புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

15 June 2020

புனிதர் ஆல்பர்ட் சிமியேலோவ்ஸ்கி June 14

† இன்றைய புனிதர் †
(ஜூன் 14)

✠ புனிதர் ஆல்பர்ட் சிமியேலோவ்ஸ்கி ✠
(St. Albert Chmielowski)
மறைப்பணியாளர், நிறுவனர்:
(Religious and Founder)

பிறப்பு: ஆகஸ்ட் 20, 1845
இகொலோமியா, மலோபோல்ஸ்கி, போலந்து
(Igołomia, Małopolskie, Congress Poland)

இறப்பு: டிசம்பர் 25, 1916 (வயது 71)
க்ரகோவ், போலந்து அரசு
(Kraków, Kingdom of Poland)

ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)

முக்திபேறு பட்டம்: ஜூன் 22, 1983, 
திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுல்
(Pope John Paul II)

புனிதர் பட்டம்: நவம்பர் 12, 1989
திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுல்
(Pope John Paul II)

நினைவுத் திருநாள்: ஜூன் 17

பாதுகாவல்:
ஏழைகளின் ஊழியர்கள் (Servants of the Poor)
ஏழைகளின் ஊழிய சகோதரிகள் (Sisters Servants of the Poor)
பிரான்சிஸ்கன் மூன்றாம் நிலை சபை (Franciscan tertiaries)
வீரர்கள், தொண்டர்கள், சாகுபடி, பயணிகள், புலாவி (Puławy),
சோஸ்னோவிக் மறைமாவட்டம் (Diocese of Sosnowiec), ஓவியர்கள்

புனிதர் ஆல்பர்ட் சிமியேலோவ்ஸ்கி, ஒரு “ஒப்புக்கொள்ளப்பட்ட போலிஷ் மறைப்பணியாளர்” (Polish Professed Religious) ஆவார். இவர், “ஏழைகளின் ஊழியர்கள்” (Servants of the Poor) மற்றும் “ஏழைகளின் ஊழிய சகோதரிகள்” (Sisters Servants of the Poor) ஆகிய சபைகளை நிறுவியவருமாவார். ஜனவரி கிளர்ச்சியில் ஈடுபட்டிருந்த இவருக்கு காலில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக, இவர் தமது கால் ஒன்றினை இழக்க நேர்ந்தது. இதன் காரணமாக, தமது வாழ்நாள் முழுதும் ஒரு மரத்தினாலான ஒரு பொய்க் காலை பொருத்தியவாறே வாழ்ந்தார்.

பிரபலமான ஓவியராக மாறிய அவர், தமது ஓவியங்களை ஏழைகளின் நிலை வாழ்க்கைக்கு ஆதரவாக அர்ப்பணிப்பதற்காக அனைத்தையும் கொடுக்க முடிவு செய்வதற்கு முன்னர், தமது ஓவியங்களின் பெரும்பகுதியை கருப்பொருள்களாக ஆன்மீகத்தைப் பயன்படுத்தினார். தொடக்கத்தில் “இயேசுசபையில்” (Jesuits) இணைந்த அவர், பின்னர் அதனின்றும் வெளியேறி, “தூய ஃபிரான்சிசின் மூன்றாம் நிலை சபையில்” (Third Order of Saint Francis) இணைந்தார்.

“ஆதாம் ஹிலரி பெர்னார்ட் சிமியேலோவ்ஸ்கி” (Adam Hilary Bernard Chmielowski) எனும் இயற்பெயர் கொண்ட இவர், “க்ரகோவ்” (Outskirts of Krakow) நகரின் புறநகரான “இகொலோமியா” (Iglomia) எனும் கிராமத்தில், கி.பி. 1845ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், 20ம் நாளன்று, வசதிவைப்புள்ள உயர்குல தம்பதியரான “அடெல்பர்ட்” (Adelbert Chmielowski) மற்றும் “ஜோசஃபின்” (Josephine Borzyslawska) ஆகியோருக்குப் பிறந்த நான்கு குழந்தைகளில் மூத்த மகனாகப் பிறந்தார். ஆகஸ்ட் மாதம் 26ம் நாளன்று, இவருக்கு திருமுழுக்கு அளிக்கப்படவிருந்தது. ஆனால், அன்றைய காலக்கட்டத்தின் குழப்பமான கொந்தளிப்பு நிலை காரணமாக, திருமுழுக்கு சடங்கிற்காக எந்தவொரு குருவும் கிடைக்கவில்லை. ஆகவே, அவருக்கு முறையான திருமுழுக்கு, 1847ம் ஆண்டு, ஜூன் மாதம், 17ம் நாளன்று நடைபெற்றது.

