புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

18 February 2020

தூய சிமியோன் (பிப்ரவரி 18

இன்றைய புனிதர் : 
(18-02-2020) 

தூய சிமியோன் (பிப்ரவரி 18

“கோதுமை மணி மண்ணில் விழுந்து மடியாவிட்டால் அது அப்படியே இருக்கும். அது மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்” (யோவா 12: 24)

வாழ்க்கை வரலாறு

இன்று நாம் விழாக் கொண்டாடும் சிமியோன், இயேசு பிறப்பதற்கு முன்பாக எட்டு ஆண்டுகளுக்கு முன்பாக, அதாவது கி.மு. 8 ஆம் ஆண்டில் பிறந்தார். இவர் இயேசுவின் வளர்ப்புத் தந்தை யோசேப்பின் சகோதரரான கிளயோப்பாவிற்கும், இயேசுவின் தாயான மரியாவின் சகோதரிக்கும் மகனாகப் பிறந்தார். அப்படிப் பார்க்கும்போது இவரை இயேசுவின் சகோதரர் என்றுதான் சொல்லவேண்டும். மேலும் எம்மாவு நோக்கிச் சென்ற இருவரில் ஒருவர் எனவும், ஆண்டவர் இயேசுவின் விண்ணேற்றத்திற்குப் பிறகு நிகந்த பெந்தகோஸ்தே நிகழ்வில் இவரும் இருந்தார் என்று நம்பப்படுகின்றது.

எருசலேமின் முதல் ஆயரான சின்ன யாக்கோபு கொல்லப்பட்டபோது, இவர் யூதர்களை மிகக் கடுமையாக விமர்சித்தார். சின்ன யாக்கோபின் மறைவிற்குப் பிறகு எருசலேமின் ஆயர் பொறுப்பானது காலியாக இருந்தது. அத்தகைய சூழ்நிலையில் எருசலேமின் ஆயராக யாரை நியமிக்கலாம் என்று திருத்தூதர்கள் கலந்தாலோசித்தபோது சிமியோனின் பெயரையே பரிந்துரைத்தார்கள். திருதூதர்கள் ஒருமனதாக சிமியோனைத் தேர்ந்தெடுத்து ஆயர் பதவியில் அமர்த்தியபோது, அவர் சிறப்பாகப் பணிகளைச் செய்து வந்தார். இதற்கிடையில் உரோமை அரசாங்கம் எருசலேமின்மீது படையெடுத்து வந்து, அதனை அழித்தொழிக்கத் திட்டம் தீட்டியது. இச்செய்தி ஆயர் சிமியோனுக்கு முன்கூட்டியே தெரிய வந்தது. எனவே அவர் இறைமக்களை அழைத்துக்கொண்டு யோர்தான் ஆற்றுக்கு அப்பால் இருக்கின்ற பெல்லா என்று பகுதியில் போய் தங்கினார். பிரச்சனைகளெல்லாம் ஓய்ந்தபிறகு, மீண்டுமாக அவர் இறைமக்களை அழைத்துகொண்டு வந்து எருசலேமில் குடிபெயர்ந்தார்.


சிலகாலம் எல்லாமும் அமைதியாகப் போய்க்கொண்டிருக்கிறதது. டிரேஜனின் ஆட்சிக்காலத்தில் பிரச்சனைகள் மீண்டுமாகத் தலைதூக்கத் தொடங்கியது. அவன் தாவீதின் வழிவந்தவர்களை கொன்றொழிக்கத் திட்டம் தீட்டினான். அப்போது ஆயர் சிமியோன், “நான் தாவீதின் வழிவந்தவர் மட்டும் கிடையாது, கிறிஸ்தவரும்கூட” என்று மிகத் துணிச்சலாகச் சொன்னார். இதனால் சினம்கொண்ட அரசன் அவரைப் பிடித்து சிறையில் அடைத்து சித்ரவதை செய்தான். அப்போதும் அவர் தன்னுடைய விசுவாசத்தில் மிக உறுதியாக இருந்தார். இதனால் வெகுண்டெழுந்த அரசன் அவரை சிலுவையில் அறைந்து கொன்றுபோட்டான். அப்போது அவருக்கு வயது 120. தன்னுடைய முதிர்ந்த வயதிலும் தளராத வசுவாசத்தோடு சிமியோன் இருப்பதைப் பார்த்துவிட்டு எல்லாரும் ஆச்சரியப்பட்டுப் போய் நின்றார்கள்

17 February 2020

Seven Holy Founders of the Servite OrderThirteenth Century February 17

Seven Holy Founders of the Servite Order
Thirteenth Century

February 17—Optional Memorial
Liturgical Color: White (Purple if Lenten Weekday)
Invoked to aid in the imitation of the charity and patience of Our Lady of Sorrows

Group dynamics encourage fidelity to individual good intentions

There are many reasons to join a group. To quilt, play soccer, learn chess, travel, or meet new friends. We accomplish personal goals in a group that we would never accomplish alone. Groups create positive peer pressure for their members to show up on time, read the book, do the exercise, or complete the task assigned. When we join a group we are freely creating obligations for ourselves, because we know, deep down, that accountability to others encourages fidelity to our own obligations.

The groups of the medieval world were called guilds. Craftsmen of similar skills and professions organized in guilds to learn, promote, and protect their trade. Guilds offered mutual assistance to their members that no individual could replicate. There was power in numbers. Today’s feast commemorates seven young men who belonged to a merchant guild in Florence, Italy, in the 1200s. These seven men were serious Christians. They loved God and the Church. And in addition to protecting their commercial interests by joining a guild, they also protected their souls by joining a local spiritual guild called the Confraternity of the Blessed Virgin, where their spiritual exercises were guided by a wise and educated priest who encouraged their devotion.

After the members of the Confraternity experienced mystical visions of the Virgin Mary, there was nothing left to do except abandon their worldly concerns, set aside money for their families to live without their help, and flee the busy city for a solitary life in the nearby mountains. The Seven fasted, prayed, and lived lives of such extreme austerity that a visiting cardinal admonished them to stop living like dogs. Over time they adopted a rule, accepted new recruits, elected leaders, and spread throughout Italy and beyond. They eventually took the name of the Order of Servants of the Blessed Virgin Mary, also known as the Servants of Mary, or Servites.

The Seven Holy Founders were especially devoted to the Seven Sorrows of Mary, and the Servites were instrumental in the Feast of Our Lady of Sorrows becoming part of the Church’s calendar on September 15. The Sorrows of Mary, the sword that pierced her heart, the tears she shed when witnessing Our Lord’s passion and death, motivated the Seven Holy Founders to promote devotion to Mary under this title. Mary was strong and stood at the foot of the cross. But she was also a mom who loved her boy. So she had a heavy heart that continually pondered what His suffering meant. We unite in joy at Christ’s resurrection on Easter and join with Mary’s sorrow just days before. The emotions of Scripture become the emotions of those who read it and those who live it in the liturgy and devotions of the Church.

The names of the Seven Holy Founders are known. But the Church celebrates them as a group, with their individuality ceding to their group identity. Together they accomplished more than seven men working separately could ever have accomplished. Their confraternity became an Order, and that Order still exists for the mutual spiritual benefit of all, a theological guild holding its members to high standards of spiritual perfection. Servite priests and brothers are still active in various countries around the world, hundreds of years after the Order’s founding. This is a testament to the immovable, rock solid, foundation on which its Seven Holy Founders constructed their spiritual and theological home.

On your feast day, our thoughts and prayers turn to you, the Seven Holy Founders of the Servite Order. Help us to find mutual support and assistance in loving God and Mary through a holy alliance with like-minded Christians. Through your intercession and example of group love of God, may our love for Him burn hotter and longer than a single flame.

லூக்காஸ் பெலூடி பெப்ரவரி 17

இன்றைய புனிதர்
2020-02-17
சபை மாநிலத்தலைவர் லூக்காஸ் பெலூடி Lukas Belludi OFM

பிறப்பு
1200,
பதுவை இத்தாலி
இறப்பு
17 பிப்ரவரி 1285,
பதுவை இத்தாலி

இவர் ஓர் உயர்தர குடும்பத்தில் பிறந்தவர். 1220 ஆம் ஆண்டு புனித பிரான்சிஸ் அசிசியாரின் சபையில் சேர்ந்தார். பின்னர் பதுவை நகர் புனித அந்தோனியாரிடம் கல்வி பயின்றார். பெலூடி புனித பிரான்சிஸ்கன் சபையில் மிகச் சிறந்தவராக திகழ்ந்தார். இவர் தான் வாழும் போதே கடவுளின் அருளால் பல நோய்களை குணமாக்கினார். சிறப்பாக "புண்களை" குணமாக்குவதில் சிறப்பான வல்லமையைப் பெற்றிருந்தார். இவர் புனித அந்தோனியாரிடம் மிகுந்த நட்பு கொண்டிருந்தார். இதன் விளைவாக அந்தோனியார் இறந்தபிறகு அவரின் பெயரில் 1232 ஆம் ஆண்டு பதுவை நகரில் பேராலயம் ஒன்றை எழுப்பினார். அவர் இவ்வாலயத்தை கட்டிக்கொண்டிருக்கும் போதே கப்புச்சின் சபையின் மாநிலத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் பதுவை நகர் லூக்காஸ் என்று அழைக்கப்பட்டார்.

இவர் இறந்து 100 ஆண்டுகள் கழித்து 1382 ஆம் ஆண்டு பதுவை நகர் லூக்கா என்ற பெயரில் புனித அந்தோனியாரின் பேராலயத்திற்குள்ளேயே ஆலயம் ஒன்று கட்டப்பட்டது. 1927 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் நாள் திருத்தந்தை 11 ஆம் பயஸ் திருநிலைப்படுத்தி பிரான்சிஸ்கன் சபையின் மறைப்போதகர் என்ற பெயரை அளித்தார்.


செபம்:
எல்லாம் வல்ல கடவுளே! சிறந்த மறைப்போதகரும் நோய்களை குணமாக்குபவரான லூக்காஸ் பெலூடி, உம் பணியை திறம்பட ஆற்ற அருளை வழங்கியுள்ளீர். அவர் எழுப்பிய புனித அந்தோனியாரின் பேராலயத்திற்கு வருகின்ற ஒவ்வொரு மக்களையும் நீர் நிறைவாக ஆசீர்வதியும். உம்மை அண்டி வரும் மக்களுக்கு அருளைப் பொழிந்து வாழ்வை வளமாக்கிட வரம் தருமாறு இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.




