புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

15 June 2020

புனிதர் முதலாம் மெத்தோடியஸ் June 14

† இன்றைய புனிதர் †
( ஜூன் 14 )

✠ புனிதர் முதலாம் மெத்தோடியஸ் ✠
(St. Methodios I of Constantinople)
பிறப்பு: கி.பி. 788
சிராக்கஸ்
(Syracuse)

இறப்பு: ஜூன் 14, 847
கான்ஸ்டன்டினோபிள்
(Constantinople)

நினைவுத் திருநாள்: ஜூன் 14

புனிதர் முதலாம் மெத்தோடியஸ், கி.பி. 843ம் ஆண்டு, மார்ச் மாதம், 4ம் நாள் முதல், கி.பி. 847ம் ஆண்டு, ஜூன் மாதம், 14ம் நாள் வரை “கான்ஸ்டன்டினோபிள் நகரின் கிறிஸ்தவ தலைவராக” (Ecumenical Patriarch of Constantinople) பொறுப்பேற்றிருந்தவர் ஆவார்.

முதலாம் மெத்தோடியஸ் சிசிலி (Sicily) நாட்டின் சிராக்கஸ் ((Syracuse)) நகரில் செல்வந்தர்களான பெற்றோருக்கு பிறந்தார். இளம் வயதிலேயே கல்வி கற்பதற்காக கான்ஸ்டன்டினோபிள் ஆனுப்பப்பட்டார். நன்கு கற்று அரசவையிலே நல்லதொரு பணி நியமனம் பெறுவார் என இவரது பெற்றோர் கனவு கண்டனர். ஆனால், அவர்களது கனவை பொய்யாக்கிய இவர், “பித்தினியா” (Bithynia) நகரிலுள்ள துறவு மடத்தில் சேர்ந்தார். இறுதியில் மடாதிபதியுமானார்.

கி.பி. 813ம் ஆண்டு முதல் கி.பி. 820ம் ஆண்டு வரையான காலகட்டத்தில், “ஆர்மேனிய பேரரசன் ஐந்தாம் லியோ” (Emperor Leo V the Armenian) என்பவரது காலத்தில் சமய திருச்சொரூபங்கள் அல்லது படங்களை வணங்கும் அல்லது ஆராதிக்கும் மக்களை (Iconoclast persecution) துன்புறுத்தி கொல்லும்படி இரண்டாம் முறையாக உத்தரவிட்டிருந்தான்.

கி.பி. 815ம் ஆண்டு, பதவியிறக்கப்பட்ட தூதராக மெத்தோடியஸ் ரோம் பயணமானார். கி.பி. 821ம் ஆண்டு, நாடு திரும்பிய இவரை, சிலை வழிபாட்டின் எதிர்ப்பாளரான பேரரசன் இரண்டாம் மைக்கேலால் (Emperor Michael II) சிலை அல்லது சொரூபங்களை ஆராதிப்பவராக அடையாளம் காணப்பட்டு, குற்றம் சாட்டப்பட்டு, நாடு கடத்தப்பட்டார். கி.பி. 829ம் ஆண்டில் விடுதலை செய்யப்பட்ட இவர், முரண்பாடாக, சிலை வழிபாட்டை இன்னும் தீவிரமாக எதிர்க்கும் பேரரசன் “தியோபிலசி’ன்” (Emperor Theophilos) அரசவையில் முக்கிய பதவி நியமனம் பெற்றார்.

கி.பி. 843ம் ஆண்டில் பேரரசன் மரணமடைந்ததன் பின்னர், செல்வாக்குள்ள மந்திரி “தியோக்டிஸ்டோஸ்” (Theoktistos) ராஜ மாதா “தியோடரா’விடம்” (Theodara), அவரது இரண்டு வயது மகன் “மூன்றாம் மைக்கேலி’ன்” (Michael III) அரச பிரதிநிதியாக செயலாற்றுமாறு சம்மதிக்க வைத்தார். தேவாலயங்களிலிலிருந்து நீக்கப்பட்ட சிலைகளும் சொரூபங்களும் படங்களும் மீண்டும் வைக்கப்பட அனுமதி வழங்கினார். இப்படி செய்வதினால் இறந்துபோன பேரரசனான அவரது கணவருக்கு வந்த அவப்பெயர் நீங்கும் என்றார். கிறிஸ்தவ தலைவராக (Patriarch) பதவியிலிருந்த “ஏழாம் ஜான்” (John VII Grammatikos) என்பவர் பதவியிலிருந்து இறக்கப்பட்டார். மெத்தோடியஸ் மீண்டும் அப்பதவியில் அமர்த்தப்பட்டார். இதன்மூலம் சிலை வழிபாடு அல்லது சொரூப ஆராதனை சர்ச்சைகள் ஒரு முடிவுக்கு வந்தன. கி.பி. 843ம் ஆண்டு, மார்ச் மாதம், 11ம் நாள் முதல், தேவாலயங்களில் சொரூபங்கள் வைக்கப்பட அனுமதிக்கப்பட்டன.

No comments:

Post a Comment