† இன்றைய புனிதர் †
(ஜூன் 14)
✠ பாடலாசிரியர் புனிதர் ஜோசஃப் ✠
(St. Joseph the Hymnographer)
துறவி/ பாடலாசிரியர்:
(Monk/ Hymnographer)
பிறப்பு: கி.பி. 816
சிசிலி
(Sicily)
இறப்பு: ஏப்ரல் 3, 886
தெஸ்ஸலோனிக்கா
(Thessalonica)
ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
கிழக்கு மரபுவழி திருச்சபை
(Eastern Orthodox Church)
கிழக்கு கத்தோலிக்க திருச்சபைகள்
(Eastern Catholic Churches)
நினைவுத் திருநாள்: ஜூன் 14
பாடலாசிரியரான புனிதர் ஜோசஃப், ஒன்பதாம் நூற்றாண்டின் துறவியும், ஆன்மீக கவிஞரும், பாடலாசிரியருமாவார். “இனிமையான குரல் கொண்ட திருச்சபையின் பாடும் பறவை” (The Sweet-Voiced Nightingale of the Church) என்று இவரை அறிந்தோர் கூறுவர்.
கி.பி. ஏறக்குறைய 816ம் ஆண்டு, சிசிலியிலுள்ள (Sicily) பக்தியுள்ள பெற்றோரான “புலோடினஸ்” மற்றும் “அகதா’வுக்கு” (Plotinus and Agatha) மகனாகப் பிறந்தார். சிசிலியின் மீதான அரேபிய படையெடுப்பின் காரணமாக, அவருடைய குடும்பம் சிசிலியை விட்டு புலம்பெயர முடிவெடுத்தனர்.
கி.பி. சுமார் 840ம் ஆண்டில், “தெஸ்ஸலோனிக்கா’வின்” ஆயர் (Bishop of Thessalonica) இவரை ஒரு “குரு-துறவியாக” (Hieromonk) அருட்பொழிவு செய்வித்தார். ஒருமுறை “தெஸ்ஸலோனிக்கா” வந்த புனிதர் கிரகோரி (St. Gregory of Dekapolis), இவரது குணநலன்களால் ஈர்க்கப்பட்டு, இவரை “கான்ஸ்டன்டினோபில்” (Constantinople) நகரிலுள்ள தமது “ஸ்டௌடியோஸ்” எனும் (Stoudios Monastery) துறவியர் மடத்தில் சேர அழைத்தார். கி.பி. 841ம் ஆண்டு, திருத்தந்தை மூன்றாம் லியோ (Pope Leo II) அவர்களின் அழைப்பைத் தொடர்ந்து ஜோசஃப், கிரகோரி அவர்களால் ரோம் அனுப்பப்பட்டார். ஆனால், அரேபிய கடல் கொள்ளைக்காரர்களால் வழியிலேயே மறித்து சிறை பிடிக்கப்பட்ட ஜோசஃப், “கிரேட்” (Crete) எனும் கிரேக்க தீவில் அடிமையாக விற்கப்பட்டார்.
இவர் கிரேட் தீவில் அடிமைத்தளையில் இருக்கையில், புனிதர் நிக்கோலஸ் (St. Nicholas) இவருக்கு காட்சியளித்தார். அவர், ஜோசஃபை பார்த்து, கடவுளின் பெயரில் பாடல் பாடு என்றார். ஜோசஃப் பாடியதும், “எழுந்து என்னைப் பின்தொடர்” என்று கூறிவிட்டு சென்றார். இதன்பின்னர், ஜோசஃபுக்கு விரைவில் விடுதலை கிடைத்தது. அவர் “கான்ஸ்டன்டினோபிள்” திரும்ப ஒரு வருட காலம் ஆனது.
கி.பி. 855ம் ஆண்டு, ஒரு துறவு மடத்தினை நிறுவி, மரித்துப்போன தமது வழிகாட்டியான புனிதர் கிரகோரியின் (Gregory of Dekapolis) பெயரில் அர்ப்பணித்தார். இறைவன் புகழ்பாடும் பண்பாடித் திரிந்த ஜோசஃப், தமது எழுபது வயதில் மரித்தார்.
No comments:
Post a Comment