இந்நாளில் நினைவுகூறப்படும் பிற புனிதர்கள்

1. இஸ்னி நகர் துறவி மங்கோல்டு Mangold von Isny
பிறப்பு : 11 ஆம் நூற்றாண்டு
இறப்பு : 1150, இஸ்னி, ஜெர்மனி


2. ராட்சேபூர்க் ஆயர் எவர்மோட் Evermod von Ratzeburg
பிறப்பு : 1200 பெல்ஜியம்
இறப்பு : 1278


3. மறைசாட்சி பிரான்சு ரெஜிஸ் கிளெட் Franz Regis Clet CM
பிறப்பு : 19 ஆகஸ்ட் 1748 கிரேனொபெல் Grenoble, பிரான்சு
இறப்பு : 17 பிப்ரவரி 1829 சீனா
முத்திபேறுபட்டம்: 27 மே 1900 திருத்தந்தை 13 ஆம் லியோ

புனிதர் கிளாடி டி லா கொலொம்பியெர் பெப்ரவரி 15

† இன்றைய புனிதர் †
(ஃபெப்ரவரி 15)

 (St. Claude de la Colombiere)

✠ புனிதர் கிளாடி டி லா கொலொம்பியெர் ✠

ஒருவருக்கொருவர் நன்மை செய்து பரிவு காட்டுங்கள் (எபே 4:32)
பெர்ட்ரன்ட் லா கொலம்பியர் மற்றும் மார்க்கிரேட் காய்ன்டட் ஆகியோரின் மூன்றாவது குழந்தையாக 1641, பிப்ரவரி இரண்டாம் தேதி பிறந்தவர் க்ளாத்ததெ லா கொலம்பியர் .பிரான்ஸ் நாட்டின் தெற்குப் பகுதியில் பிறந்த இவர், வியன்னாவிற்கு இடம் பெயர்ந்த பெற்றோருடன் சென்று அங்கே தொடக்கக் கல்வியைப் பயின்றார் .லயோன் சென்று மெய்யியல் கற்றார்.

அந்த நாட்களில் இறைவனின் அழைத்தலை உணர்ந்து இயேசு சபையில் சேர முடிவு செய்தார் .17 வயதில் அவிங்கோனில் நவதுறவி பயிற்சியை ஆரம்பித்தார். பயிற்சிக்குப் பிறகு முதல் வார்த்தைப்பாடு கொடுத்தார் .தொடர்ந்து ஜந்து ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றினார் .1666 இல் பாரிஸ் சென்று இறையியல் படிப்பை முடித்து குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டு லயோன் திரும்பினார்.

முழுநேர மறையுரையாளராக, வழிகாட்டியாக ,பல்வேறு வகைகளில் மறைப்பணியாற்றினார். இறையியலில் கருத்தாழ மிக்க மறையுரைகளை வழங்கினார் . நற்செய்தியின் மதிப்பீடுகளை உள்வாங்கி அதனை மக்களுக்கு ஏற்ற வகையில் வெளிப்படுத்தி அனைவரின் உள்ளங்களையும் வசீகரித்தார் .கடவுள் எந்த அளவுக்குதத் தம் மக்களைப் பாதுகாக்கிறார் அன்பு செய்கிறார் என்பதை மக்கள் உணரச் செய்தார்.

1675 ,பிப்ரவரி இரண்டாம் தேதி நித்திய வார்த்தைப்பாடு கொடுத்து பிறகு பாரே-லெ மோனியால் கல்லூரியின் அதிபராக நியமனம் பெற்றார் .எல்லாரும் சரியான தேர்வு என்று கூறி க்ளாத்தெவைப் புகழ்ந்தார்கள் .இக் கல்லூரிக்கு அருகிலேயே கன்னியர் மடம் ஒன்று இருந்தது .அந்த மடத்தில் அருள்சகோதரி மார்க்கிரேட் மேரி அலகாக் இருந்தார் .இவருக்கு திரு இருதய ஆண்டவர் காட்சி கொடுத்து தமது இருதயத்தைத் திறந்து காட்டினார் . பல்வேறு செய்திகளையும் வெளிப்படுத்தினார். யாரிடம் இதைக் கூறுவது என்று தெரியாமல் மார்க்கிரேட் தவித்து செபித்து வந்தார்.

ஆண்டவர் க்ளாத்தெவுக்கு அறிவுறுத்தி அம்மடத்திற்கு அனுப்பினார் .இருவரும் சந்தித்து உரையாடினார். 'ஆண்டவர் இயேசு கிறிஸ்து என் மன்றாட்டைக் கேட்டருளிளார் ' என்று மார்க்கிரேட் ஆனந்தம் அடைந்தார் .திரு இருதய ஆண்டவர் தமக்குக் கூறிய நற்செய்திகளையும் திருஇருதய பக்தி பரவ ஆண்டவர் விரும்புகிறார் என்பதையும் க்ளாத்தெயிடம் கூறினார். அதை ஆண்டவரின் காட்சி வெளிப்பாடுதான் என்பதை அவரும் நம்பினார் அதன் பிறகு ,அனைத்தையும் எழுதும்படி மார்க்கிரேட்டிடம் கேட்டுக்கொண்டார்.

ஒன்றரை ஆண்டுகள் பாரே-இல் வேலை செய்துவிட்டு லண்டன் சென்றார். அங்கிருந்த டச்ச மக்களுக்கு மறையுரை ஆற்றும் கடினமான பணி இவருக்கு வழங்கப்பட்டது. புனித ஜேம்ஸ் அரண்மனையில் தங்கினார். அரண்மனையில் இருந்த ஆலயத்தில் திருப்பலி நிறைவேற்றியதுடன் ,பலருக்கும் ஆன்ம வழிகாட்டியாகவும் திகழ்ந்தார். நேரிடையாகவும் கடிதம் வழியாகவும் இப்பணியை நிறைவுடன் செய்தார்.

திருச்சபையை விட்டுச் சென்ற பலர் மனமாற்றம் வேண்டி இவரிடம் வந்து பழைய இயல்புகளைக் களைந்துவிட்டு புதிய இயல்புகளை அணிந்து கொண்டார்கள். இதைப் பற்றி குறிப்பிடும் போது, "இங்கு வந்ததில் இருந்து, நான் கண்டு மகிழ்ந்த கடவுளின் இரக்கத்தைப் பற்றி பெரிய புத்தகமே எழுதலாம் "என்றார்.

பருவ நிலையில் தாக்குதல்களுக்கு ஈடு கொடுக்க முடியாது க்ளாத்தெ அடிக்கடி நோயுற்றார் .திடீரென 1678 ஆம் ஆண்டு தவறான தகவலின்படி கைது செய்யப்பட்டு மூன்று வாரங்கள் சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது உடல்நிலை மேலும் மோசமானது .1681 இல் பாரேவிற்கு வந்தவர்  1682 பிப்ரவரி 15 ஆம் நாள் மரணமடைந்தார். இவரைப் பற்றிக் குறிப்பிட்ட மார்க்கிரேட் மேரி ,"அன்பின் நற்செய்தி வழியாக ,கிறிஸ்து வெளிப்படுத்திய இரக்கத்தின் வழியாக, ஆன்மாக்களைக் கடவுளிடம் கொண்டு வந்து சேர்த்தவர் "என்றார் .1929, ஜூன் 16 அன்று திருத்தந்தை 11 ஆம் பக்தி நாதரால் அருளாளர் நிலைக்கு உயர்ந்த க்ளாத்தெ 1992 மே மாதம் 31-ஆம் தேதி திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் வழியாக புனித நிலைக்கு உயர்ந்தார்.

இறையழைத்தல் பெற நம்மால் இயன்ற நலமான உதவிகளைச் செய்யும் போது நாமும் அருளில் நிறைகிறோம்.

புனிதர் அலெக்ஸிஸ் ஃபல்கொனியெரி பெப்ரவரி 17

† இன்றைய புனிதர் †
(ஃபெப்ரவரி 17)

✠ புனிதர் அலெக்ஸிஸ் ஃபல்கொனியெரி
(St. Alexis Falconieri)

நிறுவனர்/ ஆன்மபலம் கொண்டவர்:
(Founder and Mystic)

பிறப்பு: கி.பி. 1200
ஃப்ளோரன்ஸ்
(Florence)

இறப்பு: ஃபெப்ரவரி 17, 1310
செனாரியோ மலை
(Mount Senario)

ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)

முக்திபேறு பட்டம்: டிசம்பர் 1, 1717
திருத்தந்தை பதினோராம் கிளமென்ட்
(Pope Clement XI)

புனிதர் பட்டம்: ஜனவரி 15, 1888
திருத்தந்தை பதின்மூன்றாம் லியோ
(Pope Leo XIII)

முக்கிய திருத்தலங்கள்:
சேன்டிஸ்ஸிமா அன்னுன்ஸியேடா, ஃப்ளோரன்ஸ்
(Santissima Annunziata, Florence)

பாதுகாவல்:
ஓர்வியேடோ நகர் (இத்தாலி)
(City of Orvieto (Italy)

நினைவுத் திருநாள்: ஃபெப்ரவரி 17

புனிதர் அலெக்ஸிஸ் ஃபல்கொனியெரி, "செர்வைட் துறவிகள்" (Servite Friars) அல்லது "மரியாளின் சேவகர்கள்" (Servants of Mary) என்றழைக்கப்படும் "செர்வைட் சபை"யை (Servite Order) நிறுவிய ஏழு தூய நிறுவனர்களுள் ஒருவராவார். இவர் மரணமடைந்த தினத்தன்று அனைத்து எழுவரினதும் நினைவுத் திருநாள் கொண்டாடப்படுகின்றது.

அலெக்ஸிஸின் தந்தை "பெர்னார்ட் ஃபல்கொனியெரி" (Bernard Falconieri) ஃப்ளோரன்ஸ் (Florence) மாநிலத்தின் வர்த்தக இளவரசரும், குடியரசின் முன்னணி தலைவர்களுள் ஒருவரும் ஆவார். இவர்களது குடும்பம், "குவெல்ஃப்" (Guelph party) என்ற அரசியல் கட்சியை சார்ந்ததாகும். "குவெல்ஃப்" கட்சியானது, பாரம்பரியப்படி, திருத்தந்தைக்கு ஆதரவாகவும், ரோமப் பேரரசுக்கு எதிராகவும் செயல்படுவதாகும். இவர்கள், ஏகாதிபத்தியவாதிகளை எதிர்த்து வந்தனர்.

அலெக்ஸிஸ் ஆழ்ந்த பணிவுடன் வளர்க்கப்பட்டார். இத்தாலி நாட்டின் வசதியான, கலாச்சாரம் மிகுந்த நகரமொன்றின் வசதி வாய்ப்புள்ள பிரபுவாக வளர்ந்தார். அலெக்ஸிஸ், "லௌடெசி" (Laudesi) எனப்படும் "அதிதூய அர்ச்சிஷ்ட கன்னி மரியாளின் தோழமைக் கூட்டுறவு பக்தி"யில் இணைந்தார். அங்கே, அவர் தமது புனித வாழ்க்கையின் துணைவர்கள் ஆறு பேரை சந்தித்தார்.

கி.பி. 1233ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், 15ம் நாளன்றும், அலெக்ஸிஸ் மற்றும் அவரது துணைவர்கள் ஆறு பேரும் கடவுளின் அதிதூய அன்னை கன்னி மரியாளின் திருக்காட்சி காணும் பேறு பெற்றார்கள். பின்னர், ஏழு பேரும் இணைந்து "செர்வைட்" (Servites) எனப்படும் “மரியாளின் ஊழியர்கள்” எனும் துறவற சபையைத் தோற்றுவித்தனர். குடும்பம், வர்த்தகம் என, திடீரென அனைத்தையும் ஒரேநாளில் கைவிட்ட அலெக்ஸிஸ் நகருக்கு வெளியே "லா கமார்ஸியா" (La Camarzia) எனும் இடத்திலுள்ள ஒரு வீட்டில் ஓய்வு பெற சென்றார். பின்னர், ஒரு வருடத்தின் பிறகு "செனாரியோ மலை"யில் (Mount Senario) போய் தங்கினார்.

