புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

15 June 2020

புனிதர் ஜெர்மைன் கஸின் ✠(St. Germaine Cousin) June 15

† இன்றைய புனிதர் †
(ஜூன் 15)

✠ புனிதர் ஜெர்மைன் கஸின் ✠
(St. Germaine Cousin)

ஃபிரெஞ்ச் புனிதர்:
(French Saint)
பிறப்பு: கி.பி. 1579
பைப்ரேக், டௌலோஸ், ஃபிரான்ஸ்
(Pibrac, Toulouse, France)

இறப்பு: கி.பி. 1601
பைப்ரேக், டௌலோஸ், ஃபிரான்ஸ்
(Pibrac, Toulouse, France)

ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)

முக்திபேறு பட்டம்: மே 7, 1864
திருத்தந்தை ஒன்பதாம் பயஸ்
(Pope Pius IX)

புனிதர் பட்டம்: ஜூன் 29, 1867
திருத்தந்தை ஒன்பதாம் பயஸ்
(Pope Pius IX)

முக்கிய திருத்தலம்:
பைப்ரேக்
(Pibrac)

நினைவுத் திருநாள்: ஜூன் 15

பாதுகாவல்:
கைவிடப்பட்ட மக்கள் (Abandoned People), துஷ்பிரயோகம் செய்யப்பட்டவர்கள் (Abuse Victims), வறுமைக்கு எதிரானக (Against Poverty), ஊனமுற்றோர் (Disabled People), கிராமப்புற பெண்கள், (Girls from Rural Areas), நோய் (Illness), வறிய நிலை (Impoverishment), பெற்றோரை இழந்தோர் (Loss of Parents), உடல் பயிற்சி சிகிச்சையாளர்கள் (Physical Therapists)

புனிதர் ஜெர்மைன் கஸின், ஒரு ஃபிரெஞ்ச் புனிதர் ஆவார். ஃபிரான்ஸ் நாட்டின் “டௌலோஸ்” (Toulouse) நகரிலிருந்து 15 கிலோமீட்டர் தூரத்திலுள்ள “பைப்ரேக்” (Pibrac) எனும் கிராமத்தில் மிகவும் தாழ்ச்சியுள்ள பெற்றோருக்குப் பிறந்தவர்.

கத்தோலிக்க கலைக்களஞ்சியம் (Catholic Encyclopedia) இவரைப்பற்றி பின்வருமாறு எழுதுகிறது:

