐரோப்பா (South America and Europe) போன்ற நாடுகளிலுமாக மொத்தம் 67 நிறுவனங்களை நிறுவினார்.
சீன தேசத்தில் ஒரு மதப் போதக சபை (Missionary) தொடங்க வேண்டுமென்ற புனிதர் கேப்ரினியின் நெடுநாள் கனவு, அவரது மரணத்தின் நீண்ட காலத்தின் பின்னர் அவரது மிஷனரி அருட்சகோதரிகளால் நிறைவேறியது. மிக அதிக அளவிலான சமூக மற்றும் சமய எழுச்சியின் பின்னர், ஒரு சைபீரியன் (Siberian) அருட்சகோதரியை விட்டுவிட்டு அவர்கள் சீன தேசம் புறப்பட்டுச் சென்றனர்.
கி.பி. 1909ம் ஆண்டில் கேப்ரினி ஒரு அமெரிக்கா குடிமகளாக குடியுரிமை பெற்றார்.
67 வயதான கேப்ரினி, உள்ளூர் குழந்தைகளுக்கு கிறிஸ்துமஸ் இனிப்புகள் தயார் செய்யும் பணியிலிருந்தபோது வயிற்றுக்கடுப்பு மற்றும் சீதபேதி போன்ற பிரச்சினைகள் காரணமாக, கி.பி. 1917ம் ஆண்டு, டிசம்பர் மாதம், 22ம் நாளன்று, சிக்காகோவிலுள்ள (Chicago) கொலம்பஸ் மருத்துவமனையில் மரணமடைந்தார். அவரது உடல், நியூ யார்க் நகரில் அவரால் நிறுவப்பட்ட அநாதை இல்லமான "புனிதர் கேப்ரினி இல்லத்தில்" (Saint Cabrini Home) அடக்கம் செய்யப்பட்டது.
† Saint of the Day †
(November 13)
✠ St. Frances Xavier Cabrini ✠
Religious and Foundress:
Born: July 15, 1850
Sant'Angelo Lodigiano, Province of Lodi, Kingdom of Lombardy-Venetia, Austrian Empire
Died: December 22, 1917 (Aged 67)
Chicago, Illinois, US
Venerated in: Roman Catholic Church
Beatified: November 13, 1938
Pope Pius XI
Canonized: July 7, 1946
Pope Pius XII
Major shrine:
St. Frances Xavier Cabrini Shrine, New York City
Feast: November 13
Patronage: Immigrants, Hospital Administrators, Lincoln
St. Frances Xavier Cabrini also called Mother Cabrini, was an Italian-American religious sister, who founded the Missionary Sisters of the Sacred Heart of Jesus, a Catholic religious institute that was a major support to the Italian immigrants to the United States. She was the first naturalized citizen of the United States to be canonized by the Roman Catholic Church, on July 7, 1946.
Biographical Selection:
Maria Francesca Cabrini was born on July 15, 1850, the 13th child of pious peasants of Lombardy. She received her vocation on her Confirmation, as did St. Rose of Lima and other saints. She described the moment of her anointing: “I felt something beyond explanation. From that moment I was no longer of the earth. My heart was filled with the purest happiness. I knew that the Holy Ghost had come to me.”
At age 18 she was certified as a teacher under the Daughters of the Sacred Heart. She tried to enter several religious congregations, but her poor health stood in her way. Her most ardent desire was to do missionary work.
In 1871 her parish priest asked her to teach in the public school of a nearby village. Three years later diocesan authorities asked Frances to take over the direction of a poorly managed girls' orphanage in Codogno and to organize it with the structure and spirit of a religious institute. Soon she had a group of five helpers who, with her, pronounced religious vows in 1877. It was at that time Frances added Xavier to her name to honour the great missionary Francis Xavier.
The Bishop of Losi, however, opposed the house becoming an official religious community and commanded Frances, under threat of ex-communication, to dissolve her small community. During this period of trial, she offered her sufferings with the aim of making reparation to Our Lord in His Agony of the Garden for both the sleep of His disciples and also the infidelities of her superiors until the end of the world.
When the first house was dissolved, the Bishop told her: “I know that you want to be a missionary, but I don’t see any religious congregation suited to you. Found one.” The saint reflected a moment, and responded, “I will found a religious congregation that fits me.” The Institute of Missionaries of the Sacred Heart of Jesus was founded as a diocesan congregation in 1881, with a simple Rule written by Mother Cabrini.
She set out for Rome, with aims of receiving pontifical approval for a universal missionary Institute with a central house in Rome. On March 12, 1888, Leo XIII granted an audience to the young foundress of the Missionaries of the Sacred Heart, approved her institute, and pointed to North America as her field of activity. There she could assist millions of Italian immigrants, many of whom - far from their homeland and religion – had drifted from the practice of their faith, lost in the cement desert of the great cities.