வசதி வாய்ப்புள்ள குடும்பத்து பிள்ளையாக அவர் வளர்ந்த அதே நகரின் தெருக்களில் ஒரு பிச்சைக்காரனாக அலெக்ஸிஸ் வலம்வந்தார். மிகுந்த உண்மையான தாழ்ச்சியுடன் தமது சகோதரர்களுக்காக பிச்சை வேண்டி சுற்றினார். நூற்றுபத்து வயது வரை அவர் வாழ்ந்திருந்தபோதும், குருத்துவம் பெற எப்போதும் மறுத்து வந்திருக்கிறார். தாம் அதற்கு பொருத்தமானவரில்லை என்றே இறுதிவரை கூறினார்.

ஃப்ளோரன்ஸ் நகரின் புறவழியில் உள்ள "கஃபஜ்ஜியோ" (Cafaggio) எனும் இடத்தில் இவரது நேரடி மேற்பார்வையில் கட்டப்பட்ட தேவாலயம் கி.பி. 1252ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. இவரது சொந்த மருமகளான “புனிதர் ஜூலியானா ஃபல்கொனியெரி" (Saint Juliana Falconieri) இவரிடமே துறவற பயிற்சி பெற்றவர் ஆவார்.

மரியாளின் ஊழியர்கள் சபையின் ஏழு நிறுவனர்கள் பெப்ரவரி 17

† இன்றைய புனிதர் †
(ஃபெப்ரவரி 17)

✠ மரியாளின் ஊழியர்கள் சபையின் ஏழு நிறுவனர்கள் ✠
(Seven Founders of the Servite Order)

வகை:
அர்ப்பண வாழ்க்கை நிறுவனம் (Mendicant Order (Institute of Consecrated Life)
மரியான் பக்தி சமுதாயம் (Marian Devotional Society)

உருவாக்கம்: ஆகஸ்ட் 15, 1233

உலகின் வசதி வாய்ப்புள்ள ஏதேனும் ஒரு நகரிலுள்ள ஏழு முக்கிய பிரமுகர்கள் ஒன்றுசேர்ந்து, தங்கள் வீடுகளையும், உத்தியோகங்களையும் விட்டுவிட்டு, நேரடியாக கடவுளுக்கு சேவை செய்வதற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு வாழ்க்கைக்காக தனிமையில் வாழப் போகிறார்கள் என்று நினைக்க இயலுகிறதா? ஆனால், கி.பி. 13ம் நூற்றாண்டின் மத்தியில், இத்தாலி நாட்டின் மேற்கு-மத்திய பிராந்தியமான “டுஸ்கனியின்” (Tuscany) வளர்ந்த, வளமான, பணக்கார தலைநகரான “ஃபுளோரன்ஸ்” (Florence) நகரில் இதுதான் நடந்தது. அரசியல் சச்சரவுகளாலும், "கத்தாரியின்" (Catharism) மதங்களுக்கு எதிரான கொள்கைகளாலும் சின்னாபின்னமாகியிருந்த அக்காலத்தில் அறநெறிகள் குறைவாகவும், சமயங்களும் ஆன்மீக உணர்வுகளும் அர்த்தமற்றதாகவும் தோன்றியது.

கி.பி. 1240ம் ஆண்டு, ஃபுளோரன்ஸ் நகரின் பிரபுக்கள் குடும்பங்களைச் சேர்ந்த எழுவர், பிரார்த்தனைகள் மூலம் கடவுளுக்கு நேரடி சேவை செய்யும் நோக்கில், நகரையும் தமது குடும்பங்களையும் விட்டு விலகி, தனிமை வாழ்வு வாழ பரஸ்பரம் முடிவு செய்தனர். அவர்களது ஆரம்ப பிரச்சினையே, தம்மைச் சார்ந்திருப்பவர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளே. காரணம், அவர்களில் இருவர் ஏற்கனவே திருமணமானவர்கள். இருவர் திருமணமாகி, மனைவியை இழந்தவர்கள். அவர்களின் நோக்கமே, தவம் மற்றும் பிரார்த்தனைகளுடனான ஒரு வாழ்க்கை வாழ்வதேயாம். ஆனால், விரைவிலேயே அவர்கள் ஃபுளோரன்ஸ் நகரிலிருந்து தம்மை அடிக்கடி காண வந்த பார்வையாளர்களால் தொந்தரவை உணர்ந்தனர். பின்னர் அவர்கள், “வக்லியா” (Vaglia) எனுமிடத்திலுள்ள “மான்டே செனரியோ” (Monte Senario) துறவு மடத்தின் வனாந்தரமான சரிவுகளுக்கு திரும்பினர்.

கி.பி. 1244ம் ஆண்டு, தூய பீட்டரின் (Saint Peter of Verona) வழிகாட்டுதலின்படி, இச்சிறிய குழு, டொமினிக்கன் சபையினரின் துறவற சீருடையைப் போன்ற சீருடையை ஏற்றுக்கொண்டனர். தூய அகுஸ்தினாரின் (St. Augustine) சட்ட விதிகளின்படி வாழ முடிவு செய்தனர். “மரியாளின் ஊழியர்கள்” (Servants of Mary) எனும் பெயரை ஏற்றுக்கொண்டார். அதன் குறிக்கோள்கள், அதன் உறுப்பினர்களின் புனிதத்துவமும், நற்செய்தியைப் பிரசங்கிப்பதும், கடவுளின் அதிதூய தாயாரான கன்னி மரியாளின் வியாகுலங்களுக்கு முக்கியத்துவம் தந்து, அவரது பக்தியை பரப்புவதுமாகும்.

ஆரம்பத்திலிருந்தே இச்சபையின் உறுப்பினர்கள், வியாகுல அன்னை மரியாளுக்கு தம்மை அர்ப்பணித்திருந்தனர். இயேசுவின் அன்னைக்கு தமது பக்தியை அர்ப்பணித்த இவர்கள், அன்னை மரியாளின் விருந்தோம்பல் மற்றும் இரக்கத்தினை தமது முத்திரையாக ஏற்றுக்கொண்டனர்.

“மரியாளின் ஊழியர்கள் சபையின்" (Servite Order) ஏழு நிறுவனர்கள் (Seven Holy Founders):
1. புனிதர் போன்ஃபிளியஸ் (St. Buonfiglio dei Monaldi (Bonfilius)
2. புனிதர் பொனஜுன்க்டா (St. Giovanni di Buonagiunta (Bonajuncta)
3. புனிதர் பார்டொலொமியஸ் (St. Amadeus of the Amidei (Bartolomeus)
4. புனிதர் ஹூக் (St. Ricovero dei Lippi-Ugguccioni (Hugh)
5. புனிதர் மனேட்டஸ் (Benedetto dell' Antella (Manettus)
6. புனிதர் சோஸ்டென் (Gherardino di Sostegno (Sostene)
7. புனிதர் அலெக்ஸியஸ் (St. Alessio de' Falconieri (Alexius)

கி.பி. 1888ம் ஆண்டு, ஜனவரி மாதம், பதினைந்தாம் நாளன்று, திருத்தந்தை “பதின்மூன்றாம் லியோ” (Pope Leo XIII), இவர்களனைவரையும் புனிதர்களாக அருட்பொழிவு செய்வித்தார்.இன்றைய புனிதர் : 
(17-02-2020) 

மரியின் ஊழியர் சபையை நிறுவிய எழுவர் (பிப்ரவரி 17)

இயேசு அங்கிருந்து சென்றபோது மத்தேயு என்பவர் சுங்கச் சாவடியில் அமர்ந்திருப்பதைக் கண்டார்; அவரிடம், “என்னைப் பின்பற்றி வா” என்றார். அவரும் எழுந்து இயேசுவைப் பின்பற்றிச் சென்றார். (மத் 9:9)

வாழ்க்கை வரலாறு

பதிமூன்றாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், இத்தாலியில் உள்ள பிளாரென்ஸ் நகரில் மக்கள் கடவுளை மறந்து தங்களுடைய மனம்போன போக்கில், உலகு சார்ந்த வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருந்தார்கள். இவர்களுக்கு மத்தியில் கடவுள்மீது நம்பிக்கை கொண்ட எழுவர் இருந்தனர். அவர்கள் எழுவரும் மரியன்னையின் மீது மிகுந்த பக்திகொண்டு வாழ்ந்து வந்தார். 1233 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 15 ஆம் நாள், அதாவது மரியன்னையின் விண்ணேற்புப் பெருவிழா அன்று, மரியா இவர்களுக்குக் காட்சி கொடுத்து இறைப்பணி செய்ய அழைத்தார். இந்த ஏழுபேரும் இறைப்பணி செய்வதற்கு ஆர்வமாய் இருந்தார்கள். ஆனால், இவர்களில் நான்கு பேர் திருமணம் முடித்திருந்தார்கள். மற்ற மூன்று பேர் மணமுடிக்காமல் இருந்தார்கள். எனவே, இந்த நான்கு பேரும் குடும்பத்தை ஓரளவு கரையேற்றி வைத்துவிட்டு, ஒரு குறிப்பிட்ட நாளில் துறவு வாழ்க்கையை மேற்கொண்டார்கள்.

துறவு வாழ்க்கையை மேற்கொண்ட பிறகு இவர்கள் எழுவரும் பிளாரென்ஸ் நகருக்கு வெளியே இருந்த லா கார்மார்சியா என்னும் இடத்தில் வந்து தங்கி, அங்கே ஜெபத்திலும் தவத்திலும் நிலைத்திருந்தார்கள். இதற்கிடையில் இவர்கள் இருக்கின்ற இடத்தைக் கேள்விப்பட்ட பொதுமக்கள் இவர்களை வந்து சந்திப்பதும் போவதுமாய் இருந்தார்கள். இது இவர்களுடைய ஜெப வாழ்விற்கு பெரிய இடையூறாக இருக்க, இவர்கள் மொந்தே செனாரியோ என்னும் பாலைவனப் பகுதிக்குச் சென்று, அங்கே ஓர் ஆலயம் எழுப்பி, அங்கே ஜெபித்து வந்தார்கள். ஆனால், செய்தி அறிந்து மக்கள் அங்கேயும் சென்று, அவர்களுக்கு இடையூறாக இருந்தார்கள். இதனால் அவர்கள் என்ன செய்வதென்றே தெரியாமல் விழித்தார்கள். வந்தவர்களில் ஒருசிலர் தாங்களும் அவர்களோடு இணைந்து துறவு வாழ்க்கை வாழ ஆசைப்படுகின்றோம் என்று சொன்னபோது, அவர்கள் அதுவெல்லாம் வேண்டாம் என்று சொல்லி மறுத்துவிட்டார்கள். இதற்கிடையில் ஆயர்களான அற்றிங்கோ, கஸ்டிக்லியோன் எழுவரையும் சந்தித்து ஊக்கப்படுத்தினார்கள்.

இது நடந்து ஒருசில நாட்கள் கழித்து, மரியன்னை மீண்டுமாக அவர்களுக்கு காட்சி தந்தார். அவருடைய கையில் கருப்பு நிற ஆடை இருந்தது. அவரோடு ஒரு வானதூதரும் காட்சி தந்தார். அவருடைய கையில் சுருளேடு ஒன்று இருந்தது அதில் ஏழு பேருடைய பெயர்களும் பொறிக்கப்பட்டிருந்தன. அப்போது மரியன்னை அவர்களிடம், “நான் உங்களை என்னுடைய ஊழியர்களாகத் தேர்ந்துகொண்டேன். இந்த கருப்பு நிற ஆடைதான் உங்களுடைய உடையாக இருக்கும். அதே நேரத்தில் நீங்கள் தூய அகுஸ்தினாரின் ஒழுக்க நெறிகளை கடைப்பிடித்து வாழுங்கள்” என்று சொல்லி மறைந்துவிட்டார். அதற்குப் பிறகு அவர்கள் எழுவரும் மரியின் ஊழியர் என்றே அழைக்கப்பட்டனர்.