தனது குழந்தை பருவத்தில் அவரும் அவரது உடன்பிறப்புகளும் பெற்றோரை இழந்தனர். இதன் காரணமாக, இவர்களது அத்தையான “பெட்ரோநெலா” (Petronela) இவர்களை கவனித்து வளர்த்தார். பிற்காலத்தில், தனது பெற்றோரின் தோட்டத்தை நிர்வகிப்பதற்காக தன்னை தயார் படுத்திக் கொள்ளும் காரணத்திற்காக, “புலாவி” (Puławy) நகரிலுள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் விவசாயம் கற்றார். போலிஷ் தேசியவாத கிளர்ச்சியில் பங்கெடுத்துக் கொண்டபின், அவர் ஒரு காலை இழந்த போதிலும், அரசியலில் முக்கியத்துவம் பெற்றார். கி.பி. 1863ம் ஆண்டு, அக்டோபர் மாதம், முதல் தேதியன்று, ஒரு ரஷ்ய கையெறிகுண்டு வெடித்ததில், அவரது குதிரைக் கொல்லப்பட்டதுடன், அவரது கால் துண்டாடப்படுமளவிற்கு சேதமடைந்தது. அவருக்கு ஒரு மரக்கால் பொருத்தப்பட்டது. தமது வாழ்க்கையை கடவுளுக்கும், போலிஷ் விடுதலைப் போருக்கும் அர்ப்பணித்தார். காயமடைந்த ஆதாம், ஒரு காட்டுப்பாதாளியின் அறைக்கு கொண்டு செல்லப்பட்டார். மயக்க மருந்து இல்லாமலேயே அவருக்கு அறுவை சிகிச்சை நடந்தேறியது. அறுவை சிகிச்சையால் ஏற்பட்ட தாங்கொண்ணா வலி வேதனைகளை அவர் கடவுளுக்கே ஒப்படைத்தார்.

கிளர்ச்சியாளர்களின் மீதான ஜார்ஜிய அதிகாரிகளின் (Czarist authorities) கடுமையான பதிலடி, ஆதாமை போலந்து (Poland) நாட்டை விட்டு வெளியேற வைத்தது. பெல்ஜியம் (Belgium) நாட்டிலுள்ள “கெண்ட்” (Ghent) என்ற நகரில் குடியேறிய அவர், அங்கே பொறியியல் கற்க தொடங்கினார். இந்த காலகட்டத்தில், தம்மில் ஓவியத்திலும் திறமை இருந்தது என்பதை அவர் கண்டுபிடித்தார். அதிலும் வளர்ச்சியடைய தொடங்கினார். ஓவியப் பயிற்சி மற்றும் பணிகளுக்காக “பாரிஸ்” (Paris) மற்றும் “மூனிச்” (Munich) நகரங்களுக்கு பயணித்த அவர், நிறைய நண்பர்களை சம்பாதித்தார்.

கி.பி. 1874ம் ஆண்டு, அவரால் தனது தாயகத்திற்குத் திரும்ப முடிந்தது. அங்கே அவர் புகழ்பெற்ற கலைஞராக “க்ராகோவில்” பணியாற்றினார். மற்றும், கி.பி. 1870ம் ஆண்டு முதல் 1885ம் ஆண்டு வரை ஒரு ஓவியராக பணியாற்றினார். அவர் 61 ஓவியங்களை மொத்தமாக தயாரித்தார். ஆனால் அவரது படைப்புகள் அவருக்கு வாங்கித் தந்த புகழ் அவருக்கு பிடிக்கவில்லை. ஒரு சந்தர்ப்பத்தில், மனச்சோர்வுக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது வலுவான அரசியல் நம்பிக்கைகள் மனிதனின் நிலைப்பாட்டிற்கும், மென்மையான, கருணையுள்ள ஆவியுடனான அவரது ஆர்வத்தையும் ஊக்கப்படுத்தியது. மேலும், இது ஏழைகளின் துன்பங்களை அவருக்கு உணர்த்தியது. தேவைப்படுகிறவர்களுக்கு உதவி செய்த அவர், க்ரகோவ் (Kraków) நகரிலுள்ள வீடற்றோருக்கான முகாம்களில் பணியாற்றினார்.