Thirty times she crossed the ocean, recruiting thousands of sisters for the 67 hospitals, schools, and orphanages she established in the New World. “Let us work, let us work,” she used to say. “We will have an eternity to rest. Do what you can with an upright heart, and the Lord will do the rest.” The motto of St. Cabrini was “To love or to die.”
On December 22, 1917, she died of malaria in her own Columbus Hospital in Chicago.
Comments:
This selection suggests many ideas. The most important regards the sadness of Our Lord in the Garden of Olives and Mother Cabrini’s desire to make reparation for this until the end of the world.
In human affairs, a man can have a large debt with no means to pay it. If he has a wealthy friend, however, this friend can pay the debt for him. Doing this, he frees him from the penalty he would otherwise have had to pay for his insolvency. This - which is very easy to understand in earthly relations – has a much higher significance when applied to supernatural relations, our relations with God.
We have debts toward God Our Lord; we committed sins that removed us from the grace of God. For this reason, we need someone to pay that debt for us because we cannot pay it ourselves. How could a sinner pay, since he is in the state of sin? He is not pleasing to God. Nothing he does can be accepted by God. Therefore, it is necessary for another person to pay for the guilty one. An innocent person must take on himself a suffering correspondent to the illicit pleasure the sinner enjoyed.
For example, imagine that a lazy man misses a Sunday Mass because he wants to enjoy his rest. Someone has to pay for that illicit pleasure. An innocent person must make restitution for that sin with a proportionate amount of suffering. This basically explains reparation.
At times, God punishes the actual sinner so that the reparation is made by means of his chastisement. God allows evil things to happen to the sinner so he can make restitution for that illicit pleasure he took. At other times God accepts the offering of another person, an innocent person who suffers for the sinner. Indeed, sometimes the sin was so great that a single person cannot pay for it. Yet other times, God awaits the reparation to let an innocent person show his love for Him.
For these various reasons, God calls souls to expiate sins, to make reparation for them.
What does reparation mean? When a piece of cloth is torn, to repair it means to sew it back together. The seamstress makes a new seam to repair the torn fibres of the cloth. Analogously, to make reparation for the sins of another is to restore that person to the position he had before God. This is achieved by means of suffering, which attracts the mercy of God who again turns His eyes toward that person. The sinner receives new graces, converts and can fulfil the vocation he had received before he sinned.
Our Lord Jesus Christ offered His sufferings on the Cross as expiation for our sins. It was the only complete, total and true reparation. But He desires that men also suffer for one another to imitate Him and to somehow complete His infinitely precious Redemption. He knocks on the door of the soul and asks: “My child, won’t you accept this sacrifice to pay for your sins? Will you accept this other suffering for the Catholic Church? Will you take on this burden for the good of that soul? Give the alms of this sacrifice, I beg you.”
If we want to convert persons, if we want to correct our defects, we must suffer for them. This is reparation. Our Lady - who had seven swords of sorrow buried in her Heart - was the model of one who made reparation for us all.
This need for reparation was what moved St. Frances Cabrini. She chose to make expiation for the guilt of the Apostles in the Garden of Olives. We know that the Apostles, the first Bishops, slept at the moment when Our Lord was perspiring blood. So, she made reparation for that shameful behaviour. She also saw members of the Hierarchy of her time doing the wrong things and omitting other good things that should have been done. For the laziness, infidelity, and egotism of the leaders of the Church of her time, she made reparation.
This selection recounts the enormous effort she made in the United States, the thousands of souls she recruited through the devotion of the Sacred Heart of Jesus, and how they persevered in the faith. All this Mother Cabrini offered with that same intention of reparation she had made in the beginning.
Who knows whether her expiatory sacrifices contributed to St. Pius X becoming Pope? That great Pope inflicted a huge defeat on Modernism, and to this date, Progressivism, the heir of Modernism, has not been able to completely recover from it.
Mother Cabrini’s primary apostolate was to preserve the Italian immigrants from American influence. The Italian immigrants to North America were in a different situation from those who came to South America - principally to Brazil and Argentina, where most of them arrived. In Catholic countries, they encountered a Latin mentality. The integrated and fit into this mentality without any problem.
Those millions of Italians who disembarked in New York, however, encountered a Protestant and already highly industrialized country. They faced a very different productive mentality where everything was made at high speed to increase the profit margin. It was the opposite of the Latin spirit they were accustomed to in Italy. It was also completely different from the contemplative model of a soul turned toward reparation. Mother Cabrini went there to keep them from being assimilated into that mercantilist, revolutionary spirit. What an extraordinary example for us.
Let us ask St. Frances Cabrini, to give us her spirit of reparation so that the many miseries inside the Church can be resolved. Let us also ask Our Lady to take our miserable sacrifices and purify, elevate and sanctify them, and then present them before God Our Lord.
No comments:
Post a Comment