நாட்கள் செல்லச் செல்லச் அவர்கள் ஏழுபேரும் ஜெபத்திலும் தவத்திலும் மேலும் மேலும் உறுதியானார்கள். அதே நேரத்தில் அவர்களுடைய சபை மேலும் மேலும் வளர்ச்சி அடைந்தது. அந்த ஏழுபேரும் ஒருவர் பின் ஒருவராக சபைத் தலைவராகிய, சபையை வளர்ச்சிப் பாதையில் வழிநடத்திச் சென்றார்கள். அந்த எழுவரின் பெயர்கள் முறையே, போன்பிலியுஸ், அலெக்சிஸ், அமதேயுஸ், ஹக், சொஸ்தேனஸ், மநேதுஸ் மற்றும் போனகுந்தா. இவ்வாறு சபை நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாய் வளர்ந்துவர, 1304 ஆம் ஆண்டு, அப்போது திருத்தந்தையாக இருந்த 11 ஆம் ஆசிர்வாதப்பர் இதனை அதிகாரப்பூர்வமாக அங்கிகரித்தார்.

16 February 2020

புனித ஒனேசிம் பெப்ரவரி 16

† இன்றைய புனிதர் †
(ஃபெப்ரவரி 16)

புனித ஒனேசிம்
நாம் கொண்டுள்ள நம்பிக்கையின் அடிப்படையில் நம்மிடையே இருக்கும் நட்புறவு செயல்வடிவம் பெற வேண்டுகிறேன் (பில1:6)

பிரிகியா பகுதியைச் சேர்ந்தவர் ஒனேசிம் .இவர் கொலோசை நகரில் இருந்த முக்கிய செல்வந்தரான பிலமோன் என்பவரிடம் அடிமைத் தொழில் செய்து வந்தார். பிலமோன் புனித பவுலினால் மனமாற்றம் பெற்று கிறிஸ்தவரானவர். ஒருநாள் ஒனேசிம் தமது தலைவரிடமிருந்து தப்பி ஓடிவிட்டார் .தப்பி ஓடும் அடிமை பிடிபட்டால் மரண தண்டனை கொடுக்க வேண்டும் என்பது உரோமை  சட்டம் ஆகும்.

ஓடிய ஒனேசிம் நேரே தம் தலைவரின் நண்பரான புனித பவுலிடம் சென்றார். சில காலம் அவருடன் இருந்து மனமாறி கிறிஸ்துவராக , புதிய மனிதராக மீண்டும் தம் தலைவரிடமே செல்ல விரும்பினார் .ஆனால் பயம் அவரை ஆட்கொண்டது.

பயத்தை அறிந்த புனித பவுல் , பிலமோனுக்கு ஒரு கடிதம் எழுதினார் .அதில், ஒனேசிமுமை மன்னித்து ஏற்றுக் கொள்ளுமாறும், அடிமையாக இல்லாமல் ஒரு சகோதரராக, கிறிஸ்துவராகக் கருதுமாறும் கடிதத்தில் குறிப்பிட்டார் . பிலமோனும் அப்படியே செய்தார்.

சிறையில் இருந்து விடுதலையான புனித பவுலுக்கு சில காலம் ஒனேசிம் உதவி செய்தார். புனித பவுல் கொலோசையருக்கு எழுதிய கடிதத்தை திக்கி மற்றும் நம்பிக்கைக்குரிய அன்பார்ந்த சகோதரராகிய ஒனேசிம் இருவரும்தான் கொண்டு சென்றார்கள் (கொலோ 4:7-9)

திருத்தூதர்களுக்கும் உதவியாக இருந்த ஒனேசிம் புனித திமொத்தேயுவுக்குப் பிறகு எபேசு ஆயராக இருந்தார்.
ஒனேசிம் சிறந்த மறையுரையாளராக விளங்கியதாக புனித ஜெரோம் மற்றும் பலர்  குறிப்பிட்டுள்ளார்கள் . நற்செய்திக்காக, உரோமையில் 18 நாட்கள் ஒனேசிம் கொடூரமாக வதைக்கப்பட்டார். இவருடைய கால்களையும், தொடைகளையும் உடைத்தார்கள் .95 ஆம் ஆண்டு கற்களை எறிந்து கொலை செய்தார்கள்.

தங்களுக்காக மட்டுமல்லாது மற்றவர்களின் நலனுக்காகவும் இணைந்து செயல்படு கிறவர்களே நல்ல நண்பர்கள்.

புனிதர் ஜூலியானா பெப்ரவரி 16

† இன்றைய புனிதர் †
(ஃபெப்ரவரி 16)

✠ புனிதர் ஜூலியானா ✠
(St. Juliana of Nicomedia)

மறைசாட்சி:
(Martyr)

பிறப்பு: கி.பி. 286
“கம்பேனியா”விலுள்ள “குமாயே”
(Cumae in Campania)

இறப்பு: கி.பி. 304
நிக்கொமீடியா அல்லது நேப்பிள்ஸ்
(Nicomedia or Naples)

ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
கிழக்கு மரபுவழி திருச்சபை
(Eastern Orthodox Church)
ஓரியண்ட்டல் மரபுவழி திருச்சபை
(Oriental Orthodoxy)

பாதுகாவல்: நோய்கள்

நினைவுத் திருநாள்: ஃபெப்ரவரி 16

புனிதர் ஜூலியானா, ரோம பேரரசன் "டையோக்லெஷியன்" (Roman Emperor Diocletian) என்பவரது ஆட்சிக் காலத்தில் நடந்த கிறிஸ்தவர்களின் துன்புருத்தல்களின்போது மறைசாட்சியாக கொல்லப்பட்டவர் ஆவார். மத்திய காலங்களில் நெதர்லாந்து நாட்டில் பிரசித்தி பெற்றவராக திகழ்ந்தார்.

லத்தீன் மற்றும் கிரேக்க திருச்சபைகள் இவரது பெயரை தமது புனிதர்களின் பட்டியலில் தூய மறைசாட்சியாக வைத்துள்ளன.

ஜூலியானா, ஓர் மதிப்புமிக்க "பேகன்" (Pagan) குடும்பத்தில் பிறந்தார். இவரின் தந்தை அரசு அதிகார சபை அங்கத்தினர் (Senator) ஆவார். அவரது பெயர், "அஃப்ரிகனஸ்" (Africanus) ஆகும். இவர் ஒரு கிறிஸ்தவ எதிர்ப்பாளர் ஆவார்.

ஜூலியானா தமது பெற்றோருக்கு தெரியாமலேயே திருமுழுக்கு பெற்றார். ஜூலியானாவுக்கு சிறு வயதிலேயே திருமண நிச்சயம் செய்யப்பட்டது. பேரரசனின் ஆலோசகர்களில் ஒருவரும் அதிகார சபை உறுப்பினருமான "எலாசியஸ்" (Eleusius) என்பவருடன் திருமண நிச்சயம் நடந்தது.

ஆனால், ஜூலியானாவோ, தமது கன்னித் தன்மையை இழக்க விரும்பவில்லை. இவர் இறைவனுக்காகவே வாழ விரும்பினார். தமது விருப்பத்தை தமது பெற்றோரிடமும் தெரிவித்தார்.

மிகவும் கீழ்படிதலுள்ள தம் பெண், இங்ஙனம் தம்மை மறுத்து பேசியது, அவரது பெற்றோருக்கு பெரும் அதிர்ச்சியை இருந்தது. அவர்கள் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் ஜூலியானா கேட்கவில்லை. அவர்கள் ஜூலியானாவை எலாசியஸிடம் ஒப்படைத்தனர்.

உயர் பதவியில் இருப்பதால் அகங்காரம் கொண்டிருந்த எலாசியஸ் ஜூலியானாவை பலி வாங்கும் நாளுக்காக காத்திருந்தான். தமது அதிகாரத்தைப் பயன்படுத்தி, ஜூலியானா கிறிஸ்தவ மதத்துக்கு மாறியதையும் விசாரித்து அறிந்து கொண்டான்.

ஜூலியானா தனது சிறுவயதிலிருந்தே கடவுள் பக்தியில் வளர்ந்தார். தன் தாய்க்கு தெரியாமல் மறைவாகச் சென்று செபவாழ்வில் ஈடுபட்டார். பல முறை தன் தாயிடம் சொல்லாமலேயே தன் ஊரில் நடக்கும் கிறிஸ்தவ செபக்கூட்டங்களில் பங்கெடுத்தார்.

காலப்போக்கில், பண பலம் கொண்ட எலாசியஸ், தமது பணம் மற்றும் அதிகாரத்தைப் பயன் படுத்தி, "பிதினியா" (Bithynia) நாட்டின் 'ரோம ஆளுனராக' பதவி பெற்றான்.

பெற்றோரின் வற்புறுத்தலுக்குப் பின்னரும், ஜூலியானா தமது முடிவில் ஸ்திரமாக இருந்தார். திருமணத்துக்கு சம்மதிக்க மறுத்து விட்டார். இதன் காரணமாகவும் கோபமுற்ற 'ரோம ஆளுனர்' எலாசியஸ், ஜூலியானாவை கைது செய்ய உத்தரவிட்டான். கைது செய்யப்பட்ட ஜூலியானா, 'ரோம ஆளுனரின்' முன்பு நிறுத்தப்பட்டார். ஜூலியானாவின் கணவனாக நிச்சயம் செய்யப்பட்டவனே ஜூலியானாவை தீர்ப்பிடும் நீதிபதியாக இருந்தான்.

கிறிஸ்தவ மதத்தைத் தழுவி அதனைப் பின்பற்றிய காரணத்துக்காக ஜூலியானா கொடூரமாக துன்புறுத்தப் பட்டார். இரக்கமேயில்லாமல் சாட்டையால் அடிக்கப்பட்டார். அவர், அவரது தலை முடியாலேயே கட்டித் தொங்க விடப்பட்டார். பின்னர், அவரது தலை முடி, அவரது தலையிலிருந்து பிடுங்கப்பட்டது.

சிறைச்சாலையில், ஒரு சம்மனசின் வேடமிட்டு அவரை அணுகிய பசாசு, சிலை வழிபாட்டுக்கு சம்மதித்து தியாகம் செய்யும்படி அவரை வற்புறுத்தியது. அதன் சூழ்ச்சியை அறிந்துகொண்ட ஜூலியானா, அதனை அடித்து, அதன் முகத்தில் காரி உமிழ்ந்து விரட்டினார். அதன் பிறகு, அவருக்கு தமது நிலைப்பாட்டில் உறுதியுடன் போராட புதிய சக்தி கிடைத்தது.

அவர், மீண்டும் சிறையிலிருந்து வெளியே கொண்டுவரப்பட்டு, விசாரிக்கப்பட்டார். அவர் தமது முடிவை மாற்றிக் கொண்டால், அவரை திருமணம் செய்து கொள்ள தயாராக இருப்பதாக எலாசியஸ் அறிவித்தான். மற்றும், ஜூலியானா தமது விருப்பப்படி கிறிஸ்துவையே பூஜிக்கலாம் என்றும் சம்மதித்தான். ஆனால், ஜூலியானா யாதொரு சஞ்சலத்துக்கும் ஆளாகாதிருந்தார்.

