புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

15 June 2020

புனித ஆலிஸ் (1220-1250) June 15

ஜூன் 15 

புனித ஆலிஸ் (1220-1250)
இவர் பெல்ஜியத்தில் உள்ள ஷேர்பெக் என்ற இடத்தில் பிறந்தார்.

தன்னுடைய ஏழாவது வயதிலேயே சிஸ்டர்சியன் துறவிகள் மடத்தில் சேர்ந்த இவர், அங்கேயே தன்னுடைய கல்வியைக் கற்கத் தொடங்கினார். கல்வியில் சிறந்து விளங்கிய இவர், தாழ்ச்சியோடும் இருந்தார.

இவருக்கு 20 ஆவது வயது நடக்கும்பொழுது தொழுநோயால் பாதிக்கப்பட்டார்‌. அதனால் இவர் தனிமைப்படுத்தப்பட்டார். தொழுநோயால் இவர் துன்பங்களை அனுபவித்துக் கொண்டிருந்த அதே வேளையில், கண்பார்வையையும் இழந்தார். இதனால் இவர் அடைந்த துயருக்கு அளவே இல்லை.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் இவர் நற்கருணை ஆண்டவர்மீது மிகுந்த பற்றுக் கொள்ளத் தொடங்கினார். அந்தப் பற்று இவருக்கு ஆறுதலையும் அரவணைப்பையும் நம்பிக்கையையும் தந்தது. சில நேரங்களில் நற்கருணை ஆண்டவர் இவருக்குக் காட்சி தந்து இவரைத் திடப்படுத்தினார்.

நாள்கள் செல்ல செல்ல இவருடைய உடலில் வேதனை மிகுதியானது. இதனால் இவர் தன்னுடைய முப்பதாவது வயதில் உடல்நலம் குன்றி இறையடி சேர்ந்தார்.

இவருக்கு 1907 ஆம் ஆண்டு திருத்தந்தை பத்தாம் பயஸால் புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டது. இவர் பார்வையற்றவர்கள், முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோருக்குப் பாதுகாவலராக இருக்கிறார்

No comments:

Post a Comment