கி.பி. 1880ம் ஆண்டு, செப்டம்பர் மாதம், 24ம் தேதி, அவர் “ஸ்டாரா வைஸ்” (Stara Wies) கிராமத்திலுள்ள இயேசுசபையின் (Jesits) புகுமுக (Novitate) பயிற்சியில் இணைந்தார். பின்னர், ஒரு தியானத்தின்போது, ஒரு பயங்கரமான சோதனையை எதிர்கொண்டார். தமது முடிவுக்காக ஏக்கம் கொண்ட அவர், விரைவிலேயே நோய்வாய்ப்பட்டார். அவரது சகோதரர் ஸ்டானிஸ்லாவ் அவரை மீட்டெடுக்க வந்து, அவரை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றார். அங்கு அவர் இயேசுசபைக்கு திரும்புவதில்லை என முடிவு செய்தார். விரைவிலேயே அவர் அசிசியின் தூய ஃபிரான்சிசின் மூன்றாம் நிலை சபையின் சட்டதிட்டங்களை கேள்வியுற்றார். அதன்பால் கவரப்பட்ட அவர், அந்த சபையில் சேர ஆர்வமானார்.

கி.பி. 1887ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், 25ம் தேதியன்று, அசிசியின் தூய ஃபிரான்சிசின் மூன்றாம் நிலை சபையில் இணைந்தார். துறவு ஆடைகளைப் பெற்றுக்கொண்ட அவர், “ஆல்பர்ட்” (Albert) எனும் பெயரை தமது ஆன்மீகப் பெயராக ஏற்றுக்கொண்டார். கி.பி. 1888ம் ஆண்டு, தமது சத்தியப் பிரமாணங்களை ஏற்றுக்கொண்ட இவர், ஆகஸ்ட் மாதம், 25ம் நாளன்று, “ஏழைகளின் ஊழியர்கள்” (Servants of the Poor) எனும் சபையை நிறுவினார். பின்னர், கி.பி. 1891ம் ஆண்டு, ஜனவரி மாதம், 15ம் நாளன்று, “அருளாளர் மரியா ஜப்லோன்ஸ்கா” (Blessed Maria Jabłońska) என்பவருடன் இணைந்து, ஏற்கனவே உள்ள சபைக்கு இணையான, பெண்களுக்கான “அல்பர்ட்டைன் சகோதரியர்” (Albertine Sisters) எனும் சபையை நிறுவினார். இச்சபையினர், வீடற்றவர்களுக்கும் ஏழைகளுக்கும் உணவு மற்றும் தங்குமிடம் ஏற்பாடு செய்து தந்தனர்.

அவர் கார்மேல் கான்வென்ட்டில் (Carmelite Convent) சிறிது காலம் செலவிட்டார். விரைவிலேயே தமக்கு மிகவும் பிடித்த எழுத்தாளரான “புனிதர் சிலுவையின் ஜானின்” (Saint John of the Cross) பிரசுரங்களை நன்கு அறிந்திருந்தார். விரைவிலேயே அவர் கார்மேல் காண்வென்ட்டின் தலைவரான “புனிதர் ரபேல் காலினோஸ்கி” (Saint Raphael Kalinowski) அறிமுகமானார். அவர், ஆல்பர்ட்டை கார்மேல் சபையில் சேருமாறு வலியுறுத்தினார். ஆயினும், இவர் ஃபிரான்சிஸ்கன் சபையிலேயே நிலைத்து இருந்தார்.

வயிற்று புற்று நோயால் (Stomach Cancer) பாதிக்கப்பட்டிருந்த ஆல்பர்ட் சிமியேலோவ்ஸ்கி, கி.பி. 1916ம் ஆண்டின் கிறிஸ்து பிறப்பு தினத்தன்று மரித்தார். அவரது நிலை மோசமடைந்த காரணத்தால், அவர் டிசம்பர் 23ம் தேதியன்றே, “நோயில் பூசுதல்” (Anointing of the Sick) அருட்சாதனத்தைப் பெற்றார்.

No comments:

Post a Comment