இறுதியில், ஜூலியானா ஒரு உருக்கப்பட்ட செம்பு கொப்பரையின் முன்பு கொண்டு வரப்பட்டார். அவர் அந்த கொப்பரையைத் தொட, அது விழுந்து, அதன் உருக்கப்பட்ட செம்பு அவரை சுட்டு காயப் படுத்தியது. அங்கே, நூற்றுக்கணக்கான (ஆண்கள் 500 பேரும், பெண்கள் 130 பேரும்) பழமைவாதிகள் கிறிஸ்தவர்களாக மாறுவதற்காக தயாராக காத்திருந்தனர். அவர்களனைவரும், ரோம ஆளுனர் எலாசியஸின் கட்டளைப்படி தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டனர்.

எலாசியஸ், அவரது முகத்தில் ஒரு பழுக்க காய்ச்சிய இரும்பால் சூடு போட்டான். பிறகு, "இப்போது போய் கண்ணாடியில் உன் அழகிய முகத்தைப் பார்த்து ரசி" என்றான். ஆனால், மென்மையாக புன்னகைத்த ஜூலியானாவோ, "இறுதித் தீர்ப்பின்போது, உயிர்த்தெழும் என் உடலிலுள்ள காயங்கள் யாவும் ஆறிவிடும்; என் ஆன்மாவை உன்னால் காயப்படுத்த முடியாது" என்றார்.

இறுதியில், ஜூலியானா தலை துண்டிக்கப்பட்டு மறைசாட்சியாக கொல்லப்பட்டார். அப்போது அவருக்கு வயது பதினெட்டு. அவருடன் சேர்த்து, பார்பரா (Barbara) என்ற ஒரு புனிதரும் துன்புறுத்தப்பட்டு, தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டார்.

15 February 2020

புனிதர் கிளாடி டி லா கொலொம்பியெர் பெப்ரவரி 15

† இன்றைய புனிதர் †
(ஃபெப்ரவரி 15)

✠ புனிதர் கிளாடி டி லா கொலொம்பியெர் ✠
(St. Claude de la Colombiere)

அருட்பணியாளர், குரு, ஒப்புரவாளர்:
(Religious, Priest and Confessor)

பிறப்பு: ஃபெப்ரவரி 2, 1641
புனித சிம்போரியன்-டி'ஓஸோன், டௌஃபின், ஃபிரான்ஸ் அரசு
(Saint-Symphorien-d'Ozon, Dauphiné, Kingdom of France)

இறப்பு: ஃபெப்ரவரி 15, 1682 (வயது 41)
பாரே-லி-மோனியல், பர்கண்டி, ஃபிரான்ஸ் அரசு
(Paray-le-Monial, Duchy of Burgundy, Kingdom of France)

ஏற்கும் சமயம்:
கத்தோலிக்க திருச்சபை (இயேசு சபை)
(Catholic Church (Society of Jesus)

முக்திபேறு பட்டம்: ஜூன் 16, 1929
திருத்தந்தை பதினோறாம் பயஸ்
(Pope Pius XI)

புனிதர் பட்டம்: மே 31, 1992
திருத்தந்தை இரண்டாம் ஜான் பால்
(Pope John Paul II)

முக்கிய திருத்தலம்:
இயேசுசபை தேவாலயம், பாரே-லெ-மோனியல், சவோனே-ஏட்-லோய்ர், ஃபிரான்ஸ்
(Jesuit Church, Paray-le-Monial, Saône-et-Loire, France)
பாதுகாவல்:
இயேசுவின் திருஇருதய பக்தி
(Devotion to the Sacred Heart of Jesus)

நினைவுத் திருநாள்: ஃபிப்ரவரி 15

இன்றைய புனிதராக நினைவுகூறப்படும் புனிதர் "கிளாடி டி லா கொலொம்பியெர்" இயேசு சபையைச் சார்ந்தவர் என்பதால், இயேசு சபையைச் சேர்ந்த துறவியர் மற்றும் குருக்களுக்கு இன்றைய தினம் ஒரு விஷேச தினமாகும். கிளாடி தமது சிநேகிதியும் ஆன்மீக துணையுமான "புனிதர் மார்கரெட் மேரி அலகோக்யூ'வுடன்" (Saint Margaret Mary Alacoque) இணைந்து இயேசுவின் திருஇருதய பக்தியை பரப்பும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார். ஆகவே, இயேசுவின் திருஇருதயத்தின்பால் தீவிர பக்தி கொண்டுள்ளோர்க்கும் இன்றைய தினம் ஒரு விஷேட தினமாகும்.

இவர் ஒரு இயேசு சபை குருவும், அருட்பணியாளரும், ஒப்புரவாளரும், துறவறம் சார்ந்த எழுத்தாளருமாவார்.

1641ம் ஆண்டு, ஃபிரான்ஸ் அரசின் (Kingdom of France) பண்டைய "டௌஃபின்" (Province of Dauphiné) பிராந்தியத்தில் பிறந்த கிளாடியின் தந்தை "பெர்ட்ரான்ட்" (Bertrand de la Colombière) ஒரு பத்திர சான்றளிக்கும் அலுவலர் ஆவார். தாயாரின் பெயர், "மார்கரெட்" (Margaret Coindat) ஆகும். இவர்களது குடும்பம் விரைவிலேயே அருகாமையிலுள்ள நகரான "வியன்னா"வுக்கு (Vienne) புலம்பெயர்ந்து சென்றது. அங்கே கிளாடி தமது ஆரம்ப கல்வியை தொடங்கினார்.

1658ம் ஆண்டு, தமது பதினேழாம் வயதில் கிளாடி "அவிக்னான்" (Avignon) என்ற இடத்திலுள்ள இயேசு சபையின் துறவறப் புகுநிலையில் (Novitiate) இணைந்தார். துறவறப் புகுநிலை கல்வியை இரண்டு வருடங்களில் முடித்த கிளாடி, உயர் கல்வியையும் அதே நகரிலேயே தொடங்கினார். அதன் பின்னர், தமது பிரதிநிதித்துவத்தை அதே கல்லூரியில் இலக்கணம் மற்றும் இலக்கியம் ஆகியனவற்றை கற்பிப்பதில் ஈடுபடுத்தினார்.

"கிளேர்மான்ட்" (College de Clermont) கல்லூரியில் இறையியல் கற்பதற்காக 1666ம் ஆண்டு, கிளாடி பாரிஸ் நகர் அனுப்பப்பட்டார். அங்கே இறையியல் படிப்பை பூர்த்தி செய்ததும் குருத்துவ அருட்பொழிவு செய்யப்பட்டார். பின்னர் முதன்முதலாக "லியான்" (Lyon) நகரிலுள்ள இவரது முன்னாள் பள்ளியில் கற்பிக்க பணி நியமனம் பெற்றார். அதன்பின்னர், அவர் இயேசு சபையின் மறை பரப்பும் குழுவினருடன் இணைய அறிவுறுத்தப்பட்டார். அங்கேதான் அவரது பிரசங்கிக்கும் திறனும் வலிமையையும் வெளிப்பட்டது.

1676ம் ஆண்டு கிளாடி, அப்போதைய இங்கிலாந்து, ஸ்காட்லாந்து மற்றும் அயர்லாந்து நாடுகளின் அரசியான (Queen consort of England, Scotland and Ireland) “மேரி” (Mary of Modena) என்பவரின் போதகராக இங்கிலாந்து நாட்டுக்கு அனுப்பப்பட்டார். ஃபிரான்ஸ் நாட்டிலிருந்தது போலவே இங்கேயும் திறமையான மறை போதகராகவும், ஒப்புரவாளராகவும் செயல்பட்டார். பல சிரமங்களை எதிர்கொண்ட போதிலும், “மார்கரெட் மேரி அலாக்கோவை” (St. Margaret Mary Alacoque) கடிதங்கள் மூலம் வழிகாட்டினார். கிளாடியின் வைராக்கியமான பணிபுரியும் திறனும், இங்கிலாந்தின் பருவநிலையும் சேர்ந்து கிளாடியின் உடல்நிலையை மோசமாக்கின. அவர் மிகவும் பலவீனமடைந்ததுடன் சுவாசக் கோளாறு நோய்களால் பாதிக்கப்பட்டார். இதன்காரணமாக, அவரது பணிகள் இங்கிலாந்து நாட்டில் முடிவுக்கு வந்தன.

1678ம் ஆண்டு, நவம்பர் மாதம், ஃபிரான்ஸ் நாட்டுக்கு திரும்பிச் செல்ல அழைக்கும் உத்தரவுக்காக காத்திருந்த வேளையில், சட்டென அவர் கைது செய்யப்பட்டு சிறையில் தள்ளப்பட்டார். ஆங்கிலேய அரசுக்கு எதிராக திருத்தந்தை சார்பாக சதி புரிவதாக குற்றம் சாட்டப்பட்டார். கத்தோலிக்க எதிர்ப்பு வெறியார்களால் பிடிக்கப்பட்டு கடுமையான நிலைமைகளில் சிறைப்படுத்தப்பட்டார். இதன்காரணமாக இவரது ஆரோக்கியம் மேலும் சீர்கெட்டது.

ஃபிரான்ஸ் மன்னர் பதினான்காம் லூயிஸின் (King of France, Louis XIV) தலையீட்டால் மரண தண்டனையின்றி தப்பிய கிளாடி, உடனடியாக 1679ம் ஆண்டு, ஃபிரான்ஸுக்கு நாடு கடத்தப்பட்டார். சிறை வாழ்க்கையின் கோர பிடியினால் மோசமாக பாதிக்கப்பட்டிருந்த கிளாடி ஃபிரான்ஸ் திரும்பினார்.

தமது வாழ்க்கையின் கடைசி இரண்டு வருடங்களை "லியோன்" (Lyon) நகரில் செலவிட்ட கிளாடி, இரத்த ஒழுக்கு (Hemorrage) காரணமாக 1682ம் ஆண்டு, ஃபெப்ரவரி மாதம், 15ம் நாளன்று மரணமடைந்தார்.

திருத்தந்தை ஃபிரான்சிஸ் அவர்கள், கடவுளின் அன்புக்கும் இரக்கத்துக்கும் மிக அழகாக முக்கியத்துவம் தருபவர் என்பதாலும், கிளாடி ஒரு சக இயேசு சபையினராகவும், இயேசுவின் திருஇருதய பக்தியை தீவிரமாக பரப்பியவர் என்பதாலும் கிளாடி அவருக்கு மிகவும் விசேடமானவர் எனலாம். மற்றும், கடவுளின் அன்புக்கும், இரக்கத்துக்கும் முக்கியத்துவம் தருவது இவ்விருவரின் சிறப்புப் பண்பாகும்.

புனிதர் தியடோசியஸ் ஃப்ளோரென்டினி பெப்ரவரி 15

† இன்றைய புனிதர் †
(ஃபெப்ரவரி 15)

✠ புனிதர் தியடோசியஸ் ஃப்ளோரென்டினி ✠
(St. Theodosius Florentini)

கபுச்சின் துறவி/ சபை நிறுவனர்:
(Capuchin monk and a founder)

பிறப்பு: மே 23, 1808
முன்ஸ்டர், கிரிசன்ஸ், ஸ்விட்சர்லாந்து
(Münster, in the Grisons, Switzerland)

இறப்பு: ஃபெப்ரவரி 15, 1865
ஹைடன், அப்பென்செல்,  ஸ்விட்சர்லாந்து
(Heiden, in Appenzell, Switzerland)

ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)

நினைவுத் திருநாள்: ஃபெப்ரவரி 15

புனிதர் தியடோசியஸ் ஃப்ளோரென்டினி, ஸ்விட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஒரு கப்புசின் சபை துறவியாவார். இவர், கத்தோலிக்க சபைகளையும் கல்வி நிறுவனங்களையும் நிறுவியவராவார்.

1825ம் ஆண்டு, அக்டோபர் மாதம், 22ம் நாள், தனது 17 வயதிலேயே கப்புச்சின் சபையில் சேர்ந்த இவர், 1830ம் ஆண்டு, குருத்துவம் பெற்று, குருவானார். உடனடியாக புதுமுக துறவியரின் தலைமைப் பொறுப்பேற்ற (Novice Master) இவர், தத்துவம் மற்றும் இறையியல் கற்பிக்க தொடங்கினார். “படேன்” (Baden) எனும் வரலாற்று ஜெர்மன் பகுதியின் பாதுகாவலராக பொறுப்பேற்றார். 1845ம் ஆண்டு, “ச்சூர்” (Chur) எனும் பங்கின் பங்குத் தந்தையும், சிரேஷ்டருமானார். 1857ம் ஆண்டு, (Definitor) என்ற பதவியை வகித்த இவர், 1860ம் ஆண்டு, “ச்சூர்” மறைமாவட்டத்தின் (Diocese of Chur) தலைமைக் குருவாகவும் (Vicar-General) பதவி வகித்தார்.

1847ம் ஆண்டு, ஸ்விட்சர்லாந்தில் நடந்த “சொண்டேர்பன்ட்” (The Sonderbund War) சிவில் யுத்தத்தின் பின்னர், தீவிர அரசியல் (Radical party) கட்சி, கத்தோலிக்க உணர்வுகளை எதிர்த்தது. திருச்சபையின் பாதுகாப்பின் விளைவாக, தந்தை தியடோசியஸ் 1841ம் ஆண்டு, “அல்சேஸி”ற்கு (Alsace) ஓடிப்போனார். அதே வருடம் ஆகஸ்ட் மாதம் அவர் திரும்ப வந்தார். அவர், ஹோலி கிராஸ்/ தூய திருச்சிலுவை ஃபிரான்சிஸ்கன் சகோதரியரின் கல்வி நிறுவனத்தை நிறுவினார். 1844ம் ஆண்டு, அக்டோபர் மாதம், 16ம் நாள், “அல்டார்ஃப்” (Altorf) எனுமிடத்திலுள்ள கபுச்சின் தேவாலயத்தில், முதல் மூன்று அருட்சகோதரியர் மூன்றாம் நிலை தூய ஃபிரான்சிஸ் சபையின் (Third Order of St. Francis) சீருடைகளைப் பெற்றுக்கொண்டனர். கிறிஸ்துவில் ஆத்துமாக்களை ஜெயிப்பதற்காக, தங்கள் வாழ்க்கை முறையிலிருந்து எதையும் தடுக்கக்கூடிய எந்த ஒன்றையும் செய்யாமலிருக்க அவர்களது அமைப்பு சட்டங்கள், அனைவரையும் தங்களைக் கட்டிக்கொள்ளும்படி கட்டளையிட்டிருந்தன. இந்த அடித்தளத்திலிருந்து, கற்பிக்கும் சகோதரிகளின் சபை, “மென்ஸிங்கன்” (Menzingen) எனுமிடத்திலுள்ள அவர்களுடைய தலைமை இல்லத்தில் வளர்ந்தது.

பின்னர், தந்தை தியடோசியஸ், “இன்ஜென்பால்” (Ingenbohl) எனுமிடத்தில், “கருணையின் சகோதரியர்” (Sisters of Mercy) சபையை நிறுவினார். இரு சபையினரும் கல்விப் பணியில் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர். கருணையின் சகோதரிகள், ஏழைகளுக்கும் நோய்வாய்பட்டவர்களுக்கும் இல்லங்களை உருவாக்கினர். தனியார் மருத்துவ சேவைகளை மேற்கொண்டனர்.

இதற்கிடையில் தந்தை தியடோசியஸ், ஒரு பள்ளி ஆசிரியராக தன்னையும் பரபரப்பாக வைத்திருந்தார். அவர் “வோல்க்ஸ்குலேன்” (Volksschulen) பள்ளிகளில் மேற்பார்வையிடும் பணிகளையும் செய்தார். இது ஏழைகளுக்கு மட்டுமல்லாமல் மற்றவர்களும் கலந்துகொண்டனர். அவர் தொடர்ச்சியான பள்ளிகளை ஊக்குவித்தார். மற்றும், பயிற்சியாளர்களுக்கும், பணியாளர்களுக்கும் தொழில்நுட்ப அறிவுரைகளுக்கு ஆதரவாக இருந்தார். அவர் புதிதாக (Maria-Hilf zu Schwyz) எனப்படும் இயேசுசபை கல்லூரி ஒன்றை நிறுவினார். புதிய கத்தோலிக்க வாழ்க்கையைத் தூண்டுவதற்காக அவர் மத குருக்களுக்காக பிரபலமான பணிகளையும் தியானங்களையும் தொடங்கினார்.

சுவிஸ் ஆயர்களின் வருடாந்த மாநாட்டின் நிறுவனம் உருவாவதற்கு, இவரது முயற்சிகளே காரணமாக இருந்தது. சுவிஸ் கத்தோலிக்கர்களின் கத்தோலிக்க உணர்வுகளை வலுப்படுத்தவும், சமூக வேலைகளை ஒழுங்கமைக்கவும், “பக்தி சபையை” (Pius Society) நிறுவினார்.

சிறுவர்கள், பயிற்சி பெற்றவர்கள், புறக்கணிக்கப்பட்ட சிறுவர்கள், மற்றும் வெளியேற்றப்பட்ட கைதிகள் போன்ற உதவியற்ற மற்றும் சார்ந்து இருக்கும் கவனிப்பு மற்றும் ஆய்வுகளின் மீது அவர் மிகவும் ஆர்வமாக இருந்தார். தொழில் சம்பந்தமான கேள்விகளுக்கு, 1863ம் ஆண்டு, பிராங்க்ஃபோர்ட்டில் தமது உரையில் அவர் தம்மை வெளிப்படுத்தினார். தொழிற்துறை, தொழிற்சங்கங்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு கடன் தரும் வங்கிகள் ஆகியவற்றை கிறிஸ்தவ மயமாக்க கோருகையில், அவர் பின்வருமாறு கூறினார்:
"முன்பு, மடாலயங்கள் தொழிற்சாலைகளாக மாறியது; இப்போது தொழிற்சாலைகள் மடாலயங்களாக மாறும்; இலாபங்கள் தொழிலாளர்களுடன் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும்".

இந்த யோசனையை நிறைவேற்றுவதற்காகம், தொழிற்சாலைகள் நிறுவப்பட்டன. ஆனால் அவை நிறுவியவர்களிடையே வணிக திறமையின்மை காரணமாக அவை தோல்வியடைந்தன. தந்தை தியடோசியஸ், (Ingenbohl) எனுமிடத்தில், புத்தகங்கள் அச்சிடும் மற்றும் புத்தக-கட்டு அமைப்பு ஒன்றையும், புத்தகங்கள் விநியோகத்திற்கான ஒரு சமுதாயத்தையும் நிறுவினார்.

தந்தை தியடோசியஸ், பலரின் வாழ்வில் ஆன்மீக வழிகாட்டியாக திகழ்ந்தார். அத்துடன் பல குடும்பங்களில் அப்போஸ்தல வாழ்வை அறிமுகப்படுத்தினார். அத்துடன் பள்ளிகளிலும் மருத்துவ மனைகளிலும் பல தொழிற்சாலைகளிலும் ஆன்மீக வழிகாட்டியாகப் பணியாற்றினார்.
இவர் கைவிடப்பட்டவர்களுக்கென்று பல இல்லங்களை நிறுவினார். அதன்பிறகு ஆண்களுக்கென சில மருத்துவப் பயிற்சி பெறும் இல்லங்களை நிறுவினார். இடைவிடாமல் பணியாற்றி பல அச்சிடும் நிறுவனங்களையும், நூலகங்களையும், தொழிற்சாலைகளையும் நிறுவினார். இவர் பல பள்ளிகளை ஒருங்கிணைக்கும் பணியை சிறப்பாக ஆற்றினார். இவர் "மக்களின் மறைப்பரப்பு பணியாளர்" என்றழைக்கப்பட்டார்.

Sts. Saint Faustinus and Saint Jovita 15-2-20

Saint of the Day : (15-02-2020)

Sts. Saint Faustinus and Saint Jovita

Saint Faustinus

Born to the nobility in 2nd century Italy, the older brother of Saint Jovinus. Priest. Zealous preacher in Brescia, Milan, Rome, and Naples. Tortured and martyred in the persecution of Emperor Hadrian.
While their cultus is ancient and widespread, recent scholarship indicates that the story of Jovinus and Faustinus was a pious fiction mistaken for a biography.

Born : 
at Brescia, Lombardy, Italy

Died : 
with his brother, he was thrown to the lions, but the animals refused to touch the men
• beheaded in 120 at Brescia, Italy
• relics reported in Brescia, Rome, Verona, and Bologna. 

Patronage : 
Brescia, Italy
• Credera Rubbiano, Italy


Saint Jovita

Born to the nobility in 2nd century Italy, the younger brother of Saint Faustinus. Deacon. Zealous preacher in Brescia, Milan, Rome, and Naples. Tortured and martyred in the persecution of Emperor Hadrian.

While their cultus is ancient and widespread, recent scholarship indicates that the story of Jovinus and Faustinus was a pious fiction mistaken for a biography.

Born : 
at Brescia, Lombardy, Italy
• Credera Rubbiano, Italy

Died : 
with his brother, he was thrown to the lions, but the animals refused to touch the men
• beheaded in 120 at Brescia, Italy
• relics reported in Brescia, Rome, Verona, and Bologna

Patronage : 
Brescia, Italy

புனிதர்கள் ஃபாஸ்டினுஸ் மற்றும் ஜோவிட்டா பெப்ரவரி 15

† இன்றைய புனிதர் †
(ஃபெப்ரவரி 15)
புனிதர்கள் ஃபாஸ்டினுஸ் மற்றும் ஜோவிட்டா
படைப்பு முழுவதற்கும் அவர் தம் இரக்கத்தை வெளிப்படுத்தினார் (சீஞா 16:16)
ஃபாஸ்டினுஸ்  மற்றும் ஜோவிட்டார் இருவரும் இத்தாலியில் , லம்பார்தேயில் உள்ள ப்ரசியா என்னும் இடத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர்கள் .உடன் பிறந்த சகோதரர்கள் . முதலாமவர் குருவாக இருந்தார் .இரண்டாமரோ திருத்தொண்டராக இருந்தார் .பாரம்பரியத் தகவல்களின்படி இருவருமே தீவிரமாக நற்செய்தியைப் போதித்து கிறிஸ்துவை மற்றவர்கள் அறியச் செய்வதில் முனைப்புக் காட்டினார்கள் என்பது தெரிகிறது.
கிறிஸ்தவர்களைக் கொன்றழித்து ஆனந்தம் அடைந்த அரசர்களை மகிழ்விக்க ஆளுநர்களும் கங்கனம் கட்டிச் செயல்பட்டார்கள் . அப்படியான  ஆளுநர்களுள் ஒருவரான ஜூலியன் இச்சகோதரர்கள் இருவரையும் கைது செய்தான் .துன்புறுத்தி குதூகலித்தான் .ப்ரசியாவிலிருந்து பிலான் நகருக்கும் அங்கிருந்து உரோமைக்கும் ,பிறகு நேப்பிள்ஸ் பகுதிக்கும் மீண்டும் ப்ரசியாவுக்கும் இருவரையும் கட்டி இழுத்துச் சென்றான்.