“தமது பிறப்பு முதலே எண்ணற்ற துன்பங்களை அனுபவித்தவராக இவர் குறிப்பிடப்படுகிறார். இவர் பிறக்கும்போதே ஒரு கை சிதைந்த நிலையிலும், “ஸ்க்ரோஃபுலா” (Scrofula) எனப்படும் காசநோய் சம்பந்தமான ஒரு நோயுடனும் பிறந்தார். இவர் கைக்குழந்தையாக இருக்கும்போதே தமது தாயை இழந்தார். இவரது தந்தை விரைவிலேயே மறுமணம் செய்துகொண்டார். புதிதாக வந்த மாற்றான்தாய் இவரை கொடுமைப்படுத்தினார். ஜெர்மைனுடைய நோயிலிருந்து பிற குழந்தைகளை பாதுகாப்பதாக பாசாங்கு செய்த மாற்றான்தாய், ஜெர்மைனை வீட்டிலிருந்து விலக்கி வைக்க தந்தையின் சம்மதம் பெற்றார். ஆகவே, ஜெர்மைன் குழந்தை பருவத்திலிருந்தே கால்நடை மேய்க்கும் பணியைச் செய்தார். இரவில் களைத்துப்போய் வீடு திரும்பினால் அவரது படுக்கை குப்பைகளாக இருக்கும் அல்லது ஈரமாக இருக்கும். இதுபோன்ற நடைமுறைகளால் குழந்தைப் பருவத்திலிருந்தே தாழ்ச்சியையும், பொறுமையையும் கற்றுக்கொண்டார். கடவுளின் பிரசன்னத்தின் அதிசய உணர்வுகளும் ஆன்மீக ஈடுபாடுகளும் பிறப்பு முதலே அவருக்கு இறை பரிசாக அளிக்கப்பட்டிருந்தன. இவையனைத்துமே இப்புனிதரது தனிமையான வாழ்க்கையின் ஒளி மற்றும் ஆசீர்வாதங்களின் ஆதாரமாக விளங்கின. வறுமை, நலிந்த மற்றும் தளர்ந்த உடல் நிலை, காலத்தின் கடுமையான பருவ மாற்றங்கள், பாசமும் அனுசரணையும் இல்லாத சொந்த குடும்பத்தினர், ஆகியவற்றுடன் தாமாகவே தேடி பெற்றுக்கொண்ட துன்பங்களும் தாழ்ச்சியுடனும் இன்னும் அதிக வேதனைகளைத் தந்தன. தினசரி உணவாக சாதாரண ரொட்டி மற்றும் தண்ணீர் ஆகியவற்றையே வழக்கமான உணவாக ஏற்றுக்கொண்டார். ஆசீர்வதிக்கப்பட்ட தூய நற்கருணையிலுள்ள இயேசு மீதும் அவரது கன்னித்தாய் மீதும் அவர் கொண்டிருந்த மாறாத அன்பு இவரது புனிதத் தன்மையை இன்னும் அதிகரித்தது. திருப்பலியில் தினமும் ஆர்வமுடன் கலந்துகொள்வார். ஆலய மணியோசை கேட்டதுமே தமது மந்தையை அப்படியே மேய்ச்சல் நிலத்தில் விட்டுவிட்டு திருப்பலியில் கலந்துகொள்ள ஓடுவார். கிட்டத்தட்ட ஓநாய் போன்ற காட்டு மிருகங்கள் உலவும் வனாந்தரங்களின் அருகில் மேய்ச்சல் நிலம் இருந்தும் என்றுமே அவரது மந்தைக்கு யாதொரு ஆபத்தும் ஏற்பட்டதில்லை.”

பாவச் செயல்களை சரி செய்யும் முயற்சியாக அவர் முன்னெடுத்த தவ முயற்சிகளும் அடிக்கடி நற்கருணை ஆராதனைகளில் அவர் பங்கெடுத்தமையும் குறிக்கத்தக்கது. மரியன்னையின் மீதுள்ள அவரது பக்தியும் அதிகரித்துக்கொண்டு போனதும் குறிப்பிடத்தக்கது. ஜெபமாலை மட்டுமே அவரது ஒரே புத்தகமாயிருந்தது. இயேசு மீதும் அவரது அதி தூய கன்னித் தாயின் மீதும் அவர் கொண்ட பக்தியும், அன்பும் அளவிட இயலாததும், குறிப்பிடத்தக்கதுமாகும். திருப்பலிக்கான முதல் ஆலய மணியோசை கேட்டதுமே எங்கிருந்தாலும் முழங்கால்படியிட்டு சிலுவை அடையாளமிடுவது அவரது குறிப்பிடத்தக்க கிறிஸ்தவ உயர் பண்பாகும்.

ஆழமற்ற நதியோரங்களிலும், அடை மழையின் பின்னும் அல்லது உறைபனி உருகும் காலங்களிலுமாக அல்லது சீரற்ற அனைத்து காலங்களிலும் அவரது பக்திமயமான தவ வாழ்க்கை சீராக இருந்தது. எழைகளின்பால் அவர் கொண்ட அன்பும் அக்கறையும் இன்னும் அதிகரித்தது. தமக்கு கிடைத்த உலர்ந்த ரொட்டியையும் பிறருடன் பகிர்ந்து உண்ணும் அவரது தாராள, உதார குணம் மிகவும் உயர்வானது.

கி.பி. 1601ம் ஆண்டின் கோடை காலத்தின் ஆரம்பத்தில் ஒருநாள் அதிகாலை, திராட்சைக் கொடிகளால் வேயப்பட்ட தட்டி (Pallet of Vine-Twigs) படுக்கையிலிருந்து எழுந்திருக்காததை கவனித்த இவரது தந்தை, இந்த இருபத்திரண்டு வயது புனிதர் விழிக்காமலேயே நித்திய வாழ்வை நோக்கிச் சென்றிருந்ததைக் கண்டார்.

No comments:

Post a Comment