அப்போது யதார்த்தமாக அந்தப்பக்கமா வந்து பேரரசர் அட்ரியன் இருவரைப் பற்றியும் விசாரித்தான் .இதைக் குறித்து ,அப்போது பேரரசன் அட்ரியனுடன் ப்ரசியாவுக்கு வந்திருந்த புனித கலாசெருஸ் எழுதியுள்ளார் .இவர் ப்ரசியாவைத் தாய் மண்ணாகவும் ,பேரரசர் அட்ரியன் அரசவையில் அதிகாரியாகவும் இருந்தவர்.
விசாரணையின்போது சூரியனை வணங்கும்படி கட்டளை பிறப்பித்தான் பேரரசன் . அதை மறுத்து, "உலகிற்கு ஒளிதர சூரியனைப் படைத்த இறைவனைத் தவிர வேறொன்றையும் வணங்க மாட்டேன் " என்று ஃபாஸ்டினுஸ் துணிச்சலுடன் பதிலுரைத்தார்.

தாங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இடத்திற்கு முன்பாக இருந்த சிலை ஒளிரும் படி வடிவமைக்கப்பட்டிருந்ததைக் கவனித்த ஜோவிட்டா "விண்ணகத்திலிருந்து ஆட்சி செய்யும் இறைவனையே நாங்கள் வணங்குகிறோம் . அவரை சூரியனைப் படைத்தார். நீங்களும் இந்த சிலையும் கருகிப்போவீர்கள் .இதை வணங்கும் அனைவருக்கும் அவமானமே வந்து சேரும்" என்று ஒளிபடைத்த கண்ணினனாக முழங்கினார்.
உடனேயே அச்சிலை கறுத்துப்போனது. அங்கு நின்றிருந்த பூசாரிகளை அனுப்பி சிலையைச் சுத்தம் செய்யும்படி அரசன் கட்டளையிட்டான் . பயந்து நடுங்கி தயங்கியபடியே அவர்கள் சென்றார்கள் . சென்று அச்சிலையைத் தொட்டதும் அது சாம்பல் போல உதிர்ந்து விழுந்தது.
கோபத்தின் உச்சத்திற்குப் போன பேரரசன் பசியோடும் பட்டினியோடும் வளர்க்கப்பட்டிருந்த சிங்கங்களுக்கு  இரையாக்கு வதற்காக அதன் குகைகளுக்கு இருவரையும் இழுத்துச் செல்ல கட்டளையிட்டான் . அதன்படியே வீரர்கள் செய்தார்கள் . குகையின் கதவுகள் திறக்கப்பட்டன. சிங்கங்கள் பாய்ந்து வந்தன . பாய்ந்து வந்த சிங்கங்கள் அவர்கள் முன் மண்டியிட்டு பணிந்து நின்றன .இதை நேரில் பார்த்த புனித கலாசெருஸ் உண்மைக் கடவுளை நம்பித் தன்னோடு 12 ஆயிரம் மக்களைச் சேர்த்துத் திருமுழுக்குப் பெற்ற கிறிஸ்தவரானார்.
பிறகு இருவரையும் சிறையில் அடைத்து உணவும், நீரும் கொடுக்காது பட்டினி போட்டு கொல்லத் தயாரானார்கள் . சிறையில் இருந்தபோது வானதூதர்கள் வந்து இருவரையும் திடப்படுத்தினார்கள் . பயம் போக்கி மகிழ்ச்சி அளித்தார்கள் .அந்த அறை முழுவதும் நிறைந்திருந்த ஒளியைப் பார்த்த எண்ணற்றோர் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் ஆனார்கள் . நிறைவில் இருவரும் தலை வெட்டப்பட்டு மறைசாட்சி ஆனார்கள் .இது 120 ஆம் ஆண்டில் நடந்தது.
தங்கள் நாட்டின் முதன்மைப் பாதுகாவலராக வைத்த இவர்களிடம் மன்றாடுவதுடன் , இவர்களின் புனிதப் பொருள்களையும் ப்ரசியா மக்கள் பாதுகாத்து வருகிறார்கள்
.

ஒளிரும் இறைவனின் திரு முக தரிசனத்தை படைப்பு அனைத்திலும் தேடுவோர் அவை சொல்லும் வாழ்விற்கான இறை நற்செய்தியைக் கண்டுகொள்ள முடியும்.

14 February 2020

தூய சூசையப்பரின் புனிதர் இகிடியோ மரியா பெப்ரவரி 13

† இன்றைய புனிதர் †
(ஃபெப்ரவரி 13)

✠ தூய சூசையப்பரின் புனிதர் இகிடியோ மரியா ✠
(St. Egidio Maria of Saint Joseph)

இத்தாலிய ஒப்புக்கொள்ளப்பட்ட அருட் பணியாளர்:
(Italian professed religious)

பிறப்பு: நவம்பர் 16, 1729
டரன்ட்டோ, அபுலியா, நேப்பிள்ஸ் அரசு
(Taranto, Apulia, Kingdom of Naples)

இறப்பு: ஃபெப்ரவரி 7, 1812 (வயது 82)
நேப்பிள்ஸ், இரண்டு சிசிலிக்களின் அரசு
(Naples, Kingdom of the Two Sicilies)

ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)

முக்திபேறு பட்டம்: ஃபெப்ரவரி 5, 1888
திருத்தந்தை பதின்மூன்றாம் லியோ
(Pope Leo XIII)

புனிதர் பட்டம்: ஜூன் 2, 1996
திருத்தந்தை இரண்டாம் ஜான் பால்
(Pope John Paul II)

நினைவுத் திருநாள்: ஃபெப்ரவரி 13

பாதுகாவல்:
டரன்ட்டோ
(Taranto)
பாதிக்கப்பட்ட மக்கள்
(Ill people)
சமுதாயத்தில் இருந்து ஒதுக்கப்பட்டவர்
(Outcast people)
சிறுவர்கள்
(Children)
வேலை தேடும் மக்கள்
(People looking for work)

"ஃபிரான்ஸிஸ்கோ போஸ்டில்லோ" (Francesco Postillo) எனும் இயற்பெயர் கொண்ட புனிதர் (சூசையப்பரின்) இகிடியோ மரியா, “ஃபிரான்சிஸ்கன் இளம் துறவியர்” (Order of Friars Minor/ Order of Franciscans) சபையைச் சேர்ந்த ஒரு இத்தாலிய ஒப்புக்கொள்ளப்பட்ட அருட் பணியாளர் (Italian professed religious) ஆவார்.

"போஸ்டில்லோ" முறையான கல்வி பெறாத காரணத்தால், அவரால் குருவாக குருத்துவ அருட்பொழிவு பெற இயலவில்லை. ஆயினும் இவர் ஃபிரான்ஸிஸ்கன் சபையின் சகோதரர் ஆவார். இத்தாலியின் தெற்கு பிராந்தியத்திலுள்ள நகரங்களான “டரன்ட்டோ” மற்றும் “நேப்பிள்ஸ்” (Taranto and Naples) ஆகிய இடங்களிலுள்ள ஏழைகள் மற்றும் நோயாளிகளை பாதுகாத்து, கவனித்து, சேவை செய்வதிலும், இவர் தம்மை அர்ப்பணித்துக்கொண்டதால் மக்களிடையே நன்கு அறியப்பட்டவராக இருந்தார். அதனாலேயே மக்கள் இவருக்கு "நேப்பிள்சின் ஆறுதலளிப்பவர்" (Consoler of Naples) என்ற புனைப்பெயர் இட்டு அழைத்தனர்.

வாழ்க்கை:
"ஃபிரான்ஸிஸ்கோ போஸ்டில்லோ" (Francesco Postillo) கி.பி. 1729ம் ஆண்டு, நவம்பர் மாதம், 16ம் நாளன்று, “டரன்ட்டோ” (Taranto) நகரில் பிறந்தார். இவரது தந்தையார் பெயர், "கட்டால்டோ போஸ்டில்லோ" (Cataldo Postillo) ஆகும். தாயாரின் பெயர், "கிரேஸியா" (Grazia Procaccio) ஆகும். இவரது பெற்றோருக்கு பிறந்த நான்கு குழந்தைகளில் இவர் மூத்தவர் ஆவார். இவரது திருமுழுக்குப் பெயர், "ஃபிரான்ஸிஸ்கோ டொமெனிக்கோ அன்டோனியோ பாஸ்குயேல் போஸ்டில்லோ" (Francesco Domenico Antonio Pasquale Postillo) ஆகும்.

கி.பி. 1747ம் ஆண்டும், போஸ்டில்லோவின் தந்தையார் மரித்ததால், தமது விதவைத் தாயாரையும், தமது இளைய சகோதரர்களையும் பராமரிப்பதற்காக பணியொன்றை தேட வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு உள்ளானார். வெகு காலம் வரை இவர் ஒரு கயிறு திரிக்கும் (Rope maker) பணி செய்தார். முறையான கல்வி இல்லாத காரணத்தால் குருத்துவம் பெற இயலாததால் “நேப்பிள்ஸ்” (Naples) நகரிலுள்ள “ஃபிரான்சிஸ்கன் இளம் துறவியர் சபையின்” "ஒப்புக்கொள்ளப்பட்ட அருட் பணியாளராக" (Professed Religious) பணியாற்றினார். சபையில் சேர்வதற்காக கி.பி. 1754ம் ஆண்டு, ஃபெப்ரவரி மாதம், 27ம் நாளன்று விண்ணப்பித்த இவர், சரியாக ஒரு வருடம் கழித்து, கி.பி. 1755ம் ஆண்டு, ஃபெப்ரவரி மாதம், 28ம் தேதியன்று, "கலடோன்" (Galatone) என்னுமிடத்திலுள்ள "புனித மரியாளின்" (Convent of Santa Maria delle Grazie) பள்ளியில் பணியின் தூய்மையைக் காக்கும் பிரமாணத்தை எடுத்தார். இவர், "கடவுளின் அன்னையின் இகிடியோ" ("Egidio of the Mother of God") எனும் பெயரை தமது ஆன்மீக பெயராக ஏற்றுக்கொண்டார். ஆனால், பின்னர் அதனை "புனிதர் சூசையப்பரின் இகிடியோ மரியா" (Egidio Maria of Saint Joseph) என்று மாற்றிக்கொண்டார்.

தமது பள்ளியின் சுமை தூக்குபவராகவும், வாயில் காப்பவராகவும், பணியாற்றிய போஸ்டில்லோ, தொழு நோயாளிகளுக்காக சமையல் பணியும் செய்தார். அடிக்கடி தமது பள்ளி வளாகத்தை விட்டு வெளியே செல்லும் வழக்கமுள்ள இவர், ஒதுக்கப்பட்ட மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட மக்களுக்காக இரந்து தானமாக பொருள் பெற்று வந்தார்.

இடுப்பு கீல் வாயு, நீர்க்கோப்பு மற்றும் சுவாசகாசம் அல்லது ஆஸ்துமா நோய்களால் பாதிக்கப்பட்டிருந்த போஸ்டில்லோ கி.பி. 1812ம் ஆண்டு, நேப்பிள்ஸ் நகரில் மரணமடைந்தார்.

புனித கேத்தரின் தே ரிச்சி பிப்ரவரி - 13

பிப்ரவரி - 13

புனித கேத்தரின் தே ரிச்சி
இயேசு தம் தாயையும், அருகில் நின்ற தம் அன்புச் சீடரையும் கண்டு தம் தாயிடம். "அம்மா, இவரே உம் மகன் "என்றார் (யோவா 19:26)
1522, ஏப்ரல் 23 அன்று இத்தாலி நாட்டில், பிளாரன்ஸ் நகர் அருகில் ரொமோலா என்னும் இடத்தில் பிறந்தவர் கேத்தரின் தே ரிச்சி . இவருடைய பெற்றோர்கள் பியர் பிரான்செஸ்கொ தே ரிச்சி மற்றும் கேத்தரின் ஆவர். இவருக்கு இவரின் பெற்றோர் அலெக்ஸான்ட்ரா லக்ரசியா  என்று பெயர் வைத்தார்கள் .நடக்க ஆரம்பிக்கும் முன்பே தாய் இறந்தார் .எனவே ஃபியமெத்தா தே டைய செட்டோ என்ற வளர்ப்புத்தாய் இவரை வளர்த்தெடுத்தார்.
சிறுவயது முதலே செபம் செய்வதில் அதிக விருப்பம் கொண்டிருந்த அலெக்ஸான்ட்ரா தெய்வக் குழந்தை போலவே வாழ்ந்தார் . இதை அறிந்த வளர்ப்புத்தாய் இன்னும் அதிக அக்கறை எடுத்துக் கொண்டு அலெக்ஸான்ட்ராவை வளர்த்தார்.
அலெக்ஸான்ட்ராவிற்கு 13 வயது நடந்த போது, வீட்டிற்கு அருகில் இருந்த மடத்தில் இவருடைய தந்தை இவரைக் கொண்டு போய் விட்டார் .அந்த மடத்தில் அலெக்ஸான்ட்ராவின் அத்தை அருள் சகோதரியாக இருந்தார். மடத்தில் கல்வி கற்றுக் கொண்டிருந்த போது, இறைவன் தன்னை மேலான பணிக்கு முன் குறித்துள்ளார் என்பதை அறிந்து 14ஆம் வயதில் புனித வின்சென்டின் சாமிநாதர் மடத்தில் சேர்ந்தார்.
1536 இல் வார்த்தைப்பாடு கொடுத்தபோது கேத்தரின் என்ற தம்முடைய தாயின் பெயரைத் தமது பெயராக எடுத்துக் கொண்டார் . 
இதன் பிறகு நான்கைந்து ஆண்டுகள் கேலிப் பேச்சுக் களாலும் ,துன்புறுத்துதல்களாலும் அதிகம் அவதிப்பட்டார். ஏனென்றால் காட்சி வழியாக இருப்பிரசன்னம் உணர்ந்து இவர் ,யாராலும் எளிதில் புரிந்துகொள்ள முடியாத வரங்களுடன் விளங்கினார் .இவரின் வழிகாட்டுதல்கள் தேடி அரசர்கள் ,ஆயர்கள் , கர்தினால்கள் , பொதுநிலையினர் பலர் வர ஆரம்பித்தார்கள் . அவர்களை ,"தமது ஆன்மீகக் குழந்தைகள் " என்று அன்பொழுக அழைத்து மகிழ்ந்தார். கடிதங்கள் வாயிலாகவும் அவர்களின் ஆன்ம வழிகாட்டியாக விளங்கினார்.
கேத்தரின் 1542 ,பிப்ரவரி மாதம் இயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகளைத் தன்னிலை மறந்த ஆனந்த வெளியில் கண்டு களித்தார். இந்திகழ்வு ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை பிற்பகல் நான்கு மணி முதல் வெள்ளிக்கிழமை பிற்பகல் அதே நேரம் வரை இருந்தது .இயேசுவின்  பாடுகள் வழியாக அவரின் பாடுகளைத் தாமும் அனுபவித்து இயேசுவிற்கு ஆறுதல் சொன்னார் கேத்தரின்.

இந்நிகழ்வைப் பார்க்க ஒவ்வொரு வாரமும் கூட்டம் அலை மோதியதால் உடனிருந்து மற்ற அருள்சகோதரிகளால் மீண்டும் வேதனைக்குள்ளானார். கடைசியில் இந்நிகழ்வை நிறுத்திடுமாறு இறைவனிடம் கேத்தரின் வேண்டினார் .அதன்படி தொடர்ந்த 12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆனந்து வெள்ளி அனுபவம் நின்றது.

இந்தக்கால இடைவெளியில், நவ துறவிகளுக்குப் பயிற்றுனராக ,சபையின் துணைத்தலைவராக இருந்து பிறகு 25 வயதிலேயே சபையின் தலைவியாகவும் நியமிக்கப்பட்டார் .தமது சிறப்பான ஆளுமைத் திறத்தால் சபையைப் பாநங்குற வழிநடத்தினார். இவர் வாழ்ந்த காலத்தில் பல முக்கியப் புனிதர்கள் வாழ்ந்தனர் .அவர்களுள் பிலிப்பு நேரி மற்றும் மக்தலன் இவரிடமும் நேரில் இல்லாமலேயே காட்சி வழியாக முகமுகமாய் பேசி ஆன்மீக அருளைப் பகிர்ந்தார்.

உத்தத்தரிக்கிற நிலையில் இருக்கிற ஆன்மாக்கள்  ஈடேற்றம் பெறவும், இறைவனை அடையவும், தொடர்ந்து ஒறுத்தல் முயற்சிகள் செய்ததுடன் கழுத்தில் இரும்புச் சங்கிலியும் அணிந்து செபித்தார்.

கேத்தரின் நோயுற்று 1590, பிப்ரவரி முதல் தேதி இறந்தார் . திருத்தந்தை 12ஆம் கிளமண்ட் 1732 இல் அருளாளராக அறிவித்தார் .திருத்தந்தை 14 ஆம் ஆசிர்வாதப்பர் 1746 ஆம் ஆண்டு இவரை புனித நிலைக்கு உயர்த்தினார்

குழந்தைகளின் உண்மையான எதிர்நோக்குகளை உணர்ந்து அதனை மெருகூட்ட வளர்ப்புப் பெற்றோர் உழைக்கும்போது இறைவன் வரைந்த ஓவியமாக குழந்தைகள் மிளிர்வார்கள்.

புனித வாலன்டைன்மகிழ்ச்சியான திருமணங்களின் பாதுகாவலர் ஃபெப்ரவரி 14

† இன்றைய புனிதர் †
(ஃபெப்ரவரி 14)
புனித வாலன்டைன்
மகிழ்ச்சியான திருமணங்களின் பாதுகாவலர்
காதலைத் தட்டி எழுப்பாதீர் ; தானே விரும்பும்வரை அதைத் தட்டி எழுப்பாதீர் (இபா 3:5)
தொடக்கக்கால மறைசாட்சியாளர்கள் பற்றிய குறிப்பில் புனித வாலன்டைன் என்ற பெயரில் மூன்று நபர்கள் பிப்ரவரி 14 ஆம் தேதியில் குறிப்பிடப்படிருக்கிறார்கள் . ஒருவர் ஆப்பிரிக்கா நாட்டில் மறைப்பணியாற்றி பல்வேறு துன்பங்களை அனுபவித்து இறந்தவர். இவரைப்பற்றி மேலதிக விபரங்கள் கிடைக்கப் பெறவில்லை .

மற்ற இருவரில் ஒருவர், இன்டெரம்னா  என்ற இடத்தின் ஆயராக இருந்தவர் .மற்றவர் உரோமையில் குருவாகப் பணியாற்றியவர் .இவர்கள் இருவருமே மறைக்கலகத்தின் போது கொடூர துயரங்களையும் தாங்கிக்கொண்டு நற்செய்தி போதித்தவர்கள் . மூன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கொலையுண்டு மறைசாட்சியானவர்கள் .

உரோமையில் குருவாக இருந்த வாலன்டைன் ஒரு மருத்துவரும் கூட .இவர் பேரரசர் இரண்டாம் கிளாடியுசின் காலத்தில் நடந்த மறைக்கலகத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்குச் சேவையாற்றினார். எண்ணற்றோர் அத்துன்பக் கிண்ணத்தைப் பருகாமல் தப்பித்துச் செல்ல வழிவகுத்தார். சிறைச்சாலைகளுக்குள் சென்று ஆறுதல் மொழி கூறி ஆற்றுப் படுத்தினார்.

இதே காலத்தில் பெர்சியாவில் இருந்து புனித மாரியுஸ் குடும்பத்தினர் உரோமைக்குத் திருப்பயணமாக வந்தார்கள் .வந்தவர்கள் வாலன்டைன் செய்த அரும்பணிகளைப் பார்த்தார்கள் .சவால் நிறைந்த இந்தப் பணிக்கு  புனித மாரியுஸ் மற்றும் அவருடைய குடும்பத்தினர்  அனைவருமே வாலன்டைனுக்கு உதவியாக இருந்தார்கள் .

திருமணமான படை வீரர்களை விட திருமணம் ஆகாத வீரர்களே வீரமான முழு திறனுடன் போராடுவார்கள் என்று நினைத்த பேரரசன் வீரர்கள் திருமணம் செய்வதை தடுத்து வந்தார். இத்தடையை மீறி பல வீரர்களுக்கு வாலன்டைன் மணமுடித்து வைத்தார்.

வாலன்டைன் செய்வது யெல்லாம் கேட்டறிந்த பேரரசன் அவரைக் கைது செய்து , உரோமை அளுநனிடம் அனுப்பினார். பொறுமையாக இருந்த அளுநன் கத்தோலிக்க கிறிஸ்தவ மழையை மறுத்த உரோமை தெய்வத்தை,  பேரரசரை வணங்க கட்டளையிட்டான் . வாலன்டைன் மறுத்தார். துன்புறுத்தினான் .வாலன்டைன் உறுதியுடன் இருந்தார் . வெகுண்டெழுந்த அளுநன் கொலை செய்ய ஆணை பிறப்பித்தான் . 

வாலன்டைன்  ஏறக்குறைய 270 ஆம் ஆண்டு பிப்ரவரி 14 அன்று தலை வெட்டப்பட்டுக் கொலை செய்யப்பட்டார் . நகர வாயிலில் இருந்து அரை கிலோ மீட்டர் தள்ளி இருந்த சுரங்கக் கல்லறையில் அவரது உடலை அடக்கம் செய்தார்கள். நான்காம் நூற்றாண்டில் அந்த இடத்தை திருத்தந்தை முதலாம் ஜூலியஸ் பூமிக்கு அடியில் பேராலயம் ஒன்றை  எழுப்பினார் .அது திருத்தந்தை முதலாம் ஹனோரியஸ் என்பவரால் ஏழாம் நூற்றாண்டில் புதுப்பிக்கப்பட்டது. காலப்போக்கில் காதலர்கள் தங்கள் பாதுகாவலராகவே வாலன்டைனை நினைத்துப் போற்றினார்கள் .இன்று வரை அது தொடர்கிறது .

காதல் என்பது புனிதமான உணர்வு அதனை இச்சை க்குரியதாய் மாற்றாமல் உணர்வுப் பரிமாற்றமாக்கிக் கொண்டால் ஆனந்தம் ஆனந